YOGA

http://yogaaranyam.com/

http://spiritualpath-ramanar.blogspot.ca/2013/10/blog-post_3.html

யோகாவில் பாலுணர்வின் முக்கியத்துவம் .
அங்கேதான் இறையருளும் .
இதுவே தமிழரின் சிவயோக வாழ்வு .
இதுவே சிவபூசையுமாகும் .
மேலும் யோகா பகுதியில் உள்ள
பாலுணர்வின் பங்கு பக்கத்தை பார்க்கவும் .

My Goga online….. Please visit here.

பாம்பு உடம்பிற்குள் வாழும் சித்தர்கள் வகை இந்து மதம், கேள்விகள் 1000, சித்தர்

 tantra ….. Please visit here.

SIVAYOGAM  Please visit here.

யோகம் தரும் யோகா  இங்கே அழுத்தவும்.

பாபாஜி வழியில் ரஜனி  இங்கே அழுத்தவும்.

பாலுணர்வின் பங்கு….. please visit here.

Breathing Therapy For more info……please  visit here.

(Raja-Yoga) The Yoga of Meditation – Please visit here.

Yoga and Meditation: Their Origins and Real Purpose – Please visit here.

Autobiography of a Yogi Please visit here.

Paramahansa Yogananda

For more info….. please visit this website.

Pranayama, திருமூலர் அருளிய பிராணாயாமம் Please visit here.

சிவ யோகம்  Please visit here.

SIMPLIFIED KUNDALINI YOGA SOCIETY Please visit here.

Tantra and Kundalini Please visit here.

Kundalini Tantra by Swami Satyananda Saraswati

Vaasiyogam  Please visit here.

Paranjothi Simplified Kundalini Yoga Centre Please visit here.

யோகாசனம்

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் – கேள்வி-பதிலும்

(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்

இங்கேஅழுத்தவும்.

வயிற்றுக்கான யோகாசனம் இங்கேஅழுத்தவும்.

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் – கேள்வி-பதிலும் …. இங்கே அழுத்தவும்.

How to Do Superbrain Yoga

Please visit here, here and here.

Hatha Yoga Pradipika Please visit here, and here.

7 responses to “YOGA

  1. Very useful in these days

  2. அற்புதப் புதையல்

    சிவவாக்கியார் பாடல்கள்

    கீழே அழுத்தவும்

    Sivavakkiyar by Veeramani Kannan

  3. குண்டலினி தந்திரா

  4. Pingback: YOGA | londonhindu

  5. Posted by Dr.VS.Suresh Phd

    Vaasiyogam
    சிவசித்தரின் வாசியோகம் Posted by Dr.VS.Suresh Phd
    ——————————————-
    பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் வழியாக வெளியே ஏறுகிற காற்றை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மூலாதாரத்தில் மேல் உள்ள முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து முதுகெலும்பின் உள்ளே உள்ள சிறு துவாரம் வழியாகச் செலுத்தினால் அதாவது சுழுமுனை வழியாகச் செலுத்தினால் மூச்சானது சிறிது சிறிதாக மேலேஏறி அண்ணாக்கில் உள்ள துவாரத்தின் வழியாகப் புருவ மத்திக்கு வந்து அங்கிருந்து உச்சிக்குச் செல்லும். இவ்வாறு ஏற்றி இறக்கிச் செய்யும் மூச்சுப் பயிற்சியே வாசியோகம் எனப்படும்.

    சுழுமுனை வாசல் திறப்பதற்கான விபரம்

    வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம்) மூன்றும் ஆகாது. எனினும் சிலேத்துமத்தின் சேர்க்கைதான் (சேத்துமம்) உச்சிக்குழிக்குக் கீழே உள்நாக்குக்கு மேலே எரிகிற பச்சை விளக்கை பங்கப் படுத்துகிறது. ஆகவே தான் சுழுமுனை வாசல் திறக்க கபம் வெளியேற வேண்டும். இதற்குக் காலைப் பிடித்தல் ஒன்றே வழி. (கால்-காற்று) காற்றில் உட்கலந்து ஊடாடி நிற்கும் நெருப்பை யோகிகள் உட்கொள்கிறார்கள். இந்தக் கனலால் கபம் அறுபடுகிறது. இந்தக் கபம் வெறும் சளி மாத்திரம் அல்ல. உடலெங்கும் ஒட்டிக் கிடக்கும் கசிறு. இதை புத்தவேதம், ” உட்கவிழ்ந்த மேகம்” என்று கூறுகிறது. ஊத்தை சடலம், உட்குழிந்த பாண்டம் என்று உடல் அழைக்கப்பட்டதற்கு “கபமே” மூலகாரணம். எனவே கபத்தை எமன் என்றே அழைக்கலாம்.

