இராசி பலன்–பிறந்தநாள்குறிப்பெழுதல்-Panchangam-மேலும்பல

unnamed

                                                    திருச்சிற்றம்பலம்                       
சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்?
நாளும் கோளும் அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா
.கோளறு பதிகம்–
“தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.”—
 
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன் (வழிபட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம், போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
unnamed
முருகன் யார்?—
 சோதிப் பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்புரியும் பொருட்டுக்
கருணை கொண்டு தனக்குத் தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு
வர அந்தச் சோதிப் பிழம்பாகிய பரம்பொருளே முருகனாகும்.
கந்தர் அலங்காரம்
நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும்,

குமரேசர் இருதாளும் சிலம்பும்

சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகம் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே—அருணகிரி நாதர்
 உறுப்பு மற்றும் அணிகலன்களான இருபத்தி ஏழும் நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. கந்தர் அலங்காரத்தில்
        இடம்பெறுள்ள இப்பாடலைப் பாடும் அன்பர்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும்.
இந்தப் பாடல் திருமுருகாற்றுப்படை வெண்பாக்களுள் ஒன்று! — நக்கீரர் 
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!
இந்த எளிமையான பாட்டுக்கு பொருள்? 
கொஞ்சமாப் பார்க்கலாமா? 
எளிமையான பாட்டுக்கு ஏகாந்தமான அர்த்தம் இருக்கு! 
அதைத் தெரிஞ்சிக்கிட்டீங்க-ன்னா இந்தப் பாடல் அப்படியே உங்க கூடவும் ஒட்டிக் கொள்ளும்! 
என் ஆசை முருகன் என்னுடன் ஒட்டிக் கொண்டதைப் போலவே! 
 * அஞ்சி பயப்படும் போது அஞ்சும் முகம் தோன்றினால், 
ஆறுமுகம் தோன்றும்! * கடுமையான (மனப்) போராட்டத்தில், “அஞ்சேல்” (பயப்படாதே) என்று வேல் தோன்றும்! 
* நெஞ்சில் ஒரு கால் நினைத்தால், 
இரு காலும் தோன்றும்! * தோன்றுமா? என்ன தோன்றும்? =
 விடிவு தோன்றும்! விடி-வடி வேலன் தோன்றும்! *
 யார் முன்னே தோன்றும்? =
 முருகாஆஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!  
இதான் பாட்டுக்கு மேலோட்டமான பொருள்! ஆனா…இவ்வளவு தானா?  இதுவா பயத்தைப் போக்கவல்ல பாட்டு? 
 
மூலாக்கினி வீசிட,  உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே … உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான …–
அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, அசைவுறாது பேராத விதமும் மேவி ஓவாது … மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் …—
மூலாக்கினி கருத்துப் பொருளா தலின், அதனை நுண்ணிதாகக் கூறியதோடு `புகை` எனவும் கூறினார். `மேவி` என்பது ஈறுகெட்டு நின்றது,  —-http://tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=118&pno=753
சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்?
 
இராசிச் சக்கரம்
சாதகக் குறிப்பில் காணும் இராசிச் சக்கர வரைபடங்கள் பல்வேறு வகையில் வரையப் படுகின்றன. மேற்கத்திய சோதிடர்கள் இதனை வட்டமாக வரைவார்கள்.இந்தியாவில் சதுர வடிவில் வரைவதே வழக்கமானாலும் தென்னிந்திய, வட இந்திய வரைபடங்களிடையே வேறுபாடுகளைக் காணலாம். மேற் கூறப்பட்ட மூன்று வகையான இராசிச் சக்கர அமைப்புகளையும் கீழேயுள்ள படங்கள் காட்டுகின்றன
1-மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
2-தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
3-வட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
                                          1-மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
படிமம்:Horo West.jpg
2-தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்படிமம்:Horo South.jpg3-வட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்

படிமம்:Horo North.jpg

வசந்தத்தை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு
ஆங்கில மொழியில் மிகவிரைவில் இறுபதியில் இணைக்கப்படும்
சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட குறிப்புகளில் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன. ஒரிடத்திலும் தை மாதத்தைத் தலை ராசி என்றோ, தலை மாதம் அல்லது முதல் மாதம் என்றோ சொல்லவில்லை. இடைக்காட்டுச் சித்தர் அவர்கள் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின் பற்றி வருகிறோம். அவரும் சித்திரை தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார். சித்தர்களுக்குத் தெரியாததா நமக்குத் தெரிந்து விட்டது?
யோகத்தால்  ஞானமடைந்து, 
 
ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள்
 
 காலத்தையும் வெண்றார்கள்- #
 
நம் முண்ணோர்கள்
 
அவர்கலிணால் அருளப்பட்டதே
 
 சித்திரை வருடப்பிறப்பாகும்
 
 அவர்கள் கொடுத்துள்ள வழி முறையிலிருந்து நாம் பிறழலாமா?
 
 எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு.
 சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? 
சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு. 
 தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்
ஏணையை இணத்தவர்கலும் தங்கல் நாட்டின் வரவு செலவு திட்டத்தின் முதற்படியாணா TAX YEAR ஆகா சித்திரையே பேணுகின்றனர் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது சித்திரை வருடப்பிறப்பாகும்
 
சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்…  ..
வருடத்தின் முக்கியத்துவம் வருடம் என்பது உத்தராயணம் என்னும் சூரியனது வட திசைப் பயணத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதனால் உத்தராயணம் ஆரம்பிக்கும் தை மாதத்தில் வருடப் பிறப்பு கொண்டாடுவதே சரி என்று சிலர் சொல்லலாம். அது சரியல்ல. வருடம் என்பதன் அர்த்ததை நாம் தெரிந்து கொண்டால் இந்த சந்தேகங்கள் வராது. தமிழ் நிகண்டுகளில் வருடம் என்பதற்கு ஒப்பான பிற சொற்கள் இருக்கின்றன. அவை வர்ச்சரம், அயனம், ஆண்டு என்பன.  வர்ச்சரம்  (வத்சரம்) என்று சொன்னால் அது ருதுக்களக் கொண்டது. வசந்த காலம், கோடைக் காலம் என்று மொத்தம் ஆறு பருவங்களைக் கொண்டது. ருதுக்களைப் பற்றி பேச வரும் போது வர்ச்சரம் என்பார்கள். அது வசந்த ருதுவில் ஆரம்பிக்கிறது. அது குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஆரம்பிக்காது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் அது மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் ருதுக்களது அடிப்படையில் நாம் ஒன்றும் செய்வதில்லை.  அயனம் என்று சொன்னால் அது உத்தராயணம், தட்சிணாயனம் என்னும் இரண்டு அயனங்களைக் கொண்டது. அயனங்கள் அடிப்படையிலும் நாம் செயல்களைச் செய்வதில்லை. தை மாதத்தில் உத்தராயணம் ஆரம்பிக்கிறது. அந்தநாளில் உத்த்ராயண ஹோமம் செய்தார்கள். இப்பொழுதெல்லாம் அது வழக்கத்தில் இல்லை. மேலும் உத்தராயணாம் என்பது மிகச் சரியாக தை முதல் நாளான்று ஆரம்பிப்பதில்லை.  வருடம் என்று சொன்னால் அது மாதங்களைக் கொண்டது. இந்த மாதத்தில் இதைச் செய்யலாம் என்று வழக்கத்தில் நாம் பல விசேஷங்களைச் செய்கிறோம். அதனால் நம் வாழ்க்கையில் வருடத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த மாதங்கள் குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கின்றன. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், சூரியன் குறிப்பிட்ட பாகையில் நுழையும் நேரத்தைக் கணக்கிட முடியும். அதனால் மாதமும், வருடமும், குறிப்பிட்ட நாளில் ஆரம்பிக்கவே பல செயல்பாடுகளைக் குறிக்க இது உபயோகமாக இருக்கிறது. இதன் காரணாமாகவே சித்திரையில் தொடங்கும் வருடக் கணக்கை நாம் பின்பற்றுகிறோம்.
.சித்திரையின் சிறப்புகள் சித்திரையில் வருடப் பிறப்பு அமைத்ததன் பிற காரணங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்
சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன்இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில் அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில் அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தை மாதம் என்பது கால புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அது சரியல்ல.  கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில் உண்டு. ஒரு ராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாகப் பகுப்பார்கள். ஒரு ராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள். ஒரு கிரகம் அவற்றுள் எங்கு இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தக் கிரகம் பலனைக் கொடுக்கும். முதியவன், மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது. இந்த முறை ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய ராசிகளுக்குப் பொருந்தும். மீதி ராசிகளான பெண் ராசிகளில் தலைகீழாகப் பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும். சித்திரை மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன் என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் தை மாதம் பெண் ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில் ஆரம்பிக்கும். மேலும் தையின் முதல் மூன்று நாட்கள் ‘கரி நாட்களக’ இருப்பதாலும், தையில் வருடப் பிறப்பு ஆரம்பிப்பது உசிதமல்ல.  · தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன் நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. “கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின் அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று மட்டுமே கணிக்க முடியும். ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக் கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக் கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.  ‘நவ நாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின் முக்கிய அம்சமாகும். சித்திரை வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தை மாதப் பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்க முடியும்?  சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்–தொகுப்பு -ARULAKAM WORDPRESS.COM
1-நட்சத்திர கோயில்கள்
2-   வரவிருக்கும் விசேஷங்கள் :-//புதுவருடம்-விரதநாட்கள்
Get your Tamil Jathagam Horoscope – தமிழ் ஜாதகம்
2  பஞ்சாங்கம் என்பது இந்துக் காலக் கணிப்பு
.2-60 வருட வாக்கிய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டும் தமிழ் கணக்கும்
    தமிழ் வருடங்கள் 60  
  காலச் சக்கரம்
002 சூரியசஞ்சாரமும் வருடம், மாதங்களும்.

லக்ன கணிதம் மற்றும்

கல்வெட்டுக்களில் பஞ்சாங்கக்

ஜோதிடம்-
 
 
 
 
 
 
 
 
 
 
 
அட்சய திருதியை சூத்திரம்:
12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள்
 
27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்
வானியல்;சாஸ்திரம்- வான சாஸ்திரம்
ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் கணித்தல்
ஜோதிடம் , ஜாதகம் , வான சாஸ்திரம்,எதிர்காலம் என்ன அவை பற்றித் தெரிந்து கொள்வது அவசியமா?????
சித்தர்களின் அண்டவியல்
 
 
தமிழர் திருமணம்
தமிழர் திருமணம்
தொல்காப்பியர் கூறும் திருமணப் பொருத்தங்கள்
மணமகன், மணமக்களிடையே அமைய வேண்டிய தொல்காப்பியர் கூறும் பொருத்தங்கள் :
 
பிறப்பே,  குடிமை,  ஆண்மை,  ஆண்டொடு
உருவு,   நிறுத்த காம வாயில்
நிறையே ,  அருளே,   உணர்வொடு,   திருஎன
முறையுறக்  கிளந்த  ஒப்பினது  வகையே.(தொல்1215 )

பொருள்:-

பிறப்பு   – நற்குடியில்  பிறத்தல்

குடிமை   –  பிறந்த அக்குடியின் சிறப்புக்கேற்ற ஒழுக்கமுடைமை

ஆண்டு   – அகவை ஒப்புமை

உருவு   – உடல் தோற்றம்

நிறுத்த காம வாயில்   – உடற்கண் அமைந்த காம இன்பம் நுகர்வதற்கான கூறுகள்

நிறை   – திருமணமானபின் மனத்தை ஒருவழி நிறுத்தவல்லதற் கட்டுப்பாடு

அருள்   –  பொதுவாக அருளுடையவராகத் திகழ்தல்

உணர்வு   –  மன உணர்ச்சி நிலைகள்

திரு   –  செல்வமுடைமை, செல்வர்போலும் மனமகிழ்ச்சியுடைமை உட்பட.

மணமக்கள் இருவரிடமும் இவை அமைத்திருத்தலே மணமக்களுக்குரிய

ஒப்புமையாகும். இவை இன்றையப் பார்வையில் மணமக்களுக்கான

திருமணப் பொருத்தமாகக் கொள்ளப்படுகின்றன.  

மணமகன், மணமகளிடையே அமையக் கூடாத பொருந்தாக் குணங்கள் :-

நிம்பிரி, கொடுமை, வியப்ப்பொடு, புறமொழி,
வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை,
இன்புறல், ஏழைமை, மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர். ( தொல்.1216 )

நிம்பிரி என்பது அழுக்காறு, 

கொடுமை என்பது அறனழியப் பிறறைச் சூழும் சூழ்ச்சி,

வியப்பு என்பது தம்மைப் பெரியாராக நினைத்தல்,

புறமொழி என்பது புறங்கூறுதல்,

வன்சொல் என்பது கடுஞ்சொல் கூறல்,

பொச்சாப்பு என்பது சோர்வு அல்லது மறதி அல்லது தம்மைக்
கடைப்பிடியாமை,

மடிமை என்பது முயற்சியின்மை, 

குடிமை இன்புறல் என்பது நம் குலத்தினாலும், தம் குடிப்பிறப்பினாலும் தம்மைப் பெரிதாக மதித்து இன்புறல்,

ஏழைமை   என்பது பேதைமை,

மறப்பு   என்பது யாதொன்றாயினும் கற்றதனையும், கேட்டதையும் மறத்தல்,

ஒப்புமை  என்பது ஆண்பாலாயினும், பெண்பாலாயினும் தான்
காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வார் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகின்கட் கீழ்மக்கள் மாட்டும் கண்ணிலோர் மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்கு ஆகாது என விலக்கப்பட்டது.
 
