பன்னிருதிருமுறைகள்/தேவாரங்கள்/THEVAARAM.ORG

  பஞ்ச தோத்திரம் -பஞ்சபுராணத்தொகுப்பு

unnamed
unnamed-1
திருச்சிற்றம்பலம்
தேவாரங்கள் எனப்படுபவை சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்,திருநாவுக்கரசு நாயனார்சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மாரால் தமிழிற் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். முதல் இருவரும் கிபி 7ம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
7ம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம்சமணம்ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரானசீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, “தோடுடைய செவியன்” என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார்.
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் வாரம்என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர்.
திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். “பித்தா பிறைசூடி” என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம்.
10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பிஎன்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார்.-கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நால்வர் வாழ்த்து
கோயில்களில் மட்டுமல்ல எப்பொழுதும் பஞ்ச புராணம் கீழ்வரும் வரிசைபடியே அமையும்.
 தேவாரம்-. -திருவாசகம்-.. திருவிசைப்பா………… திருப்பல்லாண்டு- ……….. பெரியபுராணம்—திருப்புகழ் —
வாழ்த்து(வான்முகில்.)
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
விளக்கம்:இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும். சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றிஇந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும். பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி 

இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்.”கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே..“என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 

திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.

இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 

உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.

 
 
 
1-முதல் திருமுறை- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
7)http://vkappanmyblog.wordpress.com/2012/03/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-     %E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE/
2-இரண்டாம் திருமுறை:- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
 
 
3- மூன்றாம் திருமுறை: – திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
 
4-நான்காம் திருமுறை :-    திருநாவுக்கரசு நாயனார் பாடியுள்ள தேவாரப் பதிகங்களின் ஒரு தொகுப்பாகும்.
5-ஐந்தாம் திருமுறை :- திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் –
தேவாரப்பதிகங்களின் ஒரு தொகுப்பாகும்.
தேவாரப் பதிகங்களின் தொகுப்பாகும்.
8-எட்டாம் திருமுறை :- பன்னிரு திருமுறைகளில்மாணிக்கவாசகர்  பாடியருளிய திருவாசகம்திருக்கோவையார்
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
திருவாசகம்,திருக்கோவையார்
9-ஒன்பதாம் திருமுறை 
சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பாதிருப்பல்லாண்டுஎன இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.
ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:

சிறு குறிப்புக்கள்

  1. சிதம்பரம் -16
  2. கங்கைகொண்ட சோழேச்சரம் – 1
  3. திருக்களந்தை ஆதித்தேச்சரம் – 1
  4. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் – 1
  5. திருமுகத்தலை – 1
  6. திரைலோக்கிய சுந்தரம் – 1
  7. திருப்பூவணம் – 1
  8. திருச்சாட்டியக்குடி – 1
  9. தஞ்சை பெருங்கோவில் – 1
  10. திருவிடைமருதூர் – 1
  11. திருவாரூர் -1
  12. திருவீழிமிழழை – 1
  13. திருவாவடுதுறை – 1
  14. திருவிடைக்கழி – 1
                சேந்தனார் – 47
               கருவூர்த் தேவர் – 105
               கண்டராதித்தர் – 10
               வேணாட்டடிகள் – 10
               புருடோத்தம நம்பி – 22
               சேதிராயர்
               சேந்தனார் – 10
புராணங்கள் / தேவாரப் பதிகங்கள் / நாயன்மார்கள்/ஆழ்வார்கள்
பத்தாம் திருமுறை :- 
பன்னிரு திருமுறைகளில் திருமூலர்பாடிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தை உள்ளடக்கியுள்ளது.
 
