குமரக்கோட்டம்

0181

                                                        யாமிருக்க பயமேன்
நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும்,

குமரேசர் இருதாளும் சிலம்பும்

சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகம் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

உறுப்பு மற்றும் அணிகலன்களான இருபத்தி ஏழும் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. கந்தர் அலங்காரத்தில்        இடம்பெறுள்ள இப்பாடலைப் பாடும் அன்பர்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்?

முருகன் யார்?—

 சோதிப் பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் பொருட்டுக்
கருணை கொண்டு தனக்குத் தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு
வர அந்தச் சோதிப் பிழம்பாகிய பரம்பொருளே முருகனாகும்.

மூலாக்கினி வீசிட,  உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே … உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான …–
அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது … மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் …—

மூலாக்கினி கருத்துப் பொருளா தலின், அதனை நுண்ணிதாகக் கூறியதோடு `புகை` எனவும் கூறினார். `மேவி` என்பது ஈறுகெட்டு நின்றது,  —-http://tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=753

sivan murugan

கந்த புராணத்தில் முருகன், சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாகத் தோன்றுகிறான். அவை எந்தத் தாயின் கருப்பையிலும் கிடந்து வளர்ந்து பிறந்ததாகக் கூறப்படவில்லை. ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றி (விந்து நீரில் அல்ல) குழந்தையாய் உருவம் காட்டினான்.
முருக தோற்றத்தை (அவதாரமல்ல) கடவுள் நிலைக்குச்சற்றும் இழுக்கு வராமல் காட்டிகிறது தமிழ்க் கந்த புராணம். பாடல் வருமாறு:
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு ஓர் மேனியாக உருவம் கொண்டது – கருணையால் என்று தமிழ்க் கந்த புராணம் கூறுவதைக் காண்க. இந்தக் கந்த புராணத்தைக் காஞ்சி குமரகோட்டக் கந்தனே மெய்ப்பு (PROOF) திருத்தினான் என்று ஒரு வரலாறு கூறுவர். எனவே இது கந்தனே ஏற்ற நூல் என்று அறிகிறோம்.
சிவபெருமானின் மகன் என்பதால் சேயோன் என்று முருகனுக்குப் பெயர். சேய் என்றால் மகவு என்று பொருள். சிவபெருமானே முருகன். தனக்குத்தானே சேய் போல வந்தான். இது ஒரு விளையாடல்.
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்!
“ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால்(சிவபெருமான் கூறுவது)
என்பன போன்ற கச்சியப்பரின் கந்தபுராண வாக்குகள் இதனை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. மேலும் பரம்பொருளான பிரமமே நமக்கெல்லாம் கருணை செய்ய சோதிப் பிழம்பு என்ற நிலையில் இருந்து முருகன் என்ற உருவம் எடுத்தது என்று கூறும் மேற்காட்டில் ‘அருவமும்’ எனத் தொடங்கும் கந்த புராணப் பாட்டும் இதற்கு சான்று பகரும்.
சேயோன் என்ற தமிழ்ச் சொல்லும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவாகச் சென்று சேரும். சே என்ற ஓரெழுத்தொரு மொழிக்கு சிவப்பு, சிவந்த ஒளி என்று பொருள் என நிகண்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் பவளம் போல் மேனியை உடையனாக மணிவாசகர் கூறுகிறார்!. ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்’ என்பது அவர் வாக்கு. எனவே சேயோன் என்பது செம்மைப் பண்பைக் குறித்து சிவனையும், சிவனது மகன் அதாவது சேய் என்ற பொருளில் முருகனையும் குறிக்கும். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்தபுராணம் காட்டும் கருத்திற்கு ஏற்ப சேயோன் என்ற சொல் துணை நிற்கிறது என்று கூறலாம்.
சேயோன் என்ற இந்தச் சொல்லையே தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் எடுத்துக் கொள்கிறது. ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா வரியாகும். அதாவது உலகத்தை நான்கு வகை நிலங்களாக வகுத்து அந்தந்த நிலத்திற்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைத் தமிழ் சான்றோர்கள் எனக்கு முன்னம் இப்படிக் கூறிவைத்தனர் என்று சொல்ல வந்த தொல்காப்பியர் குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலத்தினைக் குறிக்கும் என்றும் அதற்குத் தலைவன் சேயோன் என்றும் கூறுகிறார்.
மலைக்குத் தலைவன் முருகன் என்று கூறாமல் சேயோன் என்ற சொல்லைத் தொல்காப்பியர் கொண்டதனால் சிவபெருமானையும் அந்தச் சொல்லில் அடக்கிக் காட்டினார் என்று கொள்க.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’
என்று நிலங்களின் தெய்வங்களைக் கூறியவர் வருணன், இந்திரன் என்கிற சிறு தெய்வங்களையும், மால், முருகன் என்கிற பெருந்தெய்வங்களையும்  கூறியவர் தமிழர்களால் பரம்பொருளாக வணங்கப்பட்டவரும், தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் ஆகிய சிவபெருமானைச் சொல்லாமல் விட்டால் அது குன்றக்கூறிய குறைக்கு ஏதுவாகும். எனவே சிவபெருமானையும், முருகனையும் ஒரு சேரக்குறிக்கும் சேயோன் என்ற சொல்லால் சிவபெருமானையும் அங்கே உள்ளடக்கினார் என்பதே கூர்ந்த உணர்வினரால் உணரக் கிடக்கிறது.
சிவபெருமான் இருப்பிடமும் மலை என்றே புராணங்களும் கூறுகின்றன. அவன் இருப்பது வெள்ளிமலை எனப்படும் இமயமலை. அவன் அயனுக்கும், அரிக்கும் காட்சி கொடுத்தது அண்ணாமலை. இன்னும் திரு ஈங்கோய் மலை, காளத்தி மலை, திருக்கழுக்குன்றம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவன் மலையையே வில்லாகக் கொண்டவன். இப்படி சிவபெருமானுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பு நன்றாகத் தெரிந்த ஒன்று.
மலையோடு தொடர்புள்ள சிவபெருமானது மகன் எனக் கூறப்படுகிற முருகனுக்கும் மலையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. குன்று தோறாடும் குமரன் என்று முருகனுக்குப் பெயர் உண்டு.