 தொல்காப்பியர் கூறும்…. (14) வகைப் பொருத்தங்கள் 
தொல்காப்பியம் என்னும் நூலை ‘ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பது (680 – கி.மு.711) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கிய இலக்கண நூலைப் பாடியருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார். ‘இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்பது நக்கீரனாரின் கூற்றாகும். ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் ‘திரணதூமாக்கினி’ எனவும், ‘சமதக்கினியாரின் புதல்வர்’ எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
தொல்காப்பியத்தை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன.  எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளன.  ஆனால், இந்நூற் சூத்திரங்கள் 1,595 என இளம்பூரணரும், 1,611 என நச்சினார்க்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளனர். இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும்  இன்னும் பலரும் தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.  இவற்றுள் இளம்பூரணர் உரை ஒன்றே காலத்தால் முற்பட்டதும், முற்றாகக் கிடைப்பதும் ஆகும். இனி மேற்காட்டிய விடயம் தொடர்பில் தொல்காப்பியர் கூறும் செய்திகளையும் காண்போம். தமிழ்நாட்டு எல்லை வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர்.  ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிரம் இவ்வாறு தொடங்குகின்றது.’வடவேங்கடந்  தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும்  நல்லுலகத்து .. ..’பனம்பாரனாரின்  பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்திருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை – அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லையாக அமைந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார்.  வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை.  தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு.  இது கடல் வரை சென்று சங்கமிக்கும்.  எனவே, கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார்.  இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவரை  உள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும். ஏழு திணைகள் நம் பண்டைத் தமிழர் இயற்கையோடு இணைந்து, பிணைந்து, ஒன்றறக் கலந்து, மகிழ்ந்து, இன்புற்று வாழ்ந்து வந்தனர்.  மேலும் நிலம் பற்றிக் கூறுகையில், திருமால் காக்கும் காடாகிய முல்லை இடமும், முருகவேள் காக்கும் மலையாகிய குறிஞ்சி இடமும், இந்திரன் காக்கும் வயலாகிய மருதம் இடமும், வருணன் காக்கும் பெரு மணலான நெய்தல் இடமும,; முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் மொழியப்பட்ட பெயர்கள் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’. – (பொருள். 05)
தொல்காப்பியர் காலத்திற்குமுன் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. ஆனால் காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் ‘பாலை’ எனப் பெயரிட்டனர். இதன் பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணைகளாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகின்றது.’முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்,
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்.  ‘   – (காடுகாண் காதை. 64 – 66)
முதற்பொருள்
முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகிய இயற்கையென உலகவியலை அறிந்தோர் கூறுவரெனச் சூத்திரம் கூறும்.
         ‘முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.’- (பொருள். 04)
நிலம் என்பது  முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களாக வகுக்கப்பட்டவையாம்.  பொழுது என்பது அந்த ஐவகை நிலம் சார்ந்தோருக்கு இன்ப உணர்வினைக் கொடுக்கின்ற பெரும்பொழுதும், சிறுபொழுதும் ஆகிய இரண்டுமாம்.
இன்னும், பெரும்பொழுதில் கூதிர், முன்பனி, வேனில், பின்பனி, வைகறை, கார் என்னும் ஆறு பருவங்கள்  ஆகிய காலமும், சிறுபொழுதில் யாமம், நண்பகல், மாலை, எற்பாடு பொழுது, விடியல் ஆகிய பொழுதும் அடங்கும். இனிச் சூத்திரம் கூறும் பாங்கினையும் காண்போம்.’காரும் மாலையும் முல்லை. ”   – ( பொருள். 06)
குறிஞ்சி, ‘கூதிர் யாமம் என்மனார் புலவர்.’  –  (பொருள். 07)
           ‘பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.’ – (பொருள். 08)
‘வைகறை விடியன் மருதம்.’    –  (பொருள். 09)
          எற்பாடு
‘நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும். ‘ – (பொருள். 10)
           ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.’   – (பொருள். 11)
          ‘பின்பனி தானும் உரித்தென மொழிப.’     – (பொருள். 12)
நம் பண்டைத் தமிழர் நிலத்தை ஐவகைகளாக வகுத்து, அதற்குப் பெரும் பொழுதும், சிறு பொழுதும் அமைத்து, அவற்றுக்கு இதமான காலப்பகுதிகளும் கணித்து, அததற்கேற்ற இன்ப உணர்வுகளோடு ஒட்டி, உறவுகொண்டு பெரு வாழ்வு பெற்றனர் என்பது தௌ;ளத் தெளிவாகின்றது.
பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம் என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்வியலோடு இணைந்த ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விபரிக்கும். மேலும் இதை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று பகுதிகளாக்கி அவற்றை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும், ஒருமித்து ஏழு திணைகளை ஆன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளர்.’கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’    –  (பொருள். 01)
அன்பின் ஐந்திணை

முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை ஆகியவற்றை அன்புடைக் காமம் என்றும் அன்பின் ஐந்திணை என்றும் கூறுவர். இதில் குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் போன்ற செய்திகளைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறும்.‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’ (பொருள் 16 )
ஐந்திணைகளுக்கும் நிலம் அமைந்துள்ளமை காண்க.  இருத்தல் – தலைமகன் வரும்வரையும் ஆற்றியிருத்தல். இரங்கல் – ஆற்றாமை.
கைக்கிளை கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். (கை – பக்கம், கிளை – உறவு) .இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும். கைக்கிளைக்கு நிலம் ஒதுக்கப்படவில்லை.தாழ்வான ஒழுக்கங்களான காமவுணர்ச்சி தோன்றாத சிறிய பெண்ணிடத்துப் பாதுகாவல் இல்லாதபொழுது துன்பமுற்றுப் புகழ்தலும், பழித்தலும் ஆகிய இருசெயல்களாலும், தனக்கும், அவளுக்கும் சார்பானவற்றைச் சேர்த்து, அவள் சொற்கேளாமல் தானே சொல்லி இன்பமடைதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு ஆகுமென்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.
        ‘காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னொடும் அவளொடும்  தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.’- (பொருள். 53)
பெருந்திணை
பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும்.  இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர்.  பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். பெருந்திணைக்கும் நிலம் ஒதுக்கப்படவில்லை.
ஆண்மகனுக்கே உரிய மடலேறுதல், இளமை நீங்கி முதுமைக் காலத்தும் ஆசை மிகுதியால் தம்முள் கூடி இன்பம் துய்த்தல், தெளிவற்ற நிலையில் காமத்தின் கண் மிகுதிப்பட்டு  நிற்றல், ஐந்திணையாகிய  ஒத்த காமத்தின் மாறுபட்டு  நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்காப்பியம் கூறும்.
       ‘ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடும்  தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.’  -(பொருள். 54)
பெருந்திணை தாழ்வான ஒழுக்கங்களைச் சார்ந்தது.   ஷஇளமை தீர்திறம்| என்பது தலைவன் முதியவனாகித் தலைவி இளையவளாதலும், தலைவி முதியவளாகித் தலைவன் இளையவனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய பின்பும் அறத்தின்மேல் மனம் நாடாது காமத்தின்மேல் மனம் நாடலும் என்னும் மூவகையாம். களவொழுக்கம் பூமிப் பந்தாகிய உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களின் இன்பம் கருதியேயாம். மனிதன் இன்பமுற்று வாழ்ந்தால் உலகமே இன்ப மயமாகி விடும். அவனின்றேல் உலகம் காடுதான். மனித வாழ்வுதான் உலகமாகின்றது.
இன்பம்,   பொருள்,  அறம்   என்று   கூறப்பட்ட  அன்புடனிணைந்த   ஐந்திணையில் (கைக்கிளை, பெருந்திணை நீங்கிய ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்) நிகழும் காமக் கூட்டமானது எட்டு வகை மணத்துள் அமைந்த யாழினையுடைய காந்திருவரது கூட்டத்தை ஒத்தது போலாகும் என்று களவொழுக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர்  சூத்திரம் அமைத்துள்ளார்.‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழத் துணைமையோர் இயல்பே’- (பொருள். 89)
மணம் எட்டாவன: (1) அசுரம், (2) இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5) பிரமம், (6) பிரசாபத்தியம். (7) ஆரிடம், (8) தெய்வம் ஆகியனவாம். இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளையைச் சாரும் என்று சூத்திரம் கூறும்.
                    ‘முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.’- (பொருள். 102)
இன்னும், மேற்காட்டிய எண்வகை மணத்துள்  பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணையைச் சாரும் என்று தொல்காப்பியம் கூறும்.
                    ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.’ – (பொருள். 103)
எண்வகை மணத்துள் எஞ்சிய காந்திருவம் ஐந்திணைக்குரியதாம். ஐந்திணையோடு பொருந்தி வரும் யாழோர் கூட்டம், சிறப்புற்ற ஐவகை நிலத்தையும் பெற்றதனால், யாழோர் கூட்டம் ஐந்தெனப்படுமாம். நிலமும், காலமும் முதல் எனக் கூறப்பட்டுள்ளது. ஐவகைக் கூட்டமாவன:- களவு, கற்பு, உடன் போக்கு, இற்கிழத்தி, காமக்கிழத்தி/ காதற்பரத்தை என்பனவாம்.’முதலாகு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே.’  –  (பொருள். 104 )
இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்டமை காண்க. களவொழுக்கக் காலவரை களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கும் வழக்கம் இல்லை. களவுக் காதல் தெய்வீகமானது. அவ்வண்ணமே அன்றைய காதலர்கள் கருத்தொருமித்துச் செயற்பட்டனர். இருந்தும், தலைவன் தலைவியரிடையே தோன்றிய களவின் காலவரையை இரண்டு மாதம்தான் நிகழுமென்று இறையனார் களவியலில் வரையறை வகுக்கப்பட்டுள்ளது.‘களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப.;- (நூற்பா. 32)
தலைவன் தலைவியரிடையே ஒரு தவறும் நடந்தேறிவிடக் கூடாதென்ற பேரவாக் கொண்ட  பழந்தமிழறிஞர் இவ்வாறான வரையறையை வகுத்துள்ளமை போற்றற்குரியதாகும்.
கற்பொழுக்க நெறி
தலைவன் தலைவியர் களவொழுக்கம் வெளிப்படுதலும், தமரின் மூலம் திருமணம் செய்து கொள்ளுதலும் என்று கூறப்பட்ட இவைமுதலாகிய இயற்கை நெறியில் மகிழ்தலும், புலத்தலும், ஊடலும், ஊடல் தீர்த்தலும், பிரிதலும் என்று சொல்லப்பட்டவற்றுடன் கூடிவருவது கற்பு என்று கூறப்படும்.‘மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய வியனெறி திரியாது
மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.’ – (பொருள். 488)
அம்பலும் அலரும்
தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலுமுண்டு. இது ஷஅம்பல்|, ஷஅலர்| என இருவகையால் வெளிப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாக் களவாகும்.  அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். இவ்விரண்டிற்கும் தலைவனே பொறுப்பாவான் என்று கூறும் தொல்காப்பியம். தலைவி  இவற்றிற்குப் பொறுப்பாகாள் என்றவாறு.’அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின்
அங்கதன் முதல்வன் கிழவ னாவான்’- (பொருள். 137)களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இரண்டிலும் தலைவன் தலைவி ஈடுபட்டிருக்கும் பொழுது அலர் (பழி) தூற்றுதல் நிகழ்வதுண்டாம். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்று, அவளுடன் சேர்ந்து ஆடல், பாடல் நிகழ்த்தி, ஆற்றிலும், குளத்திலும் நீராடி மகிழ்தலும், அலர் பரவலுக்குக் காரணமாம்.’களவுங் கற்பும் அலர்வரை வின்றே.’  –  (பொருள். 160)’கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.’   – (பொருள். 162)
கற்பும் கரணமும்
கரணம் என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வு. சடங்கோடு கூடிக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவன், கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவியைக் கொடுத்தற்குரிய தலைவியின் தமர் மணஞ்செய்து கொடுக்கும் முறையைக் கற்பென்று சிறப்பித்துக் கூறுவர். இது கொண்டு கொடுக்கும் முறையாம்.
கற்பு, கரணம், கிழவன், கிழத்தி, கொளற்குரி மரபினர், கொடைக்குரி மரபினர், கொண்டு, கொடுத்து என்பன நிரல் படுத்திக் கற்பொடு பொருந்திய மணவிழாவினைக் காண்க.’கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.;- (பொருள். 140)
தலைவியும்  தலைவனும்  அன்பினாற்கூடி  ஒன்றுபட்டுச்  சேர்ந்து  சென்ற  பொழுதும்,  கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். இவ்வண்ணம் கரணத்தின் சிறப்பு கூறப்பட்டமை காண்க.‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான’ –  (பொருள் 141)
நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக்கூடிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகை வகுப்பரிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது.‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே’ – (பொருள். 142)
தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், வேளாளர் தமக்குள் மாத்திரம் மணவினை நிகழ்த்தினரென்பதும் புலனாகின்றது. இன்று இம்முறைகள் யாவும் அருகி மறைந்துவிட, நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து, மணவினை காண்கின்றனர்.
நால்வகுப்பின மக்கள் இன்னும், நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம்இன மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்  ஆகிய நான்கு வகுப்பினரில் அடக்கி, அரசர்களிலும் பார்க்க அந்தணர்க்கு முதலிடம் அளித்து, இரண்டாமிடத்தில் அரசரை அமர்த்தி, மூன்றாம் நான்காம் இடங்களில் முறையே வணிகர், வேளாளர் ஆகியவர்களை நிறுத்தி, அரசன் கையில் செங்கோல் கொடுத்து, மக்களை மாண்புடன் வாழவைக்கும் முறையினை அமைத்தமை காண்க.
மேலும், இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. நாம் தொல்காப்பியர் வழியில் நிற்கின்றோமா? என்பது விடையற்ற ஒரு கேள்வி. ஐயர் யாத்த கரணம் தலைவன் தலைவியைக் கண்டு, காதல் கொண்டு, சிலநாட் பழகி, பல நாள் மறைந்தொழுகி, பின் நானறியேன் என்று பொய் கூறுதலும், குற்றப்பட ஒழுகுதலும் மக்கள் வாழ்வில் மங்கா வடுக்களைத் தந்து வாழ்க்கை முறைகளைச் சீரழித்து விடுகின்றன. தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர்.
         ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.’   – (பொருள். 143)‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்’ என்று வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்றிருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென்பதும் தெளிவாகின்றது.
பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும் நிகழாவாம். இவ்வண்ணம் கரணம் வேண்டுவதாயிற்று. இன்றும் கரணத்தொடு கூடிய திருமணம் நடாத்துகின்றோம்.
களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவரும் களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவர் என்று கூறும் சூத்திரம் இது.‘பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின் அறுவகை யோரும்
களவியற் கிளவிக் குரியர் என்ப.’  – (பொருள். 490)
கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்
பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவருடன் சிறப்பினையுடைய பார்ப்பான், பாங்கன் தோழி, செவிலி, கிழவன், கிழத்தி ஆகிய அறுவரையும் சேர்த்துப் பன்னிருவரும் கற்பிற் கூற்று நிகழ்த்தற்கு உரியோராவார்.
fstpw; $w;W epfo;j;j mWtiuAk;> fw;gpw; $w;W epfo;j;jg; gd;dpUtiuAk; epakpj;jik> fw;gpd;Nky; md;Ws;s Md;Nwhh; fhl;ba fl;Lg;ghl;bidf; fhz;fpd;Nwhk;.
‘பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பில் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த  அறுவரொடு தொகைஇத்
தொன்னெடு மரபிற் கற்பிற் குரியர்.’  – (பொருள் 491)
ஒத்த பத்து வகைப் பண்புகள்
பண்டைத் தமிழர்கள் மணவாழ்க்கைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துப் பத்து வகைப் பண்புகளில் தலைவனும் தலைவியும் ஒத்திருக்க வேண்டுமென விதிகள் அமைத்துள்ளனர்.
அவையாவன: (1)  ஒத்த  பிறப்பும், (2)  ஒத்த  ஒழுக்கமும், (3)  ஒத்த  ஆண்மையும்,  (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பார்ப்போம்.
                                       ‘பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே’– (பொருள். 269)
இப்படியான பத்து (10) வகைப் பண்புகள் ஒத்திருக்கும் தலைவன் தலைவியரிடையே அன்று திருமணம் நிகழ்த்தப்பட்டு அவர்கள் சீரும், சிறப்பும் அமைந்த இல்வாழ்க்கையை நடாத்தி இன்புற்றிருந்தனர். இன்று நாம் திருமணத்துக்குமுன் பதி;னான்கு (14) வகைப் பொருத்தங்கள் பார்த்து மணவிழா நடாத்துகின்றோம். அவையாவன: (1) நட்சத்திரப் பொருத்தம், (2) கணப் பொருத்தம், (3) மகேந்திரப் பொருத்தம், (4) ஸ்திரீதீர்க்கப் பொருத்தம், (5) யோனிப் பொருத்தம், (6) இராசிப் பொருத்தம், (7) இராசியதிபதிப் பொருத்தம், (8) வசியப் பொருத்தம், (9) இரச்சுப் பொருத்தம், (10) வேதைப் பொருத்தம்,  (11) புத்திரப் பொருத்தம், (12) ஆயுள் பொருத்தம், (13) விருச்சப் பொருத்தம், (14) நாடிப் பொருத்தம் என்பனவாம்.  இன்றுள்ள பதினான்கு வகைப்  பொருத்தங்கள்  அன்றிருந்த பத்து வகைப் பொருத்தங்களிலிருந்து எவ்வண்ணம் மாறுபட்டுப் போயுள்ளன என்பதை மேலே பார்த்தோம்.
தலைவனின் ஊர்திகள்
தலைவன் தலைவியர் காதல் வலையிற் சிக்குண்டனர். தலைவன் தலைவியை நாடிச் செல்வது வழக்கம். தேர், யானை, குதிரை முதலியவற்றிலும், பிறவற்றிலும் தலைவன் விரைந்து சென்று தலைவியைக் கூடுதலும் உண்டென்று சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியனார் ஆவார்.
         ‘தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப.’ –  (பொருள் 209)
தலைவன் ஒருவனிடம் தேரும், யானையும், குதிரையும் பிற ஊர்திகளும் உண்டென்பது அவனின் சிறந்த பொருளாதார நிலையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இன்னும் அவன் நாட்டுச் செழிப்பும் அவ்வண்ணம் அமைந்துள்ளமையும் புலனாகின்றது.
முடிவுரை
இதுகாறும் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலிருந்து தமிழ் நாட்டின் எல்லை, ஏழு திணைகள், முதற் பொருள், அன்பின் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை, களவொழுக்கம், களவொழுக்கக் காலவரை, கற்பொழுக்க நெறி, அம்பலும் அலரும், கற்பும் கரணமும், நால்வகுப்பின மக்கள், ஐயர் யாத்த கரணம், களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோர், ஒத்த பத்துவகைப் பண்புகள், தலைவனின் ஊர்திகள் ஆகியவை பற்றி விரிவுபடுத்திப் பார்த்தோம்.
இன்னும், ஐந்திணையில் அவரவர் ஐவகை நிலத்திற்கேற்ற ஒத்த காம உணர்வு, எழுச்சி, நெகிழ்ச்சி ஆகியவற்றோடு ஒன்றறக் கலந்து, இணைந்து, பிணைந்து இயற்கையுடன் வாழ்க்கை நடாத்திய பண்டைத் தமிழரின் பண்பினை தொல்காப்பியர் தொகுத்துக் காட்டிய சூத்திரங்கள் யாவும் கடந்த மூவாயிரம் (3000) ஆண்டுகளாக வலிமை பெற்று இந்நாளிலும் உயிருடன் உலா வருகின்றதை நினைந்து அன்னாரின் வழித்தோன்றலாகிய நாம் அவர் தந்துள்ள செய்திகள;; அனைத்தையும் கட்டிக் காத்துப் பேணி அடுத்த சந்ததியினருக்கு விட்டுப் போவது நம்மனைவரின் கடமையாகும்.
——————————————————————————————————

கிரக‌ப்‌பிரவேச‌ம்

வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற
அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம். 

கிரகப்பிரவேசம் செய்யும் முறை : பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம். 

தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடைïறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம். 

கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம். 

நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும். 

வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும். 
நவரத்திண கற்கள்-
 
எண்சோதிடம்
 
திருக்கணிதம் பஞ்சாங்கம்
திருக்கணிதம் ஜோதிடம்
-8 வாக்கிய பஞ்சாங்கம்

 

 

நட்சத்திர கோயில்கள்

http://temple.dinamalar.com/StarTemple_list.php

ஜாதகம் என்றால் என்ன
நம் தலையெழுத்துஎன்பதுதான்ஜாதகம் 
ஜாதகமென்பது நாம் ஒவ்வொருவரும் முன் செய்த
பாவ புண்ணியத்தைப் பொருத்தே அமைகிறது
பாவ பலனை குறைக்கவும் நல்லபலனை கூட்டவும்
ஜோதிடத்தில் வழி (பரிகாரம்)இருக்கிறது
இதை அனைவரும் பயன்படுத்தி
வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும்
நம்மை ஆட்சி செய்வது ஒன்பது நவக்கிரகங்கள்
அந்த நவகிரகங்களை ஆட்சி செய்வது கடவுள்
அந்தகிரகங்களின் நடப்பில் அந்தந்த கிரகங்களை
ஆட்சிசெய்யும் கடவுளை நாட வேண்டும்
அப்போதுதான் நல்ல வழி கிடைக்கும்
நம் வாழ்க்கை சிறக்கும் என்பது நிச்சயமே

 

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 1

 

http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-1/

 

சித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2

http://www.tamilhindu.com/2010/01/tamil-new-year-starts-in-chithirai-2/

 

ஆன்மிக காலண்டர்

 

http://www.dinamalar.com/Aanmeega_Calendar/Aanmeegacalendar.asp?month=12&year=2013

 

ஆச்சரியமான அதிசயமான தகவல்

‘தீ இவரைத் தொடுவதில்லை..,’

http://prabanjaveliyil.blogspot.com/2013/08/blog-post_26.html

நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தி லும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக்  காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே திருக்கணிதப் பஞ்சாங்கமாகும்.

 

தினமலர் 200 வருட காலண்டர் (1881 முதல் 2080 வரை )

http://temple.dinamalar.com/calendar_200yrs.asp

தமிழ் வருடங்கள் 60

 

1http://www.tamilkalanjiyam.com/astrology/articles/tamil_years.html#.U0cUXlVdX10

2-http://www.ahobilam.com/Panjangam/tamilyears.aspx

 

பஞ்சாங்கம் என்றால் என்ன?

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கம் எனப்படும்.பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களாவன…திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் என்பவையே அவை.இதன் மூலம், பஞ்சாங்கம் பார்த்து பலன் சொல்ல நாமும் கொஞ்சம் கற்றுக் கொள்வோம்!

 

http://www.dinamani.com/astrology/article1295055.ece

பஞ்சாங்கம் பாப்பது என்றால் என்ன?

http://kanavugal-ami…og-post_16.html

 

தமிழ் பஞ்சாங்கம்

 

60 வருட வாக்கிய பஞ்சாங்கம்

http://www.prohithar.com/onlinePanchangam.html

 

1-Online Panchangam பஞ்சாங்கம்– www.prohithar.com
2—www.prohithar.com/onlinePanchangam.html

http://thanigaipanchangam.blogspot.co.uk/

3-http://www.astrosuper.com/2011/09/2012_20.html

4-  வாக்கிய பஞ்சாங்கம்

60 வருட வாக்கிய பஞ்சாங்கம்

http://www.prohithar.com/onlinePanchangam.html

 

http://temple.dinamalar.com/panchankam.asp

 

திருக்கணித பஞ்சாங்கம் 

 

http://icssoftwares.com/panchangam1.html

 

http://www.astrosuper.com/2011/09/2012_20.html 

 

வருட திருக்கணித பஞ்சாங்கம்

http://www.prohithar.com/onlinePanchangam.htmlhttp://www.astrosupe…09/2012_20.html

 

திருக்கணித பஞ்சாங்கம் இறக்கம் Andriod   

http://www.thanigaipanchangam.com/   சபரி

பஞ்சாங்கம்http://www.sabharipanchangam.com/sw/types_sw.php
002 சூரியசஞ்சாரமும் வருடம் 

 

http://astrology-keyemdharmaa.blogspot.co.uk/2012/12/002.html

 

இராசிச் சக்கரம்

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D===========

 

எளிய தமிழில் ஜோதிடம் கற்கவும்

http://tamiljatakam.blogspot.co.uk/2011/02/5.html
வாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள்
இலவச ஜாதகம் கணிக்க மென்பொருள், 12 ராசி பலன்கள் முழு தொகுப்பு…

Http://Www.Ssivf.Com/Ssivf_cms.Php?Page=223

 

தமிழ் புத்தாண்டு ராசி பலன்!