    “ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி” என்கிற திருவாசக அடியால் இதைத் தெளிவு பெறலாம். ஊன் என்பது ஊத்தைக்கசிறு, உடல் என்பதாக நாம் கொள்கிற பொருள் தவறு. இந்த ஊன் உருகுவதற்கு உள்ளொளி பெருகவேண்டும். வாசியோக சாதகர்கள் காற்றிலிருந்து (பிராணன்) நெருப்பைக் கொள்முதல் செய்கிறார்கள். இந்த நெருப்பின் நேயச் சேர்க்கையால் உள் ஒடுங்கிய பொறி உள்ளொளியாக விளக்கம் பெற்றுப் பெருகுகிறது. பிறகு உவப்பிலா ஆநந்தமாய்த் தேன் அமிர்ததாரையாக வருகிறது. இது வாசியோகத்தின் சிகர சாதனை என்று கருதலாம்.

    கபம் என்பது உடல் துரியநிலை பெற (நிர்விகல்ப சாயுச்யநிலை) இடையூறாக இருக்கிறது. மாவுப்பொருட்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும் கபம் விளைகிற கால்வாய்கள் எனலாம். “கோழை கபம் தான் யமன்!” இதை நீக்க சித்தர்களால் ஆகாது. வாசியோகக் கனலாலே தான் எரிக்க முடியும்.

    வாசியோகம் என்பது குருமுகமாக நெற்றிப் பொட்டைத் தொட்டுக் காட்டிப் பூட்டுத் திறக்க வழி செய்து, மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளிப்படுத்தாது உள்ளுக்குள்ளேயே மேலும் கீழுமாக ஓட்டிச் சமாதி நிலை எய்தச் செய்வதாகும். அவ்வாறு இடகலை, பிங்கலை வழியாக மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கில் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் கபமெனும் எமனை எட்டி உதைக்கலாம். வாசியோகத்தினால் பிராணன் (காற்று) தங்கு தடையற்றுச் சுழுமுனையை நாடிச் செல்லும். வாசியோகம் பயிலப் பயில உடலில் மறைந்துள்ள தேவையற்ற ஊன் (கபம்) மறையும். இதனால் குண்டலினியை எழுப்ப அநுபவங்களைப் பெற்று சித்தியடையலாம்.