 
 
பதினொன்றாம் திருமுறை 
001 திருவாலவாயுடையார்-        002 மூத்த திருப்பதிகம் -1-
003 திருஇரட்டைமணிமாலை    004 அற்புதத் திருவந்தாதி
005 சேத்திரத் திருவெண்பா          006 பொன்வண்ணத் தந்தாதி
007 திருவாரூர் மும்மணிக்கோவை- 008 திருக்கைலாய ஞானஉலா
009 கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி 010 திருஈங்கோய்மலை எழுபது
011 திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  012 திருஎழுகூற்றிருக்கை
013 பெருந்தேவபாணி                 014 கோபப் பிரசாதம்  015 கார் எட்டு
016 போற்றித் திருக்கலிவெண்பா   017 திருமுருகாற்றுப்படை
018 திருக்கண்ணப்ப தேவர் திருமறம்  018 திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
020 மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
பன்னிரண்டாம் திருமுறை 
பன்னிரு திருமுறைகளில் சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தை உள்ளடக்கியுள்ளது. சேக்கிழார்நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவராதலால், நம்பியாண்டார் நம்பியால் பகுக்கப்பட்ட ஆரம்பத் திருமுறைப் பகுப்பில் இது உள்ளடக்கப்படவில்லை. பிற்காலத்தில் இது பதினொரு திருமுறைகளுடன் பன்னிரண்டாவதாகச் சேர்க்கப்பட்டது.
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்
பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்
கும்பகோணம் – திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது
 பைரவரைப் போற்றி ஒரே ஒரு தேவாரப்பதிகம் மட்டுமே
பாடப்பட்டு உள்ளது. அதை திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
“விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கைதரித்தோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டுஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தாள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே”
 

திருத்தணி சுவாமிநாதன் பாடிய தேவாரப்பாடல்கள்

கோளறு திருப்பதிகம்
 

ttp://www.mediafire.com/?7ll2kzpcd6jd9


 
 
 
 
 
 
 
திருஞானசம்பந்தர் தேவாரம் 
 
சிவ வழிபாடு 
 
வழிபாட்டுப் பாடல்கள்

http://sivasiva.in/tamil/?page_id=68

திருமுறை ஓதுதல் & பஜனைப் பாடல்கள்

http://www.kands-group.com/ticinomurugan/?p=154

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
 
 
கோளறு பதிகம் – வேய்உறு தோளிபங்கன்
Seergazhi Govindarajan -சீர்காழி கோவிந்தராஜன்) .-
 
 
 
 
 
 
 
 
 

http://www.kands-group.com/ticinomurugan/?p=154

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்

பிடியா திருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை

மறவா திருக்க வேண்டும்

மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற

வாழ்வுனான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்

தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வ மணியே

See more at: http://rightmantra.com/?p=9023#sthash.0vHC9TDb.dpuf

http://www.shaivam.org/siddhanta/

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை…… Please visit here.

Devotional Tamil mp3 songs (devaram, thirumuRai)

திருமுறை பக்திப் பாடல்கள்……. please visit here.

 

 

Thevaram, Thevaram songs, Thevaram song, Thevaram music, Thevaram videos, Thevaram movies, Thevaram movie, Thevaram film, Thevaram lyrics, Hindi Lyrics, Hindi Songs, Indian Songs, Indian Music

Please visit here.

ஆழ்வார்கள்  please visit here.

தேவாரப் பதிகங்கள்

குருஞான சம்பந்தர் அருளிய  சொக்கநாத வெண்பா Please visit here.

தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் ….. PLEASE VISIT HERE & HERE.

சுந்தரமூர்த்தி நாயனார் சரிதம் – ஒளி சித்திர வடிவில் சேக்கிழார் பெருமான் சரிதம் – காட்சியாக 63 Nayanmaars – 63 நாயன்மார்கள் Please visit here.

திருமுறை 8/ திருச்சிற்றம்பலக் கோவையார் .. இங்கேஅழுத்தவும்.

திருச்சிற்றம்பலக் கோவையார் …. இங்கேஅழுத்தவும்.

திருவருட்பா /திருமுறை 2.1 (பாடல்கள்571-1006 ) … இங்கேஅழுத்தவும்.

திருவருட்பா /திருமுறை 1 (பாடல்கள் 1-570)இங்கேஅழுத்தவும்.

