Wishes for…

Vathu sethi- arulchelvan vathu sethi – aruchelvan.stonleigh amman

Vathu sethi- arulchelvan

அகவை இரண்டில் கால்பதிக்கும் 

அருளகம் இணையத்தின் சேவைகள் தொடர 
நல்வாழ்த்துக்கள் .
 
மறைபொருள் தேடும்
மனிதர்க்கெல்லாம்
அகத்தினில் அருளினைக்கொண்டுவரும்
அற்புத இணையம் அருளகம் .
 
தேடிப்பெற தேவையான இணையங்கள் பல
அருளினை நாடிப்பெற ஒரேஒரு இணையம் இதுவே
உலகப்பந்தில் உள்ள இந்து சமய செய்திகளை
விரல் நுனியில் கொண்டுவந்த
மிகப்பெரிய சிறப்பு
அருளகமே!உனக்குத்தான் 
 
இளமை பருவத்தில் பொருள்தேடி அலைவதும்
இரத்த மிடுக்கில் சலன,சபல வாழ்வில் உழர்வதும்
மானிட வாழ்வில் அன்றாடம் காணும் காட்சிகளே
வாழ்வென்பது பல பக்கங்களை கொண்ட அற்புதமான நூல்
அதில் ஒரு சில பக்கங்களை தொட்டுவிட்டு
பலர் மடிந்து விடுகின்றார்கள்
 
கணணி உலகில் கடுகதி வாழ்வில்
காலம் நம்மை கரைத்து விடுகின்றது
கற்க வேண்டிய படங்கள்
காண வேண்டிய காட்சிகள் பற்பல
நம் கால்களை சுற்றி இருக்கின்றன .
 
இவற்றினைப்பற்றி கடுகளவேனும் உணர்ந்தோமா ?
இல்லவேயில்லை இதனை நம் கரங்களில் கொண்டுவந்து தர
அருளகம் இணையத்தின் இயக்குனர்
திரு .அருட்செல்வன் அவர்களின் 
கடுமையான உழைப்பினை
பாராட்டியே ஆகவேண்டும் .
 
அகவை இரண்டில் காலடி பாதிக்கும்
அருளகம் இணையம்
தமிழ் சமுதாயத்தின் கலை ,கலாச்சார அங்கங்களையும்
தன்னுள் அமைத்து எம் இனத்தின்
இளைய தலைமுறையினருக்கு
அரும்பணியாற்ற எல்லாம் வல்ல
இறையருளினை வேண்டி
வாழ்த்தி வணங்குகின்றேன்
சுபம் .

என்றும் அன்புடன்

இளைய தம்பி  யோகேந்திரன்

ஒஸ்லோ ,நோர்வே

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருளகம்” –  அருணா, கனடா 

Subramanian Krishnan

நீங்க தமிழுக்கு ஆற்றும் தொண்டு சிறந்தது   வாழ்க வளமுடன்

Uthaya Kumar  – “many more happy return of the day”

அகவை இரண்டில் கால்பதிக்கும்
அருளகம் இணையத்தின் சேவைகள் தொடர
நல்வாழ்த்துக்கள் .நண்பரே.. தொடரட்டும் தங்களது வெற்றிப்பயணம்!

Sivayogi Sivakumar
“எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழ இறைமையை அருள்வதாக …இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Madhav Kumar

happy birthday to hope u
will always have a good health,
More career in life..
And hope that more birthdays to
come..
Always take care.
happy bday

Mailai Nathan

அருளகமே!உனக்குத்தான் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!

Kumarathasan Kumarasamy

Many more happy returns of the day.

இதுவரை இல்லாத அளவிற்கு எல்லாம் வல்ல
இறைவன் ஆசியால் சந்தோஷமான ஆரோக்கியகமான
வளமான வாழ்வு அமைய தங்களை பல்லாண்டு
வளமோடு வாழ வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்
கேப்டனின் துபாய் வாழ் தம்பிகள்
Excellent முருகேஷ் – செயலாளர் – தே.மு.தி.க – துபாய் (பிரிவு)
திருவாரூர் ரவிச்சந்திரன் – து.செயலாளர்
பெரம்பலூர் குமார் – பொறுப்பாளர் – தெய்ரா கிளை
பொறியாளர் புதுகை சுரேஷ் – பொறுப்பாளர் – சார்ஜா கிளை
பெரம்பலூர் வரதராஜ் – பொறுப்பாளர் – தமிழ் பஜார் (நைப்) கிளை
மதுரை கார்ல் மார்க்ஸ் – பொறுப்பாளர் – அபுதாபி கிளை
விழுப்புரம் தங்கராஜ் – பொறுப்பாளர் – அஜ்மான் கிளை
சேலம் செல்வமணி – பொறுப்பாளர் – ஜபல் அலி கிளை
புதுக்கோட்டை முகமது இரபிக்
பெரம்பலூர் ஜெயபிரகாஷ்
மதுரை (பாடகர்) பிரதீப் – கலைக்குழு
சேலம் Dr.சுந்தர் –
இ.வே. சதீசு குமா

இ.வே. சதீசு குமா

iniya pirantha naal vaazhthugal ayya

Devi Krisahnasamy

Happy birthday to u…….