    இரு மூக்குத் துவாரம் வழியாகப் பிராணனை வெளிவிடாமல் ஒன்று சேர்க்கும்போது புருவ மத்தியில் அக்னிகலை தோன்றும். இந்த அக்னியில் நாட்டம் வைத்தால் (மனதை நிறுத்தினால்) கோபுரத்துக்குச் செல்லும் வாயில் பூட்டான நாசிமுனை புருவமத்தி திறந்து கொள்ளும். மறக்காமல் தினம் ஒருதடவை சாதனை செய்துவரவேண்டும். மெளனத்துடன் அடங்கி அமைதியாக இருந்தால் மதிஅமுதம் சுரந்துவிடும். மனம் தூங்காமல் தூங்கி சுகம் பெறும். இந்நிலை ஏற்பட மூக்கு மார்க்கமான மற்றோர் வீட்டிற்குச் செல்லாமல் நெற்றி மார்க்கமாக மேலே செல்லவேண்டும்.
    புருவ மத்தியாம் நெற்றிக் கண் பூட்டுத் திறக்க:
    சுகாசனத்தில் அமர்ந்து தலை, கழுத்து உடல் நேராக நிமிர்த்தி, புருவமத்தியில் மனம்பதிந்து இரு இமைகளுக்கும் இடையில் நுண்ணறிவால் (உணர்வால்) பார்த்தால் அந்த இடத்தில் அசைவு காணும். பிராணனை மேலே தூக்கி உடலைத் தளர்த்தி,மனதை அந்த இடத்தில் செலுத்திப் பார். அறிவு நிற்கும் இடமாகிய புருவ மத்தியில் மனதை நிறுத்தி, காலை, மாலை 2 வேளையும் 11/2 மணி நேரம் பார்த்து வர வேண்டும். இவ்வாறு பழகி வந்தால்தான் பலன் காண முடியும். புருவ மத்தியில் உள்ள வாசல் திறக்கும்போது நீலம், பச்சை, வெள்ளை போன்ற நிறங்கள் தோன்றும்.
    —————————————————————————–
    பிராணாயாமம் என்கிற வாசியோகம்!
    நாம் யாவரும் அறிந்த ஆனால் கவனிக்க தவறிய சில விஷயங்களை பார்ப்போம்! இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. எல்லா உயிர்களிலும் உயிரை உறுதியோடு நிலைக்க செய்வது உயிர்ப்பாகிய காற்றே! காற்றை உட்கொள்வதும், வெளிவிடுவதும் சுவாசமாகும். இந்த நிலையை கூட்டியோ குறைத்தோ இயங்க வைக்கலாம்! மூச்சு பயிற்சி இதற்கு தேவை! சுவாசிக்கும் காற்றை கட்டுபடுத்துவதை பிராணாயாமம் என்று சிலரும், வாசி யோகம் என்று சித்தர்களும், அழைத்தனர்! பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு. பிராணனது சலனத்தை ஜெயிக்க முயன்ற சித்தர்கள் வாசியோகம் பயின்று சகல சித்திகளையும் பெற்றனர்! காற்றை வேகமாக உள்ளிழுத்து விடுவது மூச்சு பயிற்சி. ஆனால் பிராணாயாமத்தில் காற்றை மெதுவாக உள்ளிழுத்து, இருத்திவைத்து, பின்னர் மெதுவாக வெளி விடுவது என்று மூன்று நிலைகள் உண்டு. ஒரு கால அளவில் மூச்சு பயிற்சி கட்டுபாட்டுடன் நிகழ்வதே பிராணாயாமம் அல்லது வாசி யோகம்! வாசி யோகம் என்பது உயிர் உட்கொண்டு வெளி விடும் வாயுவை கட்டுபடுத்தும் உயர்ந்த யோகமாகும். உடல் உணவை உட்கொள்வதுபோல உயிர், காற்றை உட்கொள்கிறது. இங்கே உள்ளே உயிருக்காக இழுக்கப்படும் வாயு பிராணவாயு, வெளியே மூச்சாக வெளிவிடும் வாயு அபானவாயு. இந்த இரண்டின் போக்கையும் கட்டுபடுத்தி பிராணவாயுவில் , அபான வாயுவில் பிராண வாயுவைய்ம் கூட சித்தர்கள் கட்டுபடுத்துகின்றனர்! பிராணாயாமத்தால் உள்ளம் ஒருமை பெறுகிறது, உயிர் திண்மை பெறுகின்றது. நினைத்ததை நினைத்தபடி எய்தும் உள்ளம் அமைகிறது. உயிர்ப்பு அடிப்படையில் தான் அனைத்து உயிர்களுக்கும் ஆயுள் அமைகிறது. விரைந்து சுவாசிக்கும் உயிர்களுக்கு வயது குறைவு (ஆடு, மாடு, நாய் போன்றவை). மெல்ல உயிர்த்து, இழுத்து, இருத்தி மெல்ல மூச்சு விடும் உயிரினங்கள் நீண்ட நாட்கள் வாழ்வதை காணலாம் (மனிதன், ஆமை, யானை போன்றவை). நமது உடலிலுள்ள 72000 நரம்புகளும் பத்து நாடியில் அடங்கும். இதனை தச நாடி என்பர். இந்த பத்தும் மூன்று நாடியில் ஒடுங்கும். சந்திர