1-DINAMALAR.COM-

A–http://temple.dinamalar.com/rasi_palan.php?cat=568  B-http://temple.dinamalar.com/2014_rasi_palan.php

2-PANIPPULAM.COMhttp://panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=60&Itemid=388

 

Get your Tamil Jathagam Horoscope – தமிழ் ஜாதகம்

http://astrology.tamilcube.com/tamil-horoscope.aspx

 

முக்கிய விரத நாள்கள்

1-http://temple.dinamalar.com/Search.aspx

 

2-வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்

 

http://priyadevotional.blogspot.co.uk/2013/05/blog-post_6981.html 3-

சிவராத்திரி விரதம் இருக்க வேண்டிய விதிமுறைகள்

http://180.179.36.241:82/2012/06/08151315/shivaratri-vratham-rules.html   4-!நவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்

 

http://manchavanapathy.blogspot.co.uk/2013/10/navarathiri-vitharam_9.html

 

சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்

http://www.dinamalar.com/josiyam_main.asp

http://tamil.webdunia.com/astrology-prediction-and-others

 

நவக்கிரகங்கலின் கணிப்பு

http://www.tamilastrology.net/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

 

இராகு, கேது – ஜோதிடம்

http://tamiljatakam.blogspot.co.uk/2012/08/blog-post_28.html

 

ஏழரைச் சனி என்ன செய்யும்?
http://pudhiyathagaval.blogspot.ch/2011/12/blog-post_2327.html

 

குருபெயர்ச்சி செய்திகள்

 

திருமண நட்சத்திரப் பொருத்தம்

http://srivetrijothisha.page4.me/57.html-

 

உங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா?

http://www.cutamil.com/?p=1749

 

இரண்டாவது திருமணம் நடைபெறுவது எதனால்?

http://astrovanakam.blogspot.co.uk/2012/11/blog-post_1306.html

உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது ?

http://www.cutamil.com/?p=981

 

ஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா?

http://vedhajothidam.blogspot.co.uk/2012/09/blog-post_20.htmlPANCHANGAM IS A CALENDAR USED TO FIND AUSPICIOUS TIMES FOR STARTING IMPORTANT EVENTS. IN ADDITION TO FINDING THE TIMES FOR THE MOVEMENT OF CELESTIAL BODIES THAT IMPACT YOUR LIFE, YOU COULD ALSO USE A PANCHANGAM TO FIND OTHER INFORMATION SUCH AS ACTUAL START OF A TAMIL OR HINDU NEW YEAR. HERE ARE SOME LINKS TO ONLINE PANCHANGAMS:

1-Today’s Panchangam ….. http://www.scientificastrology.com/approve/panchang.aspx2-We are presenting 106+ years panchangam from 1900-2006 for most timezones in the world …… http://www.mypanchang.com/100yearspanchang.html3-Tamil Calendar And Daily Tamil Panchang Online ….. http://www.probharat.com/indian-calendars/tamil-calendar.php4–60 Tamil year names list – Tamil Calendar ….. 5—The 60-year cycle of the Tamil Calendar is followed in Tamil Nadu …..6–Panchang, Panchangam, Panchanga for the World ….. http://www.mypanchang.com/

 

 

Birth Chart – Free Online Astrology Birth Chart

http://www.prokerala.com/astrology/birth-chart/

ஏழரைச் சனி என்ன செய்யும்?

 

திருமண நட்சத்திரப் பொருத்தம் ….. இங்கே அழுத்தவும்.

1-Today’s Panchangam

http://www.scientificastrology.com/approve/panchang.aspx

2-We are presenting 106+ years panchangam from 1900-2006 for most timezones in the world …… http://www.mypanchang.com/100yearspanchang.html
3-Tamil Calendar And Daily Tamil Panchang Online ….. http://www.probharat.com/indian-calendars/tamil-calendar.php
6–Panchang, Panchangam, Panchanga for the World ….. http://www.mypanchang.com/

 

2013 – புத்தாண்டு இராசி பலன்கள்!

12 ராசிகளுக்கான பலன் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்

ஜோதிடம் ….. PLEASE VISIT HERE.

சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

15-11-2011 முதல் 2-11-2014 வரை …….PLEASE VISIT HERE.

ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன்  தரும்?

PLEASE VISIT HERE.

நவக்கிரஹ ஸ்தோத்திரம்

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை என்ன? ….. PLEASE VISIT HERE.

வளம் சேர்க்கும் வீட்டு சாஸ்திரம் ….. PLEASE VISIT HERE.

HOROSCOPE PLEASE VISIT HERE.

நீங்களே ஜாதகம் கணிக்கலாம் PLAESE VISIT HERE.

பிறந்த எண் பலன்கள் (GAIN OF BIRTH NUMBERS) ….. இங்கே அழுத்தவும்.

அதிர்ஷ்டபெயர் அமைக்கும் முறை (LOCKY NAME) இங்கே அழுத்தவும்.

பெயர் எண் பலன்கள் (NAME NUMBERS) இங்கே அழுத்தவும்.

horoscope Please visit here.

நீங்களே ஜாதகம் கணிக்கலாம் Plaese visit here.

raasi-palangal2014.jpg

12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக.

மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) 

மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இதுவரை கல்வியில் பின் தங்கியிருந்த பிள்ளைகள் இனி நன்றாகப் படிப்பார்கள். உங்கள் மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி அதிவேகமாக முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கரைந்து கொண்டிருக்கிறதே என்கிற வருத்தம் நீங்கும் அளவுக்கு இனி சம்பாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைத்து அதன் மூலம் சில முன்னேற்றங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் யாவும் விலகும்.

உங்களின் பரம்பரைச் சொத்து நியாயமான முறையில் உங்களுக்கு வந்து சேரும். மேலும், தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதனான செவ்வாய் 6ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மன உளைச்சல்கள் முற்றிலும் நீங்கும். நீங்கள் பேசும் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உங்களின் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்களையெல்லாம் பைசல் செய்வீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு பிறகு காலதாமதாக தள்ளிப்போய் முடியும். கடுமையான பணிச்சுமை இருக்கும். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 4ம் வீட்டிலேயே அமர்வதால் எப்படியாவது இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.

என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை  சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல்  14.10.2014 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாய் பலவீனமாவதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், உடன்பிறந்தவர்கள் மற்றும்  உறவினர்களுடன் மனக்கசப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்து நீங்கும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற மனோ பயத்திலிருந்து வெளியே வருவீர்கள். எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகளும் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும்.

யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அநாவசியமாக மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கை யாளர்களும் தேடி வருவார்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. துணி, சிமென்ட், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகஸ்தர்களே! கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் வெற்றியை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் உழைப்பை பயன்படுத்தி சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.

கன்னிப்பெண்களே! தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகம் உண்டு. காதல் எண்ணத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். மாணவர்களே! கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கவனத்தைப் பெறுவீர்கள். தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற சாதாரண வாய்ப்பையும் வீணாக்காது தக்க வைத்துக் கொள்ளுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். இந்த 2014ம் ஆண்டு போராட்டமாக இருந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:
மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள ஆனந்ததாண்டவபுரம் தலத்தில் அருளும் பஞ்சவடீஸ்வரரையும், கல்யாண சுந்தரி, பெரியநாயகியையும் தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

மதியாதார் முற்றம் மிதிக்காமல் மனதில் பட்டதை பளிச் சென்று பேசுபவர்களே! உண் மையை உயிர்க் காற்றாய் சுவாசிப்பவர்களே! உங்கள் ராசிக்கு 6ம்  வீட்டில் சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருக்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சோம்பல் விலகும். புத்துணர்ச்சியும்  துணிச்சலும் பெருகும். சாதாரணமாக இருந்த நீங்கள் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைத்து நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம்  கிட்டும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஆனால்,  எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் திடீர்  பயணங்கள் அதிகரிக்கும்.

சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். பயப்படாதீர்கள். பொதுவாகவே மிகவும் விலை மதிப்பு வாய்ந்த பொருட்களை வைத்துக் கொண்டு இரவுப் பயணங்களை  மேற்கொள்ளாதீர்கள். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை  மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சீக்கிரமாக முடியும். இந்தாண்டு முழுக்க சனி 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிரிகள்  அடங்குவார்கள். சிலபேர் நண்பர்கள் ஆவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். அதற்கான வங்கிக் கடன் உதவியும்  கிடைக்கும். சொத்துச் சேர்க்கையும் உண்டு. தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும்.

வெகுநாட்களாக அவருக்கு இருந்த நோய் விலகும். நீங்கள் காத்திருந்த அயல்நாடு செல்ல வேண்டிய  விசா கிடைக்கும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும்.  வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன்  -மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு  சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து  நீங்கும். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம்,  கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட் டிலேயே அமர்வதால் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க  வேண்டி வரும். தொடர்ச்சியான வேலைகளால்  டென்ஷன் அதிகரிக்கும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்று குழம்புவீர்கள். இளைய  சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக்  கோயிலுக்கு சென்று வருவீர்கள். அதுமட்டுமின்றி சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள். இந்த காலகட்டங்களில்  பொதுவாகவே தூக்கக் குறைபாடு இருக்கும். ராகுவும் ஜூன் 20ந் தேதி வரை 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

சொந்த-பந்தங்கள்  மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.   21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் உங்களின் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம்  வரும். ஆனால், ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக  வெளியில் கடன் வாங்க  வேண்டியது வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்  பாருங்கள்.

வியாபாரிகளே! நஷ்டங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து வைத்திருப்பீர்கள். நூதனமான முறையில் வியாபாரத்தை  பெருக்குவீர்கள். அதற்கேற்ப முதலீடுகள் செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பெயர் பலகையை நவீனமாக அமைப்பீர்கள். உங்களின் முக்கிய சாலைக்கு  கடையை மாற்ற திட்டமிடுவீர்கள்.

வேற்று மொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. அனுபவமிக்க  வேலையாட்களை அமர்த்துவீர்கள். கடையை  விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பங்குதாரரை  பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆனாலும், வெளிப்படையாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது நல்லது.

உத்யோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். இதுவரை பாரபட்சமாக நடந்து கொண்ட மேலதிகாரி இனி சரியானபடி நடந்து கொள்வார்.  பொறுப்புகள் கூடும் நேரம் இது. அதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவார்கள். அனைத்து  அலுவலக கூட்டங்களிலும் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும், பணிகளை முடிப்பதில் தொய்வு வேண்டாம். சக ஊழியர்கள்  உதவுவார்கள். இந்த வருடத்து இறுதிக்குள் பதவி உயர்விற்காக உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சம்பளத்தோடு சலுகைகளும் சேர்ந்து கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! சாதுர்யமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் கவனத்தோடு இருப்பீர்கள். காதல் இனிக்கும். ஆனாலும், பெற்றோரின்  சொல்படி கேட்பீர்கள். உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ள£தீர்கள்.

மாணவர்களே! புத்தக அறிவை விட பொது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். கல்லூரியில் படிக்கும்போதே கனவு கண்ட  நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். மேலும், உயர் கல்வி பயில ஆசைப்படும் மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்திலிருந்து  உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அமையும். நல்லவர்கள் என்று நம்பிய சில நண்பர்களின் சுயரூபத்தை இப்பொழுது புரிந்து கொள்வீர்கள். நினைவாற்றலை  அதிகப்படுத்திக் கொள்ள கீரை, காய்கறிகளை  உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! சக போட்டிக் கட்சியினரைக் கூட அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் பெறுவீர்கள். அவர்களின் தந்திரமான காய் நகர்த்துதலை புரிந்து  கொண்டு வெற்றி பெறுவீர்கள். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும். அதனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

கலைத்துறையினரே! இத்தனை நாள் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களோடு நீங்கள் கொண்டிருந்த நல்ல நட்புறவால்  சாதிப்பீர்கள். இந்த 2014ம் ஆண்டு உங்களின் விவேகத்தை அதிகப்படுத்தி செயலில் விரைவைக் கூட்டி வெற்றிக் கனியை தருவதாக அமையும்.

பரிகாரம்:
சென்னை – பொன்னேரிக்கு அருகேயுள்ள சின்னக்காவணம் தலத்தில் அருளும் நூற்றெட்டீஸ்வரரையும் நடராசரையும் அத்தலத்திலுள்ள ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீட்டையும் தரிசித்து வாருங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.

மிதுனம்:  மிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பிக்கையுடன் போராடி முதலிடத்தை பிடிப் பவர்களே! பிறரை மகிழ்வித்து மகிழ்பவர்களே! உங்கள் ராசிக்கு 7ம்  வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் ஒட்டுமொத்த திறமை களையும் வெளிப்படுத்த வெறியோடு உழைப்பீர்கள். மனதில் உள்ளதை மறைக்காமல்  பேசுவதால் பல நண்பர்களை இழந்திருப்பீர்கள். ஆனால், இப்போது அனைவரும் உங்களை புரிந்து கொண்டு வருவார்கள். உங்களின் சொந்த உழைப்பினால் நல்ல  வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். சில இடங்களில் வளைந்து கொடுத்தும் சில நேரங்களில் மௌனமாக இருந்தும் சாதித்துக் காட்டுவீர்கள்.