Anbu Kumar
என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்… அன்புடன் அன்பு…. “

Lovedale Madyy
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ….

வாழ்க வளமுடன்….. வாழ்க பல்லாண்டு… – லவ்டேல் மேடி.”

வாழ்த்துகள் நண்பரே

Singapore Dmk’s post in சிங்கப்பூர் தி.மு.க

Sivachandran Ayya Gopalsamy 29 September 16:40
valthukkal

Ramadasnatarajan

Your Happy Birthday
Your Happy Birthday! Card
I Created a Special Birthday Card for You!

I Created a Special Birthday Card for You!
Happy Birthday!

Your Happy Birthday! Card
சோலை மாரியப்பன்

“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்”
Your Happy Birthday! Card

I Created a Special Birthday Card for You!
Happy Birthday!

Nellai R. Thavasi Murugan
“அன்பு நிலைபெற !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமரியாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !”
Uthaya Kumar
“many more happy return of the day”
Kannan Hmk
“happy birthday”

Jain Koo Pee

திருமதி இந்திரா சிவயோகம் FRCS(Eng.)FRC.Ophth ேத்திர சத்திர சிகிச்சை நிபுணர்

It gives me great pleasure in congratulating the Web Architect of the Website ARUL AKAM- AULANANTHAM ARULCHELVAN, on the occasion of completing the first year of its inauguration on 30th September. This website has lived upto the expectations of its innumerable viewers to be a source of knowledge of Saiva Sidhantham, being especially targeted at the youth, citizens of the future, to enable them to lead spiritually profitable lives for themselves and Society at large. That the Anniversary should also fall during the Spiritually potent period of Navarathri- Celebrations exalting the Energising component of Divinity, SHAKTHI- is even testimony to the immeasurable Grace flowing from Goddess SRI RAJA RAJESWARY to whom this Web Architect is devoted. AUM HREEM NAMASIVAYA Dr . Mrs Indra . SIVAYOHAM

Congratulations to Arulakam on its First Anniversary!

It is with great pleasure and warm feelings that I send my felicitation to Sree Arulanantham Arulchelvan on the first anniversary of the website Arulakam which he established on 30thSeptember 2010 with the aim and dedication to propagate the rich history, traditions and culture of the Tamils and the Hindu religion, especially Saivism around the world.

The choice of subjects, contents and architecture of the website have been focused at the youth living in developed countries to cultivate and enrich their knowledge and taste for a wide range of traditional South Indian and Sri Lankan Tamil culture and Hindu religious practices to enable future generations to uphold our rich traditions in the society.  

The wider popularity of the website and the quality of its contents and presentation in both English and Tamil have been proved beyond  any doubt by over 29000 hits  received within the first year of its existence.

It is most fortunate and most fitting that with the Grace and Blessing of Sri Rajarajeswary Ambal residing at Stoneleigh in the UK, the first anniversary falls in the period of Navarathiri when Hindus offer their worship and prayers to Durga, Laxmi and Saraswathy the Goddesses of energy, wealth and wisdom.  Therefore, I am sure that Arulakam will thrive and prosper for many more years to come in providing knowledge, information and happiness to many around the world. 

Chelliah Krishnamoorthy

On Behalf of the Hindu Association of Great Britain

பரமரகசியம்

http://paramarakasiyam.wordpress.com

அருளகமே நீ வாழ்க !வளர்க !

அருள் என்றால் புலன்களையும் மனதையும் கடந்து 

உள்ளுணர்வாக உணரப்படும், உயிருக்குரிய ஆரோக்கிய 
உணர்வாகும் .அகம் என்றால் மனத்தைக் கடந்த உள் நிலை .
அருளகம் என்றால் ஆரோக்கிய உணர்வு நிறைந்த உள்நிலை 
எனப் பொருள்படும். இன்று முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட 
உள்ளங்களில் அருள் மலர்களை மலர வைத்துக் கொண்டும் ,
தமிழர்களின் தாகம் தணிவதற்குத் தற்குறைவாக இருந்த 
ஆன்மபலத்தை வளர்த்துக்கொண்டும் ,முதலாவது ஆண்டு 
நிறைவைக் கொண்டாடும் அருளகமே நீ வாழ்க !வளர்க!
உன் வாழ்வும் வளர்ச்சியும் எங்கள் வாழ்வும் வளர்ச்சியுமாகும் .
 
ஆர்வமுள்ள 
இ.சிவனேஸ்வரன் 
(30/09/2011)

 

தனது முதலாவது அகவையை காணும் அருளகம் எனும் எங்கள் அன்பான குழந்தைக்கு மில்டன் கீய்ன்ஸ் ( MILTON KEYNES ) வாழ் அன்மீக அன்பு நெஞ்ஞங்களின் இனிய வாழ்த்துக்கள் .