திருமந்திரம் … இங்கேஅழுத்தவும்.

திருமந்திரம் – 2 (3-6 தந்திரங்கள்) … இங்கேஅழுத்தவும்.

திருமந்திரம் – 3 (7-9 தந்திரங்கள்) … இங்கேஅழுத்தவும்.

திருவாசகம்

பன்னிரு திருமுறைகள்

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

முதல் திருமுறை இங்கேஅழுத்தவும், இங்கேயும்அழுத்தவும்.

இரண்டாம் திருமுறை இங்கே அழுத்தவும்இங்கேயும் அழுத்தவும்.

மூன்றாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,

இங்கேயும் அழுத்தவும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

நான்காம் திருமுறை இங்கேஅழுத்தவும்,

இங்கேயும் அழுத்தவும்.

ஐந்தாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,

இங்கேயும் அழுத்தவும்.

ஆறாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,

இங்கேயும் அழுத்தவும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

ஏழாம் திருமுறை இங்கேஅழுத்தவும்,

இங்கேயும் அழுத்தவும்.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார்

எட்டாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.

திருவிசைப்பா, திருப்பல்லாண்டு

ஒன்பதாம் திருமுறை  இங்கேஅழுத்தவும்.

திருமூலர் அருளிய திருமந்திரம்

பத்தாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.

பன்னிரு அருளாளர்கள் அருளிய

பதினோராம் திருமுறை இங்கேஅழுத்தவும்.

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.
பன்னிரண்டாம் திருமுறை இங்கேஅழுத்தவும்.

பன்னிரு திருமுறை – 1,254 தலைப்புகள், 18,246 பாடல்கள்

திருத்தணி சுவாமிநாதன் குரலிசையை,
திருவாசகம் முழுவதற்கும் (மொத்தம் 658 பாடல்கள்) கேட்கலாம்.

தருமபுரம் ஞானப்பிரகாசம் குரலிசையை,
10ஆம் திருமுறை, திருமந்திரம், விநாயகர் வணக்கம் (1), இரண்டாம் தந்திரம் 1. அகத்தியம் (333) தொடக்கம் 23. மகேசுர நிந்தை கூடாமை (530) வரை 193 பாடல்களுக்குக் கேட்கலாம். (மொத்தம் 3,000 பாடல்கள்).

For more…….please visit here.

பன்னிருதிருமுறை/தேவாரம்/THEVAARAM.ORG

1-http://www.thevaaram.org/ta/index.php

 
 
 

நாயன்மார்கள்

திருகயிலாய புனித யாத்திரை Please visit here.

திருமுறைகளின் தாற்பரியம்

63 Nayanmar Please visit here, and  here.

Sundharar Tevaram Please visit here.

 

கோளறு பதிகம் – வேய்உறு தோளிபங்கன்

Seergazhi Govindarajan -சீர்காழி கோவிந்தராஜன்) .-

 
 
 
 
 
 
 
 
 

 

 

வான்முகில் வழாது பெய்க!

மலிவளம் சுரக்க!
மன்னன் கோன் முறை அரசுசெய்க
! குறைவிலாது உயிர்கள் வாழ்க !
 நான்மறை அறங்கள் ஓங்க !
நல்தவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவநீதி
விளங்குக உலகம் எல்லாம்
.  – கச்சியப்ப சிவாச்சாரியார்
-தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
 திருச்சிற்றம்பலம்

3 responses to “பன்னிருதிருமுறைகள்/தேவாரங்கள்/THEVAARAM.ORG

  1. devarathirumurai

    ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி
    அன்புடன்
    வேல்தர்மா
    ஜெர்மனி

    தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
    முகவரி:
    http://www.devarathirumurai.wordpress.com

    http://www.devarathirumurai.blogspot.com

    தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

  2. Pingback: தேவாரப் பதிகங்கள் « alavayampathy

  3. Subramaniam Muthuccumarasamy

    Intha saiva thondu alappariyathu. Meelum valara emathu vaalzththukkal.Muthuccumarasamy Merton Tamil School London

Leave a comment