எனவே முருகனையும் சிவபெருமானையும் ஒரு சேரக்குறிக்கும் சொல்லான சேயோன் என்கிற சொல்லைத் தொல்காப்பியர் தேர்ந்தெடுத்தார். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்த புராணக்கருத்து கச்சியப்பர் கற்பித்ததல்ல என்றும், தொல்காப்பியர்க்கு பலகாலம் முன்னதாகவே தமிழ்ச் சான்றோர் கருத்து அது என்றும், அதைத் தொல்காப்பியரும் தழுவினார்; கச்சியப்பரும் பொன்னே போல் போற்றி வழி மொழிந்தார் என்று உணர்தல் வேண்டும்.

pranavam

எனவே, இது காறும் கூறியவற்றால் முருகன் யார் என்ற கேள்விக்கு விடை: சோதிப்பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டு கருணை கொண்டு தனக்குத்தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு வர அந்த சோதிப்பிழம்பாகிய பரம்பொருளே முருகன்.

(மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமுருகாற்றுப்படை புத்தகத்தில் இருந்து)

திருமுருகாற்றுப்படை மொத்த அடிகள் :: 317

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பத்துப்பாட்டு நூல்களில் முதலில் இருப்பது திருமுருகாற்றுப்படை. நக்கீரர் இயற்றிய நூல்.

சிவபெருமான் நேரிடையாகத் தோன்றி தன் நெற்றிக்கண் காட்டியபோதும் தமிழுக்காக, சங்கு அறுக்கும் குலத்தில் நக்கீரர் தான் வந்ததாகச் சங்கரனார் சிவனுக்கு ஏதுகுலம்? என்று தன் சாதியைச் சொல்லி நேர்மையாகச் சிவனோடு வாதாடிய தைரியசாலியான புலவர் நக்கீரர்.

முருகவழிபாட்டை குறவரினத்தவரிலிருந்து அனைத்து சமூகத்தவரும் எப்படி வழிபட்டார்கள் என்பதைச் சொல்லும் நூல் திருமுருகாற்றுப்படை.

நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஷண்முகநாதன், முருகனின், சுப்ரமண்யஸ்வாமியின் ஆறுமுகங்களில் ஒவ்வொரு முகத்திற்கும் அதற்குண்டான சிறப்பைச் சொல்லி விவரிக்கையில் இப்படிச் சொல்கிறார்:

ஒரு முகமம்

மந்திர விதியின் மரபுளி வழா அது

அந்தணர் வேள்வி ஒர்க்கும் மே

விளக்கம்: மந்திரவிதி தப்பாமல், வைதீக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கின்ற வேள்வி, ஹோமங்கள், யாகங்களை கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே ஆறுமுகனுக்கு ஒரு முகம் இருக்கிறது என்கிறார் நக்கீரர்.