அழகும் இளமையும் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட  நெடுநாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களின் ராசிநாதனான புதன் 7ம் வீட்டில்  அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் நிறைய புதிய யோசனைகள் பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை,  ஆபரணங்களை வாங்கிப் போடுவீர்கள். அரசுக் காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பீர்கள். கூடுதல் பதவியோடு  பணிச் சுமையும் இருக்கும். மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். தலைச்சுற்றல், காய்ச்சல், அலர்ஜி வந்து நீங்கும்.  தண்ணீரை எப்போதுமே காய்ச்சி அருந்துங்கள். குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வந்து விலகும். எனவே, மூன்றாம் நபரின் தலையீட்டை தவிர்க்கப் பாருங்கள்.  வாழ்க்கையின் மீது திடீரென்று வெறுப்புணர்வு வந்து போகும். அதனால், அவ்வப்போது வெளியூர்களுக்கு குடும்பத்தோடு சென்று வாருங்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு குரு விலகி 2ம்  வீட்டில் தொடர்வதால் பணவரவிற்கு பஞ்சமிருக்காது. பிரிந்திருந்த  கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பல வருடங்களாக குழந்தை இல்லையே என்று ஏங்கிக்  கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்கள் குடும்பத்தை விட்டு ஒதுங்கியிருந்த  உறவினர், நண்பர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். இந்த நேரத்தில் கொஞ்சம் வசதி வாய்ப்புகள் அதிகரிப்பதால் புது வீடு  வாங்கலாமா என்று யோசிப்பீர்கள். உங்களில் பலர் வாங்கி விடுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு சமாளிப்பீர்கள். இதனால்  பொறுமையோடு இருக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5ம் வீட்டில்  நிற்பதால் பிள்ளைகள் உங்களின் சொல்பேச்சை கேட்க மாட்டார்கள். கொஞ்சம் மெதுவாகப் பேசி  அவர்களின் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். பூர்வீகச் சொத்து  சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

21.6.2014 முதல் வருடம்  முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4ம் வீட்டிலும், கேது 10லும் அமர்வதால் எடுத்த வேலைகள் எதுவும் சட்டென்று முடியாது.  அலுவலக த்தில் பணிச்சுமையும் கூடுதலாகத்தான் இருக்கும். சிலருக்கு வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி   வந்துபோகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். வாகனத்தின் ஓட்டுநர்  உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

இந்தாண்டு முழுக்க சனி 5ல் நிற்பதால் மனதில் இடதா வலதா என்கிற குழப்பம் நிலவியபடி இருக்கும். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று உங்களால் எந்த  முடிவையும் எடுக்க முடியாது. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை  விட்டுப் பிடிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில்  கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து சரியாகும்.

18.12.2014 முதல் 6ம் வீட்டில் அமர்வதால் உங்களுக்கு ஆதரவு கூடும். இதுவரை உங்களை எதிர்த்தே பேசியவர்கள் அமைதியாக இருப்பார்கள். பிள்ளைகள்  உங்களின் அருமையைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். தந்தைவழி  உறவினர்களாலும் ஆதாயமுண்டு.

வியாபாரிகளே! தொட்டது துலங்காமல் நஷ்டப்பட்டீர்களே! பாக்கியை வசூலிப்பதே பெரிய போராட்டமாக இருந்ததே! இந்த நிலைமையெல்லாம் மாறும். பற்று  வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களிடம் கறாராக  இருக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுக மானவரை  பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள். அவரிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசிக் கொள்ளுங்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 21ந் தேதி முதல் கேது 10ல் அமர்வதால் வேலை விஷயமாக அலைச்சல்கள் இருக்கும். மேலதிகாரியின் குறைகளை  மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் அதையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்காதீர்கள். அதேசமயம் சக ஊழியர்களிடமும் கவனமாகப்  பழகுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து அதற்குத் தகுந்தவாறு செயல்படுவது  நல்லது. வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாவார்கள்.

மாணவர்களே! வகுப்பறை படிப்பைத் தாண்டி மற்ற திறமைகளையும் வெளிப்படுத்துங்கள். அதற்கான முயற்சிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.  பாடத்தில் சந்தேகம் வந்தால் உடனே தயங்காமல் கேளுங்கள். சோம்பலை உதறி அதிகாலையில் எழுந்து படியுங்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களுக்கு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். மக்களின் மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.  சகாக்கள் சிலர் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். கலைத்துறையினரே! படைப்புகளை கொடுப்பதில் சின்னச் சின்ன தடுமாற்றங்கள் வந்து நீங்கும். ஆனாலும்,  உங்களின் புகழ் கூடித்தான் இருக்கும். சம்பளப் பாக்கியும் கைக்கு வந்து சேரும். இந்த 2014ம் ஆண்டின் முற்பகுதி கொஞ்சம் உங்களின் பொறுமையை  சோதித்தாலும் பிற்பகுதியில் சாதிப்பீர்கள்.

பரிகாரம்:
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், குறுமாணக்குடி திருக்கண்ணார் தலத்தில் அருளும் கண்ணாயிரமுடையார் கோயிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவுக்கு உதவுங்கள்

கடகம்: புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே! உங்களின் யோகாதி பதியான செவ்வாய் ராசிக்கு 3ம் வீட்டில்  அமர்ந்திருக்கும்  போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள்  எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீடு, மனை வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி  பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உங்கள்  ராசிக்கு 6ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும் போது இந்த  ஆண்டு பிறப்பதால் சின்னச் சின்ன வாய்ப்புகள்தானே பார்த்துக்  கொள்ளலாம் என்று இருக்காதீர்கள்.

சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்கிற பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். அதிகாரப் பதவியில்  இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். புது வேலை  கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.  என்றாலும் ராசிக்கு 6ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால்  நெருங்கிய சுற்றத்தினர் மற்றும் பால்ய நண்பர்களுடன் மெல்லிய  விரோதப் போக்கு வரக்கூடும்.

தொண்டை வலி, சைனஸ் தொந்தரவு வந்து  நீங்கும். ஜூன் 12ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் வெளியூர் பயணங்களால்  அலைச்சல்கள் இருக்கும். இதனால் ஒன்றுக்கு இரண்டாக செலவுகளும் கூடும். எனவே, கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை,  ஒருவித படபடப்பு வந்துபோகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில்  குறுக்கே நிற்க வேண்டாம். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள்  ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யம் பாதிக்கும். வேலைச்சுமையால்  டென்ஷன் அதிகரிக்கும். ஏதோ தனக்கு பெரிய நோய் இருப்பதைப்போல மன பிரமை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி  இன்பெக்ஷன் வந்துச் செ ல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகத்தால்  பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாகக்  கையாளுங்கள். இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். பல வருடங்களாகப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள்.  சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்காக நிறைய வேலைகள் வந்து கொண்டேயிருக்கும்.  பணிச்சுமையால் திணறுவீர்கள். உங்களில் சிலருக்கு உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து  நீங்கும். தாயாருக்கு  முதுகுத் தண்டுவடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும்போது மெதுவாகச் செல்லுங்கள். விபத்துகள் நிகழக்கூடும். ஜூன் 21ந் தேதி  முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது தொடர்வதால் பரம்பரைச் சொத்து விஷயங்கள் சம்பந்தமாக சில பிரச்னைகள் தலைதூக்கும்.  தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துபோகும்.

ஆனால், ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயமும் படபடப்பும் வந்துநீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர  வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். இந்த ஆண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் தாயாரோடும், தாய்வழி  உறவினர்களோடும் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டில் களவுபோக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினருடன் வெளியூர் பயணிப்பதாக இருந்தால்  முன்கூட்டியே பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுச் செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிப்  பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்களை பராமரிப்பு செய்ய வேண்டியது வரும். அது சம்பந்தமான பராமரிப்புச் செலவு  களும் அதிகரிக்கும். பழைய வழக்கு விஷயங்களால் நிம்மதியை இழப்பீர்கள்.

வியாபாரிகளே! இந்தாண்டு கொஞ்சம் வியாபாரத்தில் அவ்வப்போது லாபமும் நஷ்டமும் மாறிமாறித்தான் இருக்கும். ஜூன் மாதம் முதல் ஜென்ம குரு  தொடங்குவதால் புதிய நட்புகளோடு திடீரென்று அறிமுகமாகும் நபரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ  கெமிக்கல், உணவு வகைகளால் லாபம் பெருகும். பழைய வேலையாட்கள் விலகுவார்கள். அதனால் சிரமப்படுவீர்கள். புதிதாக வருபவர்களின் ஒத்துழைப்பும்  குறையும். யாருக்கும் வேலை தொடங்கும் முன்பேயே பணம் தர வேண்டாம். பங்குதாரர்களுடன் அவ்வப்போது சிறுசிறு சலசலப்புகள் வந்து நீங்கும்.

உத்யோகஸ்தர்களே! அலுவலகத்தில் உங்களின் முன்னேற்றம் சம்பந்தமான விஷயங்கள் யாவும் இழுபறியாகத்தான் இருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு  என்று இருக்கப் பாருங்கள். நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும் அதிகாரிகள் குறை கூறத்தான் செய்வார்கள். சக ஊழியர்களால் உங்களின் பெயர் கெடாமல்  பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். அதற்காக அவரசப்பட்டு யாரையும் பேசாதீர்கள். உங்கள் மீது சிலர்  அவதூறு வழக்குகளை தொடர்வார்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்குத் தெரியாமல் அநாவசியமாக வேறெந்த விஷயங்களிலும் ஈடுபட வேண்டாம்.  போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகள் தாமதமாகும்.

மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிக்க பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். தொடக்கத்திலிருந்தே அன்றைய பாடங்களை அன்றே படியுங்கள். விளையாடும்  போதும் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கருத்துக்கு எதிரான கருத்தை சக தொண்டர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள வேண்டாம். தலைமையின் ஆணையை நீங்கள்  மீறுவது போன்ற தோற்றத்தை உருவாக்காதீர்கள். மீறி தனி ஆவர்த் தனம் வேண்டாம். கட்சி மேலிடத்து விஷயங்களை வெளியிட வேண்டாம். கோஷ்டி  பூசலில் சிக்காதீர்கள்.

கலைத்துறையினரே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இந்த  2014ம் ஆண்டு சின்னச் சின்ன சுகவீனங்கள் இருந்தாலும் பெரிய சாதனைகளை படைக்கும் சக்தியை தருவதாக அமையும்.

பரிகாரம்:
திருநெல்வேலி – பாளையங்கோட்டை – நாகர்கோவில் சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள பொன்னாக்குடி தலத்திலுள்ள உண்ணாமுலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வாருங்கள். இதுவொரு பைரவத் தலமும் ஆகும். ஏதேனும் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள்.

சிம்மம்: மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

உணர்வுப்பூர்வமாக யோசித்து அறிவுப்பூர்வமாக செயல்படுபவர்களே! இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் பிறப்பதால் சட்டென்று வசதி  வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். அதை செயல்படுத்தவும் துவங்கிவிடுவீர்கள். சாதூர்யமாகப் பேசி பல பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.  கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளால் பெருமை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கை  கேட்டு வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர்,  நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை  விற்று புது வாகனம் வாங்குவீர்கள். வருட பிறப்பு முதல் ஜூன் 12ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீரென்று செல்வம்  சேரும். இதுவரை வராதிருந்த பாக்கிகள் தானாக வந்து சேரும். செல்வச் சேர்க்கை மட்டுமல்லாது செல்வாக்கும் கூடும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.   புதிய பதவிகள் தேடி வரும். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவர்கள் மழலை பாக்யம் கிட்டும். வீட்டில் கூடுதல் அறை  அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும்.

அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். வீட்டு விசேஷங்களை முன்னின்று  நடத்துவீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் மறைவதால் வீண் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.  யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். தூக்கம்  குறையும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 9ல் கேது நிற்பதால் தந்தையாரின் உடல்நிலை மீது அக்கறையோடு இருங்கள். சாதாரண விஷயமாக இருக்குமென்று  நினைத்து அலட்சியமாக இருக்காதீர்கள். தந்தையாரோடு வீண் விவாதங்கள் வந்துபோகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.   உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால், 3ம் வீட்டில் ராகு இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என்கிற துணிவு பிறக்கும்.  எதையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் தானாக வரும். இதனால் எந்த முடிவு எடுத்தாலும் அதில் திட்டவட்டமாக இருப்பீர்கள். இளைய சகோதர வகையில்  உதவிகள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் எளிதாக முடியும்.

அரசியலில் நண்பர்களால் உங்களின் செல்வாக்கு கூடும். சொத்துச் சேர்க்கையும் உண்டு. கடந்த கால இனிய அனுபவங்களை  அவ்வப்போது நினைவு கூர்ந்து  மகிழ்வீர்கள். ஜூன் 21ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். பேசிக்  கொண்டே இருக்கும்போது கோபப்படாதீர்கள். யாரிடமும் கடுமை காட்டாது பொறுமையாக பதில் சொல்லுங்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர்  தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும்  வந்துப் போகும்.

அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண்பழிக்கு ஆளாவீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 3ம் வீட்டிலேயே நிற்பதால் பெரிய  பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இதுவரை முடங்கியிருந்தவர்கள் சுறுசுறுப்பாவார்கள். புதுத் தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள் தாராளமாக ஈடுபடலாம்.  நிறைய பேர் உதவுவதற்கு முன் வருவார்கள். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக  இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை  உருவாகும். வேற்றுமதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.