நாடி மூக்கின் இடது பக்கத்தில் பொருந்தி உள்ளது. சூரிய நாடி மூக்கின் வலது பக்கம் பொருந்தி உள்ளது. சுழுமுனை நாடி புருவ நடுவில் அமைந்துள்ள-சந்திர நாடியை இடகலை என்பர். சூரிய நாடியை பிங்கலை என்பர். சந்திர நாடி – சக்தி, சூரிய நாடி சிவம், பூரணம், சூன்யம். பிராணாயாமத்தில் வெளி வாயுவை உட்கொள்வது பூரகம். அவ்வாயுவை உள்ளே நிறுத்துதல் கும்பகம், கும்பித்த வாயுவை வெளி விடுதல் ரேசகம் எனப்படும்! “ஏற்றி இறக்கி இரு காலும் பூரிக்கும் கணக்கரிவாரில்லை காற்றை பிடிக்கும் கணக்கரிவார்க்கு கூற்றை உதிக்கும் குறியதுவாமே” என்கிறார். நமது உடலை சித்தர்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர். அவை, ஆதவன், அக்னி, சந்திரன் என்பவை. த்யானத்த்தால் அக்னியை மூலாதாரத்தில் நிறைய செய்துகுண்டலினியை எழுப்புகின்றனர். இதற்கு வாசி யோகம் நிறையவே உதவி பண்ணுகிறது. குண்டலினியை உசுப்பி நாகமாக படமெடுக்க செய்து அதன் சஞ்சாரத்தை மேல் நோக்கி அனுப்பிட வாசி யோகம் உதவி செய்கிறது. இப்படி மேல் எழும்பும் குண்டலினி இந்த பயணத்தின் போது பல இதழ்களையுடைய ஆறு ஆதாரங்களிலும்
    , ஒவ்வொன்றாய் பொருந்தும்போது ஏற்ப்படும் அதிர்வு காரணமாக ஒலி தோன்றுகிறது. இந்த ஒலியை கேட்ட பின்னரே குண்டலினி சஹஸ்ராரத்தை அடைகிறது. சஹாஸ்ராரத்தில் உள்ள சிவம் எனப்படும் விந்துவுடன் நாத தத்துவமாகிய குண்டலினி அல்லது வாலை (சக்தி) இணையும். இந்த நிலையே சிவசக்தி ஐக்கியம் எனப்படும். இந்த நிலையில் சுரக்கும் ஊற்றை வானாறு என்றும், சந்திர அமிர்தம் என்றும், மாங்காய் பால் என்றும் கூறுவார். இந்த சந்திர வட்டத்து அமுத தாரையை உண்டார்க்கு உணவு தேவை இல்லை. உடம்பு உணவின்றியே அழியாமல் இருக்கும் என்று சாகா கலைக்கு சாதனமாக இந்த குண்டலி யோகத்தை கூறுகின்றனர். தூய காற்றை போலவே தூய நீரும் உடலை வளர்த்தும். நாளும் விடிகாலை பொழுதில் மூச்சு பயிற்சிக்கு முன் வெறும் வயிற்றில் எவ்வளவு தண்ணீர் அருந்த இயலுமோ அவ்வளவு அருந்த வேண்டும். தொடக்கத்தில் சிறிது சிறிதாக ஆரம்பித்து மூன்று அல்லது ஐந்து குவளை அளவு வரை அருந்தவேண்டும். இவ்வாறு விடிகாலை பொழுதில் ஒரே காலத்தில் அருந்தும் நீர் அமுதமாகி உடலை நோயின்றி நீண்ட நாள் வாழ வைக்கும். நீர் அருந்துகின்ற அளவிற்கும் நீர் அருந்துகின்ற காலத்திற்கும் ஏற்ப பொருந்தி அமுத தன்மை மிகும். இவ்விதம் செய்யும் நீர் பயிற்ச்சியால் குட்ட நோய் கூட மருந்தின்றி குணமாகும் என்று சித்த வைத்தியத்தில் கூறப்படுகிறது. வாழ்க்கை/உணவு முறை உடலின் நோயற்ற தன்மையை நிறைய அளவுக்கு பாதிக்கிறது. அரை வயிறு உணவு, கால் வயறு நீர், கால் வயிறு காற்று உலவிட சிறிய இடம் என்ற முறையில் உண்ணுதலே சிறந்தது. வயதுக்கு தக்க அளவு, செரிமான அளவு அறிந்து அரை வயிறு உண்ணுவதையே அளவறிந்த உணவாக கூறுகின்றனர். உண்ட பின்னே உறங்குவதும், நீராடுவதும், உடலுறவு கொள்வதும் உடல் கேட்டிற்கு வழிவகுக்கும். உணவில் கல், மயிர், உமி சேர்வதாலும் நோய் வரும். பனியில் திரிவதாலும், மிகுந்த உணர்ச்சிகளாலும், பால் தயிர் ஒரு சேர உண்பதாலும் நோய் வரும். தேரையர் இதை “திண்ணமி ரண்டுள்ளே சிக்கல டக்காமல் பெண்ணின்பால் ஒன்றை பெருக்காமல் உண்ணுங்கால் நீர்சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போமே பிணி” என்கிறார். அதாவது மலம், சிறுநீர் அடக்காமல், புணர்ச்சியை அதிகம் கொள்ளாமல், உண்ணும் நீரை