ஓம் மகாகணபதிஓம் -AUM MAHAGANAPATHI AUM

                                     
                                             அழகொல்லை விநாயகர்
movkundalini11
” ஓம் கணபதி ஓம்”
Lord Vinayagar drinking milk- on 12th january 2008.-அன்று  உலகம் முழுவதும்விநாயகப்பெருமான் பால் குடித்தார்  உண்மை சம்பவம் இணைக்கப்பட்டுள்ளது.–
கணபதி என்றிட கலங்கும் வல்வினை.
 
விநாயகர்( மூலாதாரம்)பெருமை–http://sivasiva.dk/sotpolivukal/vinayagar1.mp3
ஜந்து கரத்தனைவிளக்கங்கள்
ஏழு ஆதாரங்கள் என்ற சக்கரங்கள்
மூச்சுக் கலைகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே
பிள்ளையார் பாடல்–https://www.youtube.com/watch?v=RiTnh8qxZf8
ஈழத்துவிநாயகர் கோயில்
இந்தியவிநாயகர் கோயில்
 
பிள்ளையார் கோயிலில்
“ஓம்(AUM)””அகாரம் உகாரம் மகாரம்”
1) கணபதி என்றிட கலங்கும் வல்வினை 
   கணபதி என்றிட காலனும் கை தொழும்
  கணபதி என்றிட கருமம் ஆதலால் 
  கணபதி என்றிட கவலை தீருமே.
2)விநாயகர் துதி :-
வாக்குண்டாம் நல்ல் மனமுண்டாம்
மாமலரால் நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் தமக்கு.
3)திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
4)பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
5)ஜந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
6)மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா! 
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே 
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும் 
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே! 
7-பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்பும்
 இவை நான்கும் கலந்துன்க்கு நான் தருவேன்
 கோலஞ்செய் துங்க கரிமுகத்து
 தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா. -ஒளவையார்
8-விநாயகனே வேல்வினையை வேரறுக்க வல்லான்
 விநாயகனே வேட்கை த்நிவிப்பான்
 விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனும் ஆம் 
தன்மையினால் கண்ணிற் பணியின் கனிந்து -கபிலதேவர்
 9-ஜந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
 நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
10-அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த 
தொல்லை போம் போகாத் துயரம் போம் 
நல்ல் குணம் அதிகம் ஆம் அருணைக் கோபுர்த்துள் வீற்றிருக்கும் 
செல்வக்  கணபதியைக் கைத்தொழுத்க்கால்.
11-அபிராமி அந்தாதிகாப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்
தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார்
 அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. —
12-அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே
13-வாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து

வாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச
வாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை
வாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே

14-நெஞ்சக் கனகல்லூ நெகிழ்ந்துருக
தஞ்சத் தருள் சண்முகனுக் கியல்சேர் 
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே 
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம் 
அருணகிரிநாதர் – கந்தர் அநுபூதி
15-வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க 
ஞானமத ஐந்கர மூன்றுவிழி நால்வாய்
யானைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
விநாயகர் 108 போற்றி
ஓம் சக்திவிநாயகா போற்றி
ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி
ஓம் உமையவள் மதலாய் போற்றி
ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி
ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி
ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி
ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி
ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி
ஓம் பாரதம் எழுதினாய் போற்றி
ஓம் மோதகம் ஏற்பாய் போற்றி
ஓம் காவிரி தந்த கருணை போற்றி
ஓம் கஜமுகனை வென்றாய் போற்றி
ஓம் அருகம்புல் ஏற்பாய் போற்றி
ஓம் அச்சினை முறித்தாய் போற்றி
ஓம் ஐங்கரத்து ஆண்டவா போற்றி
ஓம் அல்லல் அறுப்பாய் போற்றி

Leave a comment