சிலர் அண்டை மாநிலம், வெளிநாட்டிற்குச் சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.  வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 4ல் சனி அமர்ந்து அர்த் தாஷ்டமச் சனியாகவும் வருவதால் தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். மூட்டு  வலி, முழங்கால் வலி, முதுகு வலி என்று சிரமங்கள் இருக்கும். அன்பு, பாசம் மிகுதியால் தாயார் ஏதேனும் உரிமையுடன் பேசினால் அதற்கெல்லாம்  வருத்தப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறையும் வந்து செல்லும். அசதி, சோர்வு, களைப்பு வந்து  நீங்கும்.

வியாபாரிகளே! போட்டிகள் கடுமையாக இருந்தாலும் வியாபாரம் செழிக்கும். வேலையாட்கள் அனுகூலமாக இருப்பார்கள். வெளிமாநிலம் மற்றும்  வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவியால் சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடு  செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை முக்கிய இடத்திற்கு மாற்றுவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ்  வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள்.

உத்யோகஸ்தர்களே! எதிர்காலம் கருதி நீங்கள் சொல்லும் கருத்துக்களை அலுவலகத்திலுள்ளோர் ஏற்றுக் கொள்வார்கள். இதனால் மேலதிகாரிகளின்  பாராட்டுக்களும் கிடைக்கும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களை கண்டு பிரமிக்கவும் செய்வார்கள். பதவி உயரும்.  சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும். 

கன்னிப்பெண்களே! காதல் இனிக்கும். கல்யாணம் கூடி வரும். தாயாரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி  பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும்.

மாணவர்களே! படிப்பில் முன்பை விட நல்ல முன்னேற்றம் உண்டு. கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில்  சேருவீர்கள். சக தோழர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

அரசியல்வாதிகளே! வெத்துப் பேச்சை தவிர்த்துவிட்டு தொகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறை கேட்பீர்கள். தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில்  கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். கட்சியில் மதிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இந்த 2014ம் ஆண்டு கனவு நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல்  நிம்மதியையும் அளிக்கும் விதமாக அமையும்.

பரிகாரம்:
கும்பகோணம் -திருவாரூர் பாதையில் நன்னிலத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு சென்று எமதர்மராஜரையும், சித்திரகுப்தரையும் தரிசித்து வாருங்கள். இத்தலத்திலுள்ள குப்த கங்கையில் நீராடுங்கள். முதியோர் இல்லங்களுக்குச் சென்று இயன்ற உதவிகளை செய்யுங்கள்.
கன்னி: உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

நல்லதோ அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டும் வல்லவர்களே! உங்கள் ராசிக்கு 4ம்  வீட்டில்  இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இதுவரை தள்ளிப் போயிருந்த காரியங்கள் யாவும் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும்.

பிரபலங்களின் பட்டியலில் இடம்  பிடிப்பீர்கள். பழைய வழக்கு ஒன்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். தாய்வழி  சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். வங்கியில் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

அம்மான், அத்தை வகையில் மதிப்பு கூடும். என்றாலும் வருடப் பிறப்பின் போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் குடும்பத்தினரோடு வீண்  வாக்குவாதங்கள் வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் பூர்வீகச் சொத்துப் பிரச்னையை பேசித் தீர்த்துக்  கொள்ளுங்கள். சொத்துக்களை வாங்கும்போது தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களெல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். வேகமாக  வாகனங்களை இயக்காதீர்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில்  அமர்ந்திருப்பதால் குழந்தைகளினால் பெருமை பெறுவீர்கள்.

2.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் நிற்பதால் பணியிடத்தில் வேலை நெருக்கடியால் அவதிப்படுவீர்கள். மறைமுக எதிரிகளால் அவமானம்  வந்து நீங்கும். அதனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். ஆனால்,  13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு பெருகும். பெரிய திட்டங்கள்  நிறைவேறும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சவாலான வேலைகளையும் சர்வசாதாரணமாக முடிப்பீர்கள்.

உங்களின் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். சொந்த பந்தங்கள் மெச்சும்படி சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். கல்வியாளர்களின் நட்பால்  தெளிவடைவீர்கள். புதுச் சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த  நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை இல்லையே என கோயில் கோயிலாக சுற்றியதற்கு இறைவன் குழந்தை பாக்யத்தை அளிப்பார்.  மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும்.

பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை ஆரோக்யமாக இருக்கும். வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருந்த  புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால்  அலட்சிய குணம் மேலோங்கியிருக்கும். எதிலுமே ஆர்வமற்ற தன்மையும், பிறர்மீது அவநம்பிக்கையுடனும் இருப்பீர்கள். சேமிப்புகளெல்லாம் வீண் செலவாகும்.  விளையாட்டாகப் பேசப்போய் அது வினையில் முடியும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்  ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எந்தக் காரியம் செய்தாலும் படபடப்புடன் செய்வீர்கள்.  அதனால் பொறுமையோடு இருப்பது நல்லது. ஒற்றைத் தலைவலி, செரிமானக் கோளாறு போன்றவை வந்துநீங்கும். வாயுத் தொந்தரவு இருப்பதால் கிழங்கு  வகைகளை தவிர்ப்பது நல்லது. யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கணவன்- மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம்  பெரிதுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். வருடத்தின் இறுதியில் 17.12.2014 வரை சனி 2ல் அமர்ந்து ஏழரைச்  சனியில் பாதச் சனியாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வந்துபோகும்.

கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது.  உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க  விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. திடீரென்று பணப் பற்றாகுறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டு சிக்கிக்  கொள்ளாதீர்கள். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 3ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களை ஏளனமாகப்  பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உங்களின் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள்.

வியாபாரிகளே! யாருக்கும் பெரியளவில் கடன் தர வேண்டாம். பற்று வரவு கணிசமாக உயரும். நவீன யுக்திகளை கையாண்டு வியாபாரத்தை  விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாகப்  பேசுவார்கள். கொஞ்சம் பெரிய நிறுவனத்தை வைத்து நடத்துபவர்கள் அயல்நாட்டு ஒப்பந்தங்களை கிடைக்கப் பெறுவார்கள். ஆனால், புதியதாக வரும்  விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.  புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெஸீட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை வேலைச்சுமை வாட்டும். உத்யோகத்தில் உங்களின் திறமையை சோதிப்பார்கள். வளைந்து கொடு த்துப் போவது  நல்லது. 13ந் தேதி முதல் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய சக ஊழியர் வேறு துறைக்கு மாற்றப்படுவார். மற்ற  அலுவலகப் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பதவி உயர்வுக்கான தேர்வை எழுதி வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு  தடையின்றி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! காதல் குழப்பங்கள் நீங்கும். உயர் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கல்யாணம் கூடி  வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

மாணவர்களே! சிலர் விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியது வரும். வகுப்பறையில் முன்வரிசையில் அமருங்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள்  மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு தகவல்களாகத் தருவது நல்லது. கட்சித் தொண்டர்களின் வீட்டு விசேஷங்களை  முன்னின்று நடத்துவீர்கள்.

கலைத்துறையினரே! புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். இந்த 2014ம் ஆண்டின் முற்பகுதி பயத்தை  தந்தாலும், பிற்பகுதி அனுசரித்துப் போவதன் மூலம் சாதிக்கவும் வைக்கும்.

பரிகாரம்:
நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிக் கோயிலில் அருளும் நீலமேகப் பெருமாளையும், லட்சுமி வராகரையும், செங்கமலவல்லித் தாயாரையும் தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.

துலாம்: சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

வனத்தில் மேய்ந்தாலும் இனத்தில் வந்து சேரணும் என்ற பழமொழியை அறிந்து செயல்படுபவர்களே! உங்களின் பாக்யாதி பதியான புதன் சாதகமான  நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதூர்யமாக செயல்பட்டு கடுமையான தருணங்களை வெற்றி கொள்வீர்கள். அரசுக் காரியங்கள்  விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பல வேலைகளை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு  மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டியிருந்ததே அந்த நிலையெல்லாம் மாறும்.

வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவலாகி வரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.  தந்தையார் வழிச் சொந்தங்கள் உதவி செய்வார்கள். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் ராசிக்கு 3ம்  வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எங்கு என்ன பேசவேண்டுமோ அதை சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.  பணப்பற்றாக்குறை தீரும். இளைய சகோதரர் உங்களுக்கு உதவியாக இருப்பார்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நீடிப்பதால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு  கிடைக்கும். விலை உயர்ந்த உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை  பைசல் செய்வீர்கள். தந்தையாருடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். எதிரிகள் நண்பர்கள£வார்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப்  புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சொந்த ஊர் கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 10ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகளை சும்மா  கிளறிக் கொண்டிருக்காதீர்கள். சிக்கல்கள் அதிகமாகும். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள்மீது சிலர் வீண்பழி சுமத்த  முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்தைப் போட வேண்டாம். இதனால் சில நேரங்களில் தர்மசங்கடமான சூழ்நிலையில்  சிக்கிக் கொள்வீர்கள். ஜூன் 20ந் தேதி வரை ராசிக்கு 7ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் ஆரோக்யம் பாதிக்கும். மூச்சுத் திணறல்,  அல்சர், இரத்த சோகை வந்து நீங்கும்.

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதுதான் இந்த நேரத்தில் நல்லது. பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி  உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால்  ஆதாயமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் கட்டி வந்து நீங்கும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12ம் வீட்டிலும், கேது 6ம் வீட்டிலும் தொடர்வதால் மனப் போராட்டங்கள் ஓயும்.  கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். ஷேர் லாபம் தரும். இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாகவும், வருடத்தின்  இறுதியில் 18.12.2014 முதல் 2ல் அமர்ந்து பாதச் சனியாகவும் வருவதால் வீண் வம்பு சண்டைகளுக்கு போகக் கூடாது. உங்களைப் பற்றி அவதூறு  பரப்புபவர்கள் அதிகமாவார்கள். எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள்.

சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். போதை வஸ்துக்களை தவிர்த்து விடுங்கள்.  உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க  முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். முக்கிய காரியங்களுக்காக  இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

வியாபாரிகளே! வருடத்தின் தொடக்கத்தில் லாபம் அதிகரிப்பதால் அளவுக்கு அதிகமாக முதலீட்டை தவிர்த்து விடுங்கள். அளவுக்கு மீறியும் கடன் தர  வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களோடு கருத்து மோதல்கள் வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி  வசூலிக்கப் பாருங்கள். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மளிகை பொருட்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களால் லாபம் பெருகும். பங்குதாரர்களுடன்  அவ்வப்போது உரசல்கள் வந்து நீங்கும். கொடுக்கல்வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகளை கொள்முதல் செய்யும்போது கவனம் தேவை. சந்தை  நிலவரத்தை தெரிந்துகொண்டு செயல்படப் பாருங்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் பெரிய அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களை மதிப்பார்கள்.  உங்களின் வேலை மீது மரியாதை கூடும். ஆனால், ஜூன் 13ந் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக்கும். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வேலையைச்  செய்வது நல்லதாகும். புலம்பத் தொடங்கினால் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். பதவி உயர்வு, சம்பள பாக்கி தானாகக் கிடைக்கும்.

அவ்வப்போது சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்களே! உங்கள் ரசனைக்கேற்ற நல்ல மணமகன் அமைவார். நண்பர்களுடன் யதார்த்தமாகப் பேசி எதிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். சமயோஜித  புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள். காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். மாணவர்களே! அறிவியல் பாடத்தில் கவனம்  செலுத்துங்கள். டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். எப்போதும்  அரட்டைப் பேச்சு வேண்டாமே! விளையாடும் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகாக்களுடன் உரிமையோடு பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். தொகுதியில்  நல்ல மதிப்பு கிடைக்கும்.

லைத்துறையினரே! விமர்சனங்களால் பாதிக்கப்படாதீர்கள். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைத்து புதிய வாய்ப்புகளை கொடுக்கும். மூத்த கலைஞர்கள்  உதவுவார்கள். இந்த 2014ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பக்கம் அலைக்கழிப்புகள் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூர் தலத்தில் அருள்பாலிக்கும் ஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீ ராமானுஜரையும் தரிசித்து வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

விருச்சிகம்: விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

ஆரவாரத்துடன் அடுக்கும் மொழியாகப் பேசாமல் நறுக்கென்று நாலு வார்த்தை சொல்பவர்களே! உங்கள் ராசிக்கு தனஸ்தானமான  2ம் வீட்டில் சந்திரன்  நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செல்வச் சேர்க்கை உண்டு.

வீட்டில் வெகுநாட்களாக தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இனி தொடர்ந்து  நடைபெறும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக வளம் வருவீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும்  போது இந்தாண்டு பிறப்பதால் கடந்த காலக் கனவுகளெல்லாம் நனவுகளாகும்.

இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டேயிருப்பீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்  பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் கூடி வரும். உங்களின் தனித்திறமை வெளிப்படும். இதுவரை உங்கள் புகழுக்கு கலங்கம்  ஏற்படுத்த முயற்சித்தவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.  கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவன வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு  வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.
4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 1.9.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால்  ஆரோக்ய குறைவு ஏற்படும். இரவு நேரப் பிரயாணங்களின்போது சுயமாக வெகுதூரம் வாகனத்தை இயக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள்  வந்து நீங்கும். 2.9.2014 முதல் செவ்வாய் வலுவடைவதால் உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம்  வீட்டில் நிற்பதால் வீண் அலைச்சல்கள் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும்.  பாகப் பிரிவினையில் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. சிலர் புது வழக்கறிஞரை தேடிச் செல்வீர்கள்.

இதனால் மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துபோகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சமூக எதிர்  நடவடிக்கைகள் உள்ளவர்களின் நட்பைத் தவிர்க்கப் பாருங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டிய சூழ்நிலை வரும். அசிடிட்டி தொந்தரவுகள் வந்து நீங்கும்.  ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 9ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும்  மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.  குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான கருத்து மோதல்கள்  விலகும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களைச் சுற்றியுள்ள நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை உணருவீர்கள்.  மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள்.  கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 5ம் வீட்டில் அமர்வதால்  பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிலசமயம்  தாமதமாகத்தான் முடியும்.

கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது  நல்லது. ஆனால் ராகு 11ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்று மதத்தவர்கள்  உதவுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 12ல் மறைந்து விரயச் சனியாகவும் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச்   சனியாகவும் வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருங்கள். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்து கொண்டேதான் இருக்கும். கனவுத்  தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து  முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். வாயு  பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப் பாருங்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும். நிறைய காய், கனிகளை உட்கொள்வது நல்லது.

வியாபாரிகளே! ஜூன் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். பக்கத்து கடைக்காரருடன் தகராறு, சரக்குகள் தேங்கியதால் நஷ்டம் என தொடர் சிக்கல்களை  சந்தித்தீர்களே! அந்த நிலையெல்லாம் இப்போது மாறும். அரசியல்வாதிகளின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த பழைய  சரக்குகளையும் விற்றுத்தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாகவும் வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக்  கொள்ளாதீர்கள். வேற்றுமாநிலத்தை சார்ந்த வேலையாட்களால் நிம்மதி கிடைக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி -இறக்குமதி வகைகளால்  லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை கடுமையாக உழைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லையே என்று வருந்துவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல்  அலுவலகத்தில் உங்கள் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளையும்  ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள். இடமாற்றம் நிச்சயம் உண்டு. அரசுத் துறையில் வேலை  பார்ப்போர் பதவி உயர்விற்காக சில தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவார்கள்.

கன்னிப் பெண்களே! விரக்தி, சோம்பல் விலகும். மிகவும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். அறிவுக் கூர்மை வெளிப்படும்.  உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நீங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல வரனும் அமையும். திருமணம் கோலாகலமாக நடக்கும். காதல் விவகாரத்தை  சற்று தள்ளிப் போடுவது நல்லது.

மாணவர்களே! கலைப் போட்டிகளில் காட்டும் அக்கறையை கல்வியிலும் காட்டுங்கள். கணக்கு, அறிவியல் மற்றும் மொழிப் பாடங்களில் அக்கறை காட்டிப்  படியுங்கள். வகுப்பாசிரியர் அவ்வப்போது உற்சாகப்படுத்தும்படியாக பாராட்டுவார்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கவனம் உங்கள் மீது விழும். பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தொகுதி மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பீர்கள்.

கலைத்துறையினரே! உங்களிடமிருந்து அற்புதமான படைப்புகள் வெளிவரும். மூத்த கலைஞர்கள் கூப்பிட்டு பாராட்டுவார்கள். இந்த 2014ம் ஆண்டு மனதில் சந்தோஷத்தையும் வசதியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
காரைக்குடிக்கு அருகேயுள்ள குன்றக்குடி முருகனை சஷ்டி திதியன்று சென்று தரிசித்து விட்டு வாருங்கள். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த தானமோ அல்லது இயன்ற மருத்துவ உதவிகளையோ செய்யுங்கள்.

தனுசு: மூல ம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

மறப்போம் மன்னிப்போம் என்கிற கொள்கையை உடையவர்களே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் நிற்பதால்  தடைபட்டிருந்த வேலைகளெல்லாம் மடமடவென்று முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவீர்கள். தள்ளிப்போன திருமணம்  தடபுடலாக நடக்கும். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. கௌரவப் பதவிகள் தேடிவரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால்  உதவியுண்டு. பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள்.

வருடப் பிறப்பின் போது செவ்வாய் 10ம் வீட்டில் நிற்பதால் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வேலை கிடைக்கும். அதிலும் நீங்கள் விரும்பிய அயல்நாட்டு  நிறுவனத்திலிருந்தே அழைப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். கடன் வாங்கியாவது சொந்த வீடு  வாங்குவதில் மும்முரமாக இருப்பீர்கள். அநாவசியமாகப் பேசி நண்பர்களை இழந்தீர்களே இனி, நிதானமாகப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளால் உதவிகள்  கிடைக்கப் பெறுவீர்கள். வெகுநாட்களாக தடைபட்டிருந்த சகோதரியின் திருமணத்தை சீரும் சிறப்புமாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்திலுள்ள வழக்கில் வெற்றி  பெறுவீர்கள்.

12.6.2014 வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் இதுவரையிலும் உங்களுக்குள் இருந்த திறமைகள் தாமாக  வெளிப்படும். அழகோடு கம்பீரமும் கூடியிருக்கும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ஒத்து வராத,  உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 8ம் வீட்டில் மறைவதால் உங்களைப்  பற்றிய அவதூறுகளைப் பரப்புவார்கள். ஆனால், நீங்கள் எதையுமே பொருட்படுத்த வேண்டாம்.

எத்தனைதான் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தாலும் அத்தியாவசிய மற்றும் அநாவசியச் செலவுகளும் வந்து கொண்டுதான் இருக்கும்.  அலுவலக ஆவணங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். தாயாரோடு வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வந்து  நீங்கும். தாய்வழி சொத்தை பெறுவதில் சிக்கல்கள் வந்து செல்லும். உங்களின் திறமை மீது உங்களுக்கே அவ்வப்போது சந்தேகம் வரும். ஆழ்ந்த உறக்கம்  இல்லாமல் அடிக்கடி மன அழுத்தம் உண்டாகும். ஊர் பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனை அவ்வப்போது நிறைவேற்றுவீர்கள். மகள் உங்களை புரிந்து கொள்வார். மகனின் அலட்சிய குணமும்  மாறும். தந்தையாரோடு இருந்த மனவருத்தம் நீங்கும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளால் சில பிரச்னைகள் வந்துபோகும். சுற்றிய நண்பர்களை கொஞ்சம் கண்காணித்து  வையுங்கள். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம்.

பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய  அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு.  21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம்  வீட்டிலும் அமர்வதால் சிலருடைய நிழல் வாழ்க்கையும் தெரிய வரும். எதிர்காலம்  என்னாகுமோ என்கிற கவலை அடி மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் பிடிக்கிறதா என்று பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை  உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. இந்தாண்டு முழுக்க சனி 11ம் வீட்டான லாப வீட்டில் தொடர்வதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானம்  உயரும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீடு வாங்குவீர்கள். சிறிய அளவிலான முதலீடாக இருந்தாலும் புதிய தொழிலைத்  தொடங்குவீர்கள்.

சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 12ல்  மறைந்து ஏழரைச் சனியின் தொடக்கமான விரையச் சனி தொடங்குவதால் தூக்கமில்லாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது. உங்கள்  பலம், பலவீனமறிந்து செயல்படப்பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். சொத்து மற்றும் முக்கிய ஆவணங்களில்  கையெழுத்திடும் முன்பு சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரிகளே! வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட நஷ்டங்களை சரி செய்வீர்கள். புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். ஏமாற்றிக்  கொண்டிருக்கும் வேலையாட்களை நீக்கிவிட்டு தகுதியான, அனுபவமிக்க, பொறுப்புணர்வு வாய்ந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.  போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது ஏஜென்சியும் எடுப்பீர்கள். அயல்நாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பேன்ஸி ஸ்டோர், உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால்  லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை அலுவலகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். ஆனால், 13ந் தேதி முதல் பணிச்சுமை  கூடும். மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் இதுதான் சமயமென்று மறைமுகமாக உங்களைப்பற்றி புகார் கூறுவார்கள்.  எனவே, அமைதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து விடுங்கள். இதனால் பதவி உயர்வும் தள்ளிப் போகும். ஆனால், வருடத்தில் இறுதியில்  உங்களின் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பதவி உயர்வுப் பட்டியலில் உங்கள் பெயரும் இடம்  பெறும்.

கன்னிப் பெண்களே! நல்ல கணவர் வந்தமைவார். சிலருக்கு வேற்று மாநிலத்திலும் வேலை கிடைக்கக் கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேற்று  மதத்தைச் சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள்.

மாணவர்களே! படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். வகுப்பறையில் சக மாணவர்களின் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். உயர் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று  எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி நடத்தும் அனைத்து பொதுக்கூட்டம், போராட்டங்களில் கலந்து கொள்வீர்கள். கட்சியின் தலைமையிடம் உங்களைப் பற்றி  நல்லவிதமான அபிப்ராயத்தை சொல்வார்கள்.

கலைத்துறையினரே! மாறுபட்ட சிந்தனை பிறக்கும். உங்களின் புது முயற்சிகள் வெற்றிபெறும். இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட சமூகத்தில்  அந்தஸ்தையும் வீடு, மனை, வாகன யோகத்தையும் அள்ளித் தரும்.

பரிகாரம்:
திருச்சி -கரூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள திருச்செந்துறை எனும் தலத்திலுள்ள மானேந்தியவல்லி உடனுறை சந்திரசேகர சுவாமியை தரிசித்து விட்டு வாருங்கள். வயதான முதியோர்களுக்கு கம்பளி, செருப்பு போன்றவற்றோடு அவ்வப் போது முடிந்தவரை உதவி செய்யுங்கள்.

மகரம்: உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை  நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

கிழக்கும் மேற்கும் அலைந்தாலும் கிடைப்பதுதான் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்தவர்களே! உங்கள் ராசிக்குள்ளேயே பிரபல யோகாதிபதியான சுக்கிரன்  அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வசதி வாய்ப்புகளில் பலபடி உயரும். தோற்றப் பொலிவு கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு  வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.  உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதால் நீங்கள் வாங்கியிருந்த இடத்தில் திருப்பித் தர முடியாமல் திண்டாடினீர்களே! அந்த நிலையெல்லம்  மாறும்.

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் பிறப்பதால் பழைய கனவுகளெல்லாம் நிறைவேறும். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.  பட்டுப்போன மரம் துளிர்ப்பதுபோல  இனி எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம்  வேண்டாம். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் அலுவலகச் சூழலே கொஞ்சம்  டென்ஷனாகத்தான் இருக்கும். பணிச்சுமை கூடுதலாக இருப்பதால் அவ்வப்போது மேலதிகாரியிடம் புலம்பவும் செய்வீர்கள்.

இதனால் அலுவலக வேலையில் சுணக்கம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். ஆனால், 13.6.2014  முதல் வருடம் முடியும் வரை குரு 7ம் வீட் டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில் நிறைய  வாய்ப்புகள் வரும். உங்களை அறியாமல் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் நடக்க இருந்த  சுபநிகழ்ச்சிகள் இனி விமரிசையோடு நடக்கும்.

கணவன் -மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த  வருடத்தில் மழலை பாக்கியம் கிட்டும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்யம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே!  அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை புரிந்து  கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் சிலர் உங்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தும்  வாய்ப்பு இருக்கிறது. இதனால் உத்யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்று பயப்பட வேண்டாம். ஆனால், இரவில் தனியே சுயமாக வாகனம்  ஓட்டும்போது மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லது தனியாக நெடுந்தூரம் வாகனத்தை இயக்குவதை தவிர்த்து விடுங்கள். மேலும், காரியத்  தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால்  சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படு த்திக்  கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில்  ஆதாய மடைவீர்கள். ஆனால் ராகு 9ம் வீட்டில் நிற்பதால் அநாவசியச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பூர்வீகச்  சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை  சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவாலான  பணிகளை சர்வ சாதாரணமாக செய்வீர்கள்.

ஆனாலும், அலுவலகத்தில் ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்குமாக உங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப  அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர்  யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது  வேலைக்கான முயற்சியில் வெற்றி பெற்று நல்ல இடத்தில் வேலையில் அமருவீர்கள். பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர்  உதவுவார்.