காய்ச்சி வடித்து அருந்தலாம். நெய்யை உருக்கியே உணவில் சேர்த்தல் வேண்டும். மோரை மிகுதியாக அருந்த வேண்டும். இதை கடைபிடித்தால் நோய் நம்மை அணுகாது. சித்தர்கள், இந்த பிராணாயாம யோகத்தை நன்கு கவனமுடன், அதி ச்ரத்தையுடன் பயில வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். காரணம் எல்லா யோக சித்தியையும் அடைவதற்கு இதுவே முதல் படி. பிராணாயாமத்தில் முதலில் மன அமைதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்து பழக வேண்டும். ஆணிற்கு வலது பக்கமும் பெண்ணிற்கு இடது பக்கமும் ஆளுமை உடைய பக்கங்களாகும். முதலில் இரு நாசியிலும் மூச்சை இழுத்து விடல் வேண்டும். நான்கு அல்லது ஐந்து முறை செய்து இதயத் துடிப்பைச் சமநிலைக்கு கொண்டு வருதல் வேண்டும். பின் பிரணாயாமத்தை தொடங்க வேண்டும். சூரிய நாடியாகிய பிங்கலையில் பிராணனை இழுத்து மெல்ல நிரப்பி, விதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடைகலையில் ரேசிக்கவேண்டும். பின்னர் சந்திர நாடியாகிய இடைகளில் பிராணனை பூரித்துக் கும்பிக்கபட்ட பிராணனை பிங்கலையில் ரேசிக்கவேண்டும். சூரிய சந்திர கலைகளில் பிராண வாயு செல்லுங்கால் பிரிதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் நன்கு தத்துவங்களும் வந்து விலகும். இவை அனைத்தும் ஆகாய தத்துவத்தில் சென்று அமரும். அந்த நேரத்தில் சுவாசம் குறைந்து வரும். இதை சுவாச பந்தனம் என்பர். சுவாச பந்தனத்தின் போது ஒரு அங்குலம் குறைந்தால் யோகியானவன் இவ்வுலகத்தினின்று சுவாதீன படுவான். இரண்டு அங்குலம் குறைந்தால் – மனம் ஆனந்திக்கபட்டு ஞான செல்வம் உண்டாகும். மூன்று அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகள் அவனுக்கு புலனாகும். நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான். அயிந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான். ஆறு அங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான். எழங்குலம் குறைந்தால் அவன் சரீரம் காய சித்தி பெறுவான். எட்டங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான். ஒன்பது அங்குலம் குறைந்தால் நவ கண்டங்களில் சஞ்சரிப்பான். பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான். பதினோரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவை கண்டு உணர்வான். பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டு இருக்கிறபடியால் யோகியானவன் நெடும்காலம் அன்ன பானாதிகளை நீக்கி அசைவற்றிருப்பன். இந்த யோகத்தின் போது முதல் தீக்ஷையில் ரோம த்வாரங்கள் வழியாக கெட்ட நீர் வியர்வையாய் வழியும். இரண்டாவதில் வாத, பித்த, சிலேத்தும தோஷங்கள் நீங்கும். மூன்றாவதில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும். நான்காவதில், சர்ப்பம் தோலுரிப்பதுபோல் சரீரத்தில் தோல் உரியும். t சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகப் பஞ்சமூர்த்திகள் கோரியதை தருவார்கள். ஆறாவதில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து, தூர திருஷ்டி தெரியும். ஏழாவதில், எட்டவதில் சட்டை வெறுப்பாய் கழன்று தீபம் போல பிரகாசிக்கும், வச்யமாகும். இந்த தலைப்பு போகிற போக்கை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்! ஆனால் இவை அனைத்தும் சித்தர்கள் ஏடுகளில் சொல்லப்பட்ட உண்மைகள். அவற்றை சொல்வது