சுப்பிரமணியம் பேணுவது “ப்ரமணியம்” என்பதான “வேதநெறியையே”!

சுப்பிரமணியத்தில் “சு” எனும் எழுத்து தவிர்த்து மீதம் இருப்பது “ப்ரம்மணியமே!”

தெய்வங்களில் முருகக்கடவுள் பஞ்சபூதத்தொடர்புடன் அக்கினியின் சொரூபம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி வாயுவினால் சுமக்கப்பட்டு சரவணப்பொய்கையில் ஆறுமுகனாகத் தோன்றி பூமி உயர்ந்திருக்கும் மலைகள் எங்கும் நிறைந்து இருப்பவர் முருகக்கடவுள்!

“வேதத்துக்கு முக்கியம் வேள்வி”. யாகம், வேள்விக்கு முக்கியம் “அக்கினி”. தெய்வங்களுள் சுப்ரமணியம் தான் அக்கினி.

வேத நெறி ஷீணித்தால் அதை மீட்டுப் பேணுவதே முருகக்கடவுளின் முக்கியமான செயலாக இருக்கிறது. திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம். சமணர்களோடு வாதாடி வென்றவர் திருஞான சம்பந்தர்! ஆற்றலாக இருந்து ப்ரமணியம் பேணியவர் குமாரசுவாமிக்கடவுள்!
தமிழ் வேதமான தேவரம் பாடிய திருஞானசம்பந்தர் தன்னை நான்மறை சம்பந்தன் என்றே அழைத்துக்கொள்கிறார்!
வேத நெறி தழைத்தோங்கவே திருஞான சம்பந்தரின் அவதாரம் நடந்தது என்று சொல்கிறார் சேக்கிழார்.
கந்தபுராணம்தான் இருக்கும் புராணங்களிலேயே அதிகமான சுலோகங்களைக்கொண்டது!
வால்மீகி ராமாயணம்,காளிதாசரின் குமாரசம்பவம் என்பவையும் சுப்ரமணியரின் பெருமையைச் சொல்கின்றன.

                அவற்றில் ஆறு கோயில்கள் சிறப்பானவை. அவற்றை அறுபடை வீடு என்பார்கள். அறு என்பது ஆறுதான்படை வீடு என்பது போர்த் தளவாடங்களின் பாசறை அல்ல. பாடல் பெற்ற வீடு ஆறுபடை வீடு என்னும் “வழக்கு’ திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தேராடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு தலங்கள் பற்றிய வருணனைகள் அடக்கம். இந்த ஆறும் படைவீடுகள் அல்ல. “ஆறுபடை வீடு, ஆறுபடைவீடு’ என்று பேசுவதெல்லாம் பொருளறியாது மக்கள் வழக்கில் வந்து கலந்தனவே.
படைவீடு என்றால் பாசறை. மன்னர்கள் பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுங்கால் இடையில் இளைப்பாற அமைக்கப்படுவதே படை வீடு அல்லது பாசறை. இப்போதைய வழக்குத் தமிழில் “முகாம்’ என்றும் சொல்லலாம். அந்த வகையில், முருகப் பெருமான் சூரனை அழித்திடப் போருக்குப் புறப்பட்டபோது, திருச்செந்தூரில் படை வீடு அமைத்ததாகக் கந்தபுராணம் சொல்லுகிறது. மற்ற தலங்களுக்கும் படை வீட்டுக்கும் தொடர்பு இல்லை.
ஆற்றுப்படை என்னும் சொல்லின் பொருளறியாது, படை என்பதைப் படை வீடாக்கி ஆற்றுதலை “ஆறு’ என எண்ணாக்கி ஆறுபடை வீடுகள் என்று சொல்லி வருகிறோம். குன்றுதோராடல் என்று அவற்றுள் ஒன்று. எல்லாக் குன்றுகளிலும் (மலைகளிலும்) முருகன் எழுந்தருள் ஆடல் புரிவதே அதன் பொருள். திருத்தணிகை என்பது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளுவதேயாம். அவ்வாறே திருவேரகம், சாமிமலையைக் குறிப்பதாகச் சொல்லுவதும் நம் விருப்பினால் ஆனதேயாம்.
ஆறுபடை வீடு என்னும் “வழக்கு’ திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

நன்றி – தினமணி கதிர் 

முருகா என்றழைக்க
ஆறு ஆதாரங்களும் அழகுறும்!

பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே “முருகா’ என்னும் திருநாமம்.

இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.

அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.

நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.

தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

“சரவணபவ’ என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, “குகாய நம ஓம்’ என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத் தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.

திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.

பழனி- மணிபூரகம்.

சுவாமிமலை- அநாகதம்.

திருத்தணி- விசுத்தி.

பழமுதிர்சோலை- ஆக்ஞை.

“முருகா முருகா’ என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.

முருகா சரணம்!

-டி. பூபதிராவ்

முருகன்போற்றி 1008 

http://sivasiva.dk/murugan/potti.mp3

அறுபடை வீடு கொண்ட திருமுருகா!

http://temple.dinamalar.com/news_detail.php?id=8401

1)நக்கீரதேவநாயனார் அருளிச்செய்த-திருமுருகாற்றுப்ப-டை-ஆறு படை வீடு

A- TAMILHTTP://MURUGAN.ORG/TEXTS/MURUKATRUPPADAI.HTM#.UEMAEMGPWKI

b-See also English translation by Layne Little.

c  –http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0067.pdf

திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை (கி.வா.ஜ.)

HTTP://WWW.OPENREADINGROOM.COM/WP-CONTENT/UPLOADS/2012/02/THIRUMURUGATRUPPADAI.PDF

2)அருணகிரிநாதர் நூல்கள்-கந்தர் அலங்காரம்-கந்தர் அந்தாதி-கந்தர் அனுபூதி

http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/kanthar_anupoothi.html#.UEMKzcGPWKI

4)அருணகிரிநாதர் நூல்கள் – சேவல் விருத்தம்

5)அருணகிரிநாதர் நூல்கள் – திருவகுப்பு   http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/thiruvaguppu/index.html#.UEMPBMGPWKI

6)யாமிருக்க பயமேன்

http://yamirukabayamen.blogspot.co.uk/2011/02/blog-post_5203.html

7)ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் –ஸ்ரீகுமரகுருபர ஸ்வாமிகள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்த குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத் திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர் செந்தில் வேலனிடமே வேண்டி வணங்க, முருகனின் இலை விபூதிப் பிரசாதம் பெற்றுப் பின் பேசும் திறனை அடைந்தவர். –நூல்கள்-மீனாட்சி அம்மை பிள்ளைத்- தமிழ்-கந்தர் கலிவெண்பா–மதுரைக் கலம்பகம்–நீதிநெறி விளக்கம்–திருவாரூர் நான்மணிமாலை–முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்–சிதம்பர மும்மணிக் கோவை–சிதம்பரச் செய்யுள் கோவை–பண்டார மும்மணிக் கோவை–காசிக் கலம்பகம்–சகல கலாவல்லி மாலை–காசித் துண்டி விநாயகர் பதிகம்—மதுரை மீனாட்சி அம்மை குறம்–கயிலைக் கலம்பகம்–மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை–தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை-ஆகிய பதினாறு நூல்களைக் குமரகுருபரர் படைத்துள்ளார். இவற்றுள் கயிலைக் கலம்பகம், காசித் துண்டி விநாயகர் பதிகம் ஆகிய நூல்கள் கிடைக்கவில்லை.

தொடரும்………….

யாமிருக்க பயமேன்
 நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும் சிலம்பும்

சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகம் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
உறுப்பு மற்றும் அணிகலன்களான இருபத்தி ஏழும் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. கந்தர் அலங்காரத்தில்  இடம்பெறுள்ள இப்பாடலைப் பாடும் அன்பர்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும்.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்?
முருகன் யார்?
சோதிப் பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் பொருட்டுக் கருணை கொண்டு தனக்குத் தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு வர அந்தச் சோதிப் பிழம்பாகிய பரம்பொருளே முருகனாகும்.
மூலாக்கினி வீசிட,  உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே … உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான …–
அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது … மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் …—
மூலாக்கினி கருத்துப் பொருளா தலின், அதனை நுண்ணிதாகக் கூறியதோடு `புகை` எனவும் கூறினார். `மேவி` என்பது ஈறுகெட்டு நின்றது, 
கந்த புராணத்தில் முருகன், சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாகத் தோன்றுகிறான். அவை எந்தத் தாயின் கருப்பையிலும் கிடந்து வளர்ந்து பிறந்ததாகக் கூறப்படவில்லை. ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றி (விந்து நீரில் அல்ல) குழந்தையாய் உருவம் காட்டினான்.
முருக தோற்றத்தை (அவதாரமல்ல) கடவுள் நிலைக்குச்சற்றும் இழுக்கு வராமல் காட்டிகிறது தமிழ்க் கந்த புராணம். பாடல் வருமாறு:
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு ஓர் மேனியாக உருவம் கொண்டது – கருணையால் என்று தமிழ்க் கந்த புராணம் கூறுவதைக் காண்க. இந்தக் கந்த புராணத்தைக் காஞ்சி குமரகோட்டக் கந்தனே மெய்ப்பு (PROOF) திருத்தினான் என்று ஒரு வரலாறு கூறுவர். எனவே இது கந்தனே ஏற்ற நூல் என்று அறிகிறோம்.
சிவபெருமானின் மகன் என்பதால் சேயோன் என்று முருகனுக்குப் பெயர். சேய் என்றால் மகவு என்று பொருள். சிவபெருமானே முருகன். தனக்குத்தானே சேய் போல வந்தான். இது ஒரு விளையாடல்.
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்!
“ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால்(சிவபெருமான் கூறுவது)
என்பன போன்ற கச்சியப்பரின் கந்தபுராண வாக்குகள் இதனை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. மேலும் பரம்பொருளான பிரமமே நமக்கெல்லாம் கருணை செய்ய சோதிப் பிழம்பு என்ற நிலையில் இருந்து முருகன் என்ற உருவம் எடுத்தது என்று கூறும் மேற்காட்டில் ‘அருவமும்’ எனத் தொடங்கும் கந்த புராணப் பாட்டும் இதற்கு சான்று பகரும்.
சேயோன் என்ற தமிழ்ச் சொல்லும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவாகச் சென்று சேரும். சே என்ற ஓரெழுத்தொரு மொழிக்கு சிவப்பு, சிவந்த ஒளி என்று பொருள் என நிகண்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் பவளம் போல் மேனியை உடையனாக மணிவாசகர் கூறுகிறார்!. ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்’ என்பது அவர் வாக்கு. எனவே சேயோன் என்பது செம்மைப் பண்பைக் குறித்து சிவனையும், சிவனது மகன் அதாவது சேய் என்ற பொருளில் முருகனையும் குறிக்கும். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்தபுராணம் காட்டும் கருத்திற்கு ஏற்ப சேயோன் என்ற சொல் துணை நிற்கிறது என்று கூறலாம்.
சேயோன் என்ற இந்தச் சொல்லையே தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் எடுத்துக் கொள்கிறது. ‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா வரியாகும். அதாவது உலகத்தை நான்கு வகை நிலங்களாக வகுத்து அந்தந்த நிலத்திற்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைத் தமிழ் சான்றோர்கள் எனக்கு முன்னம் இப்படிக் கூறிவைத்தனர் என்று சொல்ல வந்த தொல்காப்பியர் குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலத்தினைக் குறிக்கும் என்றும் அதற்குத் தலைவன் சேயோன் என்றும் கூறுகிறார்.
மலைக்குத் தலைவன் முருகன் என்று கூறாமல் சேயோன் என்ற சொல்லைத் தொல்காப்பியர் கொண்டதனால் சிவபெருமானையும் அந்தச் சொல்லில் அடக்கிக் காட்டினார் என்று கொள்க.
‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’
என்று நிலங்களின் தெய்வங்களைக் கூறியவர் வருணன், இந்திரன் என்கிற சிறு தெய்வங்களையும், மால், முருகன் என்கிற பெருந்தெய்வங்களையும்  கூறியவர் தமிழர்களால் பரம்பொருளாக வணங்கப்பட்டவரும், தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் ஆகிய சிவபெருமானைச் சொல்லாமல் விட்டால் அது குன்றக்கூறிய குறைக்கு ஏதுவாகும். எனவே சிவபெருமானையும், முருகனையும் ஒரு சேரக்குறிக்கும் சேயோன் என்ற சொல்லால் சிவபெருமானையும் அங்கே உள்ளடக்கினார் என்பதே கூர்ந்த உணர்வினரால் உணரக் கிடக்கிறது.
சிவபெருமான் இருப்பிடமும் மலை என்றே புராணங்களும் கூறுகின்றன. அவன் இருப்பது வெள்ளிமலை எனப்படும் இமயமலை. அவன் அயனுக்கும், அரிக்கும் காட்சி கொடுத்தது அண்ணாமலை. இன்னும் திரு ஈங்கோய் மலை, காளத்தி மலை, திருக்கழுக்குன்றம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவன் மலையையே வில்லாகக் கொண்டவன். இப்படி சிவபெருமானுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பு நன்றாகத் தெரிந்த ஒன்று.
மலையோடு தொடர்புள்ள சிவபெருமானது மகன் எனக் கூறப்படுகிற முருகனுக்கும் மலையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. குன்று தோறாடும் குமரன் என்று முருகனுக்குப் பெயர் உண்டு.
எனவே முருகனையும் சிவபெருமானையும் ஒரு சேரக்குறிக்கும் சொல்லான சேயோன் என்கிற சொல்லைத் தொல்காப்பியர் தேர்ந்தெடுத்தார். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்த புராணக்கருத்து கச்சியப்பர் கற்பித்ததல்ல என்றும், தொல்காப்பியர்க்கு பலகாலம் முன்னதாகவே தமிழ்ச் சான்றோர் கருத்து அது என்றும், அதைத் தொல்காப்பியரும் தழுவினார்; கச்சியப்பரும் பொன்னே போல் போற்றி வழி மொழிந்தார் என்று உணர்தல் வேண்டும்.
எனவே, இது காறும் கூறியவற்றால் முருகன் யார் என்ற கேள்விக்கு விடை: சோதிப்பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டு கருணை கொண்டு தனக்குத்தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு வர அந்த சோதிப்பிழம்பாகிய பரம்பொருளே முருகன்.
(மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமுருகாற்றுப்படை புத்தகத்தில் இருந்து)
 