வியாபாரிகளே! ஜூன் மாதம் முதல் வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்கள் போன்றவற்றிலிருந்து மீள்வீர்கள். தரமான சரக்குகளை மொத்த  விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர நவீன  யுக்திகளை கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களோடு  வெளிப்படையாக இருப்பது நல்லது. கம்ப்யூட்டர் உதிரி  பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்யோகஸ்தர்களே! நீங்கள் இழந்த பொறுப்புகளை மீண்டும் பெறுவீர்கள். நிர்வாகத் திறனும் அதிகரிக்கும். அலுவலகச் சூழ்நிலை அமைதியாக இருக்கும்.  உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்களின் திறமைக்கு மதிப்பு கொடுப்பார். உங்களைப்  பாராட்டும்படி நிலைமை சீராகும். கூடுதல்  சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும் 10ல் சனி தொடர்வதால்  மறைமுக பிரச்னைகள் இருக்கும். ஜூன் மாதம் முதல் பதவி  உயர்வோடு சம்பள உயர்வும் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! புதிய வேலைக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். நல்ல இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே வரன்  அமையும். கல்யாணம் விமரிசையாக நடக்கும். காதல் குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி  செய்வீர்கள்.

மாணவர்களே! வகுப்பாசிரியர் உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின்  அறிமுகம் கிடைக்கும். விளையாடும்போது காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்திப் படியுங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார். மக்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்க்கட்சியினரும் மதிக்கும்படி சில  கருத்துக்களை வெளியிடுவீர்கள்.

கலைத்துறையினரே! உயிரோட்டமான படைப்புகளைத் தருவீர்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். இந்தப் புத்தாண்டு பதுங்கியிருந்த  உங்களை பளிச்சென முன்னேற வைக்கும்.

பரிகாரம்:
கும்பகோணம் – திருவாரூர் சாலையிலுள்ள சிவபுரம் தலத்தில் அருளும் சிவகுருநாத சுவாமியையும், சிங்காரவல்லியையும் தரிசித்து வாருங்கள். அவ்வப்போது அன்னதானமும் செய்யுங்கள்.
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் என்பதை உணர்ந்த வர்களே! உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால்  தொட்டதெல்லாம் துலங்கும். கடினமான வேலைகளை கூட பரபரவென முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு  கிடைக்கும். பிரபலங்கள் உதவிகரமாக  இருப்பார்கள். பணப் புழக்கம் பரவலாக இருக்கும். காற்றோட்டமும் நல்ல குடிநீர் வசதியும் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். எப்போதும் சண்டை சச்சரவாக இருந்த  வீடு இனி அமைதியாகும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள்.

இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பீர்கள். அரசாங்க விஷயங்களை எளிதாக  முடிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8ல் செவ்வாய் மறைந்திருப்பதால் வாகனத்தில் செல்லும்போது மெதுவாகச் செல்லவும். சிறுசிறு விபத்துகள்  ஏற்படும்  வாய்ப்புகள் உண்டு. இரவு நேரங்களில் நெடுந்தூர பயணத்தை மேற்கொள்ளும்போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.

முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். இல்லையெனில் மனக்கசப்புகள் வரும். உங்கள்  இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள். யாருக்காகவும் ஜாமீன்,  கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சரிக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது  நல்லது.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் சான்றோர்களின் நட்பு கிடைக்கும். பிரச்னைகளெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல மறையும்.  வெகுநாட்கள் தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை இல்லையே தவித்தோருக்கு மழலை பாக்யம் கிட்டும். மகளின் திருமணத்தை  சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று  நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 6ம் வீட்டிலேயே மறைவதால் காரியத் தடைகள் வந்து கொண்டே இருக்கும். பல முயற்சிகளுக்குப்  பிறகுதான் காரியங்களை முடிக்க  வேண்டியது இருக்கும். அதனால் இந்த காலகட்டத்தில் பொறுமையை இழக்காமல் அமைதியாக இருங்கள். சிலர் தங்களின்  ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய   வேண்டாம். எதிர்காலம் குறித்த முக்கிய விஷயங்களில் பிள்ளைகள் உங்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கக் கூடும். கணவன்- மனைவிக்கும் ஒளிவு மறைவு  இல்லாமல் பழகுவது நல்லது.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் கேது நிற்பதால் கொஞ்சம் நிம்மதி அடைவீர்கள். திட்டமிட்டபடி காரியங்கள் தானாக நடக்கத் தொடங்கும். ஷேர்  மூலம் பணம் வரும். வேற்று மதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு சேமித்தாலும் வீண்  செலவுகளுக்காகவே பணம் விரயமாகும். பணப் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவரோடு வாக்கு
வாதங்களும் வந்துசெல்லும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது  உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8ம் வீட்டிலும் அமர்வதால் பதட்டத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.  சாதாரணமாகப் பேசப்போய்  மாபெரும் சண்டையில் முடிந்து விடும் வாய்ப்பு இருப்பதால் வீணான வாக்குவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது.  வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கண், பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களை யெல்லாம் அவ்வப்போது  நினைவுக்கூர்ந்து பேசாதீர்கள். இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் வெற்றியை நோக்கியே மனம் சென்று  கொண்டிருக்கும்.

எத்தனை பிரச்னைகள் வந்தாலும் உள்ளுக்குள் எதையும் ஜெயித்து விடலாம் என்கிற உறுதி இருக்கும். அத்தியாவசியமான செலவுகள் குறைக்க முடியாது.  சொத்து வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆனால், வருடத்தின்  இறுதியில் 18.12.2014 முதல் சனி 10ல் அமர்வதால் என்ன செய்தால் வெற்றி பெறலாம் என்று யோசிப்பீர்கள். வெறும் பேச்சு எதற்கும் உதவாது என்று  முடிவெடுப்பீர்கள். காரியத்தில் கண் வைப்பீர்கள். இதனால் புது பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

வியாபாரிகளே! லாபம் சுமாராக இருக்கும். அதனால் சட்டத்திற்குப் புறம்பான வகையில் செல்ல வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் எதையும்  செய்யாதீர்கள். வேலையாட்களையும் விரட்டாதீர்கள். தொழில் ரகசியங்களையும் சொல்ல வேண்டாம். சந்தை நிலவர த்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். வேலையாட்களால் சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். துரித உணவகம்,  நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்கள் கைக்கு வரும்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை அலுவலகப் பணிகளை வேகமாக மடமடவென்று முடிப்பீர்கள். 13ந் தேதி முதல் உங்களையும் அறியாமல் வேலை  குறித்த அச்சம் வரும். சக ஊழியர்களைப் பற்றிக் குறை கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

கன்னிப்பெண்களே! உங்களின் எதிர்பார்ப்புப்படி நல்ல வேலையிலுள்ள வரன் வரும். திருமணமும் நல்லபடியாக முடியும். பெற்றோரை தவறாக புரிந்து கொள்ள  வேண்டாம். நியாயமான ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

மாணவர்களே! விடைகளை ஒருமுறைக்கு நான்கு முறை எழுதிப் பாருங்கள். வகுப்பறையில் முன் வரிசையில் அமருங்கள். தெரியாதவற்றை ஆசிரியரிடம்  கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம்  கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமைக்கு தெரியப்படுத்துவது நல்லது. எதிர்க்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை  பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.

கலைத்துறையினரே! உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏமாற வேண்டாம். படைப்புகளை போராடி வெளியிட  வேண்டி வரும். இந்தப் புத்தாண்டு ஒரு பயத்தையும் கேள்விக் குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலம் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:
திருப்பத்தூர் – காரைக்குடி பாதையில் 8 கி.மீ. தொலைவிலுள்ள வைரவன்பட்டியில் அருளும் பைரவரை தரிசித்து வாருங்கள். சிவாலய உழவாரத் திருப்பணியை அவ்வப்போது மேற்கொள்ளுங்கள்.

மீனம்: பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

எறும்பைப்போல் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களே! உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பழைய கசப்பான  அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். புதிய அனுபவங்களை சுமந்து கொண்டு இனி பயணிப்பீர்கள். சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும்,  வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பெரிய நிறுவனம்  உங்களை நல்ல சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக்கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டிலேயே சூரியனும், புதனும் நிற்கும்போது பிறப்பதால் உங்களின்  நிர்வாகத் திறன் கூடும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கில்  உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். அரசாங்க  விஷயங்கள் எளிதாக முடியும். வெளிநாட்டிற்குச் செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள் வீட்டு  விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் அலுவலகச் சூழல் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருக்கும். எப்போதும் பதட்ட த்துடன்  காணப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்யம் கொஞ்சம் பாதித்து பின்னர் சரியாகும். தாயாருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும். தாய்வழி  உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம்  வாங்குவீர்கள்.

ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 5ம் வீட்டிலேயே அமர்வதால் மனதில் நிம்மதி பிறக்கும். இதுவரை வீட்டில் தடைபட்டுக் கொண்டிருந்த  சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். புதியதாக வீட்டு மனை வாங்குவீர்கள். வருமானத்தை உயர்த்த பல்வேறு விதங்களில் யோசிப்பீர்கள். வெகுநாட்களாக குழந்தை  பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலை பாக்யம் கிட்டும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்டு நடப்பார்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். மகனுக்கு  எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் கேதுவும், 8ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் மறைமுக எதிரிகள் ஏமாற்றுவதற்கு முயற்சிப்பார்கள். அதனால்  கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். மேலும் வாகனத்தை வேகமாக  இயக்க வேண்டாம். சிறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதிகம் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி மற்றும் கணுக்கால் வலி  வந்து நீங்கும்.
21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது  பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் கோயில் விசேஷங்களை  முன்னின்று நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செ ன்று நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. என்றாலும் தூக்கம்  குறையும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற  வேண்டாம். கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னையால் பிரிவு வரக்கூடும். மனைவிக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு  நோய், மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். இந்தாண்டு முழுக்க சனி 8ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் உணர்ச்சிவசப்பட்டு பேசி வார்த்தைகளை  இறைக்காதீர்கள். கொடுத்து ஏமார்ந்து போன பணத்தை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளி ஊருக்குச் செல்லும் முன்  சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து விட்டுச் செல்லுங்கள். தாழ்வுமனப் பான்மை தலைத்தூக்கும். கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது  நல்லது. வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 9ம் வீட்டில் அமர்வதால் தெளிவாக எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள். மற்றவர்களின்  மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரிகளே! அஷ்டமத்துச் சனி தொடர்வதால் கடன் வாங்கி பெரிய முதலீடுகள் செய்து வியாபாரம் தொடங்க வேண்டாம். ஜூன் மாதம் முதல் போட்டிகளில்  வியாபாரத்தை எத்தனை போட்டிகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி  விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின்  ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். எனவே, வேலையாட்களிடம் ரொம்பவும் கண்டிப்பு காட்டாதீர்கள். ஏற்றுமதி -இறக்குமதி, எண்டர்பிரைசஸ், மரம்,  ஸ்டேஷனரி, கல்வி நிறுவனங்கள், எரிபொருள் வகைகளால் லாபம் பெ ருகும். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவார்கள்.  கடையை மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். சிலர் தனியாகப் பிரிந்து சென்று புதுத் தொழில் தொடங்குவீர்கள். வாகன உதிரி பாகங்களிலும்  நல்ல லாபம் கிட்டும்.

உத்யோகஸ்தர்களே! ஜூன் 12ந் தேதி வரை அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் உங்களின் திறமைகளை  புரிந்து கொண்டு ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். திறமையிருந்தும் கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக்  கொண்டே இருந்தீர்களே அந்த நிலையெல்லாம் மாறும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பளம் உயரும். சக ஊழியர்களுக்கும் உங்களுக்கும்  முக்கியத்துவம் தருவார்கள். இழந்த சலுகைகளை மீட்பீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் பலருக்கு உயர்கல்விதான் முக்கியம் என்று தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள். மே மாதம் வரையிலும் குழப்பங்கள் இருந்து  பிறகு சரியாகும். அதற்குப் பிறகு அலைச்சல், டென்ஷன் போன்றவை நீங்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். தாயார்  பேச்சுக்கு கோபப்படக் கூடாது. திருமணமும் கூடி வரும்.

மாணவர்களே! படித்தால் மட்டும் போதாது விடைகளை எழுதிப் பாருங்கள். கடினமாக உழைத்து அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கவிதை, கட்டுரைப்  போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டு பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்கள், மறைமுக எதிரிகள் இவர்களிடமிருந்து விடுபட்டு தலைமைக்கு நெருக்கமாவீர்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.
கலைத்துறையினரே! நல்ல படைப்பு உங்களிடமிருந்து வெளிவரும். பெரும் பாராட்டுகள் கிடைக்கும். மூத்த கலைஞர்கள் தாங்களாக வந்து பாராட்டுவார்கள்.  வாடிப் போயிருந்த உங்களை இந்தப் புத்தாண்டு வளம் பெற வைக்கும்.

பரிகாரம்:
நாகப்பட்டினம் தலத்தில் அருளும் சௌந்தரராஜப் பெருமாளையும், ஸ்ரீராமரையும் தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியரை மறக்காது சென்று பார்த்து விசாரித்து இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

http://panippulam.co…&Itemid=388

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s