அகத்துக்கு அருள் வழங்கும் உங்கள்  அருளகத்தின் ஆன்மீக சேவை என்றென்றும் தொடர வாழ்த்துகிறோமாக.
அருளகம் = அருள்+அகம் ,  அருள் + உலகம் .

வாழ்க வையகம் , வாழ்க வளமுடன்

THAVARAJAH  AND  MILTON KEYNES


Hey arulakam,

Netlog wishes you a happy birthday!
Enjoy this day

Have a great day!
The Netlog Team

 1. ARULCHELVAN | February 27, 2012 at 7:45 am | ReplyEdit

  தங்கள் கருத்துகள் மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி..
  தொடர்து கருத்துகள் உங்களிடமிருந்து எதிர்பார்கிறோம்..
  நன்றி

  http://WWW.ARULAKAM.WORDPRESS.COM

 2. sivakumar | April 7, 2012 at 10:41 am | ReplyEdit

  அருளகமே நீ வாழ்க !வளர்க !
  உம்பணி மேன்மேலும் சிறப்புப்பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
  அன்புடன்
  SIVA

 3. Elaya Sriranjan | April 11, 2012 at 8:58 am | ReplyEdit

  Arulakam is doing wonderfull work to tamil literature ,culture and Hindu religion.Information on Yoga on the webpage is very usefull.keep on the GOOD work we request everyone to support this great work. Elaya Sriranjan, Stoneleigh Amman Temple Yoga group.

 4. MR GOBINATHAN | April 16, 2012 at 5:41 am | ReplyEdit

  அன்புடையீர்!,
  ஊருக்கு நீர் செய்யும் நற்பணிகள் மிகவும் பாராட்டுக்குரியது, தொடரட்டும் இந்த சைவத்தொண்டு!. நல் வாழ்த்துக்கள்நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க !
  தேன்தமிழ் போல் வான்மழைபோல்
  சிறந்து என்றும் வாழ்க !

 

12 responses to “Wishes for…

 1. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…

 2. பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

 3. “Happy Birthday Arulakam”

 4. BLOG STATS-30-09-2012-
  101,151 hits
  30-09-2010
  30000

 5. நிலவன்

  அன்பு அண்ணன்அருளகமே! பல்லாண்டு வாழ்க! வாழ்க!! என வாழ்த்துகிறோம்

 6. அருளகம்நல்ல பயனுள்ள தளம்
  தமிழின் பெருமையும் அழகும்அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, திவ்ய பிரபந்தம், திருப்பாவை, ஆண்டாள் பாசுரம் என பல செல்வங்கள் நம்மிடம் உள்ளன இந்த அற்புத வரிகளில் அருமையாக வெளிப்படுகிறது.. அவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை. திராவிட இயக்க கனவான்களால் இது போன்ற அருமையான சைவ/வைணவ திருப்பாடல்கள் பொது மக்களிடம் வெகுவாக போய் சேராமல் இருட்டடித்து விட்டனர். இவர்கள் திருக்குறளையே சரியாக பரப்பாதபோது சைவ மத இலக்கியங்களையா பரப்பி விடுவார்கள். உண்மை யாதெனில், இது போன்ற பாடல்களை மதம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடக்காமல், ஒரு இலக்கியமாகவே கொள்ளலாம்.
  அருளகம்நல்ல பயனுள்ள தளம்பல்லாண்டு வாழ்க! வாழ்க!. நன்றி
  SHAUN,

 7. AMIRTHANANTHAR PAKIYARAJAN

  செய்ய தமிழும் சிவநெறியும்
  சிறக்கத் தொண்டு புரிந்திடுவோன்
  ஐயன் அருளகம்வையம் புகழப் பல்லாண்டு
  வாழ்க! வாழ்க! வாழ்கவே!

 8. அருளகம்நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் ஐயா …

 9. நம்மையெல்லாம் இணைக்கின்ற அருளகத்துக்கு..
  வயது03 வாழ்த்துக்கள்..
  அதன் உரிமையாளர்கள்..
  நிர்வாகிகள் அனைவரும்…
  அருட்பேராற்றல் கருணையினால்
  உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம்
  உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ
  எல்லாம் வல்ல இயற்கையோடு
  இணைந்து வாழ்த்துகிறேன்

 10. தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள்பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, அதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம் இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் தமிழர்கள் கூட்டம் என்று வரலாறு எழுதும் தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர்.- அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!…படியுங்கள் பரப்புங்கள்.. தகவல்களை தந்து உதவிய அனைவருக்கும் நன்றி. எமது படைப்புகளை.எமது தலைமுறையினருக்கு மட்டுமல்ல நாளைய தலைமுறையினருக்கும் பயன்படக் கூடிய .வகையில்- அருளகம் -இணையதளத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் அருளகம்-ARULAKAM WORDPRESS.COM தமிழா நீ உண்தொன்மை வாய்ந்த வரலாற்றை இழந்தால், தமிழா நீ உண்தொன்மை வாய்ந்த இன அடையாளத்தினை இழந்தால், வரலாறே உண்னை அழிக்கும்,உண்னை பழிக்கும்இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் தமிழர்கள