திருமுருகாற்றுப்படை மொத்த அடிகள் :: 317
-தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பத்துப்பாட்டு நூல்களில் முதலில் இருப்பது திருமுருகாற்றுப்படை. நக்கீரர் இயற்றிய நூல்.
சிவபெருமான் நேரிடையாகத் தோன்றி தன் நெற்றிக்கண் காட்டியபோதும் தமிழுக்காக, சங்கு அறுக்கும் குலத்தில் நக்கீரர் தான் வந்ததாகச் சங்கரனார் சிவனுக்கு ஏதுகுலம்? என்று தன் சாதியைச் சொல்லி நேர்மையாகச் சிவனோடு வாதாடிய தைரியசாலியான புலவர் நக்கீரர்.
முருகவழிபாட்டை குறவரினத்தவரிலிருந்து அனைத்து சமூகத்தவரும் எப்படி வழிபட்டார்கள் என்பதைச் சொல்லும் நூல் திருமுருகாற்றுப்படை.
நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஷண்முகநாதன், முருகனின், சுப்ரமண்யஸ்வாமியின் ஆறுமுகங்களில் ஒவ்வொரு முகத்திற்கும் அதற்குண்டான சிறப்பைச் சொல்லி விவரிக்கையில் இப்படிச் சொல்கிறார்:
ஒரு முகமம்மந்திர விதியின் மரபுளி வழா அது

அந்தணர் வேள்வி ஒர்க்கும் மே

விளக்கம்: மந்திரவிதி தப்பாமல், வைதீக சம்பிரதாயப்படி பிராமணர்கள் செய்கின்ற வேள்வி, ஹோமங்கள், யாகங்களை கண்டு இன்புற்று அவற்றை வளர்க்கவே ஆறுமுகனுக்கு ஒரு முகம் இருக்கிறது என்கிறார் நக்கீரர்.
சுப்பிரமணியம் பேணுவது “ப்ரமணியம்” என்பதான “வேதநெறியையே”!சுப்பிரமணியத்தில் “சு” எனும் எழுத்து தவிர்த்து மீதம் இருப்பது “ப்ரம்மணியமே!”