மட்டும் தான் எனது வேலை. சித்த மார்கத்தில் செல்லவேண்டும் என்றால் எத்தனை விஷயங்களை பொறுத்து கொள்ளவேண்டி வரும் என்று புரியும். ஆம்! சாதாரண மனிதனாக வாழ்ந்த வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றி கொள்ளவேண்டிவரும் என்பது தெளிவாகும். இதனால் தான், பல பெரியவர்களிடம் நாம் என்ன பேச முனைந்தாலும், அவர்கள் பதில் சொல்லாமல் மௌனமாக செல்கிறார்கள். “வேற வேலை இல்லையா?” என்று கேட்டு நம்மை விரட்டுகிறார்கள். அவர்களுக்கு தெரியும். நம்மை இழுத்து விட்டால் பாதி வழியில் வருத்தப்பட்டு திரும்ப நினைக்க, முடியாமல் தவித்துவிடுவோம் என்று. முன்னரே சொன்னது போல் பெரியவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும்! அதை புரிந்துகொண்டு சரி என்று விலக தெரிய வேண்டும்! இனி தலைப்புக்கு வருவோம்! ஒன்பதாவதில் தேகம் சூரிய பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கைவல்யமாய் தேவர்கள் ஏவல் புரிவர். பத்தாவதில் தேகம் தீபம் போல பிரகாசிக்கும். பதிநோன்றாவதில் தேகத்தை வெட்ட கத்தி ஓடும். பன்னிரெண்டாவதில் சொருஒப சித்தி, அண்டத்தில் மௌனம், நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் ஏற்படாது! சுடரான சுழுமுனையில் சந்திரன் சேரில் பஞ்ச பூதமும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சேரில் ஐம்பூபுலனும் அறிவும் ஒடுங்கும். சூரியன் சந்திரன் ஒன்றாய் கூடி சுழு முனையில் ஒடுங்கில் அறிவும் தச வாயுவும் ஒடுங்கும். இந்த வாயுவை நடுநிலையிலும், மூலத்திலும், நாபியிலும், கண்டத்திலும், சுழியிடமும் ச தா நிற்கப் பெற்றவர்களே மெய் ஞானியர்! இந்த பிரணாயாமத்தை அருணோதயம் முதல் மூன்று நாழிகை வரையிலும், மத்தியானத்திலும், அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமாக இரு முகூர்த்தமும், அர்த்த ராத்திரியிலும் பிரதி தினம் நான்கு முறை செய்ய வேண்டும். திருமந்திரத்தில் இந்த பிராணாயாம சுற்றை, 16 வினாடி இழுத்து, 64 வினாடி இருத்தி, 32 வினாடி விடுதல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தச வாயுக்களில் ஒன்றான “பிராணன்” என்ற வாயுவை (உயிர் காற்றை) வெளியில்விடாதவாறு கட்டுபடுத்துவதே பிராணாயாமம்!
    —————————————————————————————————————————
    பெண்கள் வாசியோகம் பழகுவதால் ஏற்படும் நன்மைகள் குரு அவர்களின் ஆசியோடு— பெண்களும் யோகமும் பற்றி— பெண்கள் வாசியோகம் பழகுவதால் ஏற்படும் நன்மைகள்— பெண்கள் குடும்பக் கவலைகள் மூலமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்— மனஅழுத்தம் அடுத்த கட்டமாக உடல் நோய்களை அதிகரிக்கும்— உடல் நோய்கள் அவர்களை சிந்திக்கச்செய்யவிடாது— இன்றைய உலகில் பெறும்பாலான பெண்கள் மூளைக்கு வேலை கொடுக்கமுடியாமல் இயந்திரமாக வாழ்கின்றனர்— அது அவர்களை தீய வழிகளுக்கு இட்டுச்செல்கிறது— இதிலிருந்து விடுபட பெண்கள் வாசி யோகம் பழக வேண்டும்— அது அவர்களை சுறுசுறுப்பாக இயங்கச்செய்கிறது— நோயிலிருந்த விடுவிக்கிறது—-இயற்கை உணரச்செய்கிறது— குறிப்பு-1.வாசி யோகம் தொடர்ந்து குருவின் முன்னிலையில் அவர் குறிப்பிடும் காலம் வரை செய்ய வேண்டும்…2.வாசி யோக மையத்தில் கூறப்படும் உணவு கட்டுப்பாடுகள் மற்றும் உணவுக்காண கால அவகாசங்களைப் பின்பற்றினால் விரைவில் பலன் பெறலாம்.நன்றி.
    ———————————————————————————————————–

  6. Thangalukku nanrikal

Leave a comment