தெய்வங்களில் முருகக்கடவுள் பஞ்சபூதத்தொடர்புடன் அக்கினியின் சொரூபம்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாகத் தோன்றி வாயுவினால் சுமக்கப்பட்டு சரவணப்பொய்கையில் ஆறுமுகனாகத் தோன்றி பூமி உயர்ந்திருக்கும் மலைகள் எங்கும் நிறைந்து இருப்பவர் முருகக்கடவுள்!
“வேதத்துக்கு முக்கியம் வேள்வி”. யாகம், வேள்விக்கு முக்கியம் “அக்கினி”. தெய்வங்களுள் சுப்ரமணியம் தான் அக்கினி.
வேத நெறி ஷீணித்தால் அதை மீட்டுப் பேணுவதே முருகக்கடவுளின் முக்கியமான செயலாக இருக்கிறது. திருஞான சம்பந்தர் முருகப்பெருமானின் அவதாரம். சமணர்களோடு வாதாடி வென்றவர் திருஞான சம்பந்தர்! ஆற்றலாக இருந்து ப்ரமணியம் பேணியவர் குமாரசுவாமிக்கடவுள்!
தமிழ் வேதமான தேவரம் பாடிய திருஞானசம்பந்தர் தன்னை நான்மறை சம்பந்தன் என்றே அழைத்துக்கொள்கிறார்!
வேத நெறி தழைத்தோங்கவே திருஞான சம்பந்தரின் அவதாரம் நடந்தது என்று சொல்கிறார் சேக்கிழார்.
கந்தபுராணம்தான் இருக்கும் புராணங்களிலேயே அதிகமான சுலோகங்களைக்கொண்டது!
வால்மீகி ராமாயணம்,காளிதாசரின் குமாரசம்பவம் என்பவையும் சுப்ரமணியரின் பெருமையைச் சொல்கின்றன.

                அவற்றில் ஆறு கோயில்கள் சிறப்பானவை. அவற்றை அறுபடை வீடு என்பார்கள். அறு என்பது ஆறுதான்படை வீடு என்பது போர்த் தளவாடங்களின் பாசறை அல்ல. பாடல் பெற்ற வீடு ஆறுபடை வீடு என்னும் “வழக்கு’ திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தேராடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு தலங்கள் பற்றிய வருணனைகள் அடக்கம். இந்த ஆறும் படைவீடுகள் அல்ல. “ஆறுபடை வீடு, ஆறுபடைவீடு’ என்று பேசுவதெல்லாம் பொருளறியாது மக்கள் வழக்கில் வந்து கலந்தனவே.
படைவீடு என்றால் பாசறை. மன்னர்கள் பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுங்கால் இடையில் இளைப்பாற அமைக்கப்படுவதே படை வீடு அல்லது பாசறை. இப்போதைய வழக்குத் தமிழில் “முகாம்’ என்றும் சொல்லலாம். அந்த வகையில், முருகப் பெருமான் சூரனை அழித்திடப் போருக்குப் புறப்பட்டபோது, திருச்செந்தூரில் படை வீடு அமைத்ததாகக் கந்தபுராணம் சொல்லுகிறது. மற்ற தலங்களுக்கும் படை வீட்டுக்கும் தொடர்பு இல்லை.
ஆற்றுப்படை என்னும் சொல்லின் பொருளறியாது, படை என்பதைப் படை வீடாக்கி ஆற்றுதலை “ஆறு’ என எண்ணாக்கி ஆறுபடை வீடுகள் என்று சொல்லி வருகிறோம். குன்றுதோராடல் என்று அவற்றுள் ஒன்று. எல்லாக் குன்றுகளிலும் (மலைகளிலும்) முருகன் எழுந்தருள் ஆடல் புரிவதே அதன் பொருள். திருத்தணிகை என்பது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளுவதேயாம். அவ்வாறே திருவேரகம், சாமிமலையைக் குறிப்பதாகச் சொல்லுவதும் நம் விருப்பினால் ஆனதேயாம்.
ஆறுபடை வீடு என்னும் “வழக்கு’ திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
நன்றி – தினமணி கதிர்
முருகா என்றழைக்க
ஆறு ஆதாரங்களும் அழகுறும்!

பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே “முருகா’ என்னும் திருநாமம்.

இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.
அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.
வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.

தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

“சரவணபவ’ என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, “குகாய நம ஓம்’ என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத் தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.

திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.

பழனி- மணிபூரகம்.

சுவாமிமலை- அநாகதம்.

திருத்தணி- விசுத்தி.

பழமுதிர்சோலை- ஆக்ஞை.

“முருகா முருகா’ என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.

முருகா சரணம்!

-டி. பூபதிராவ்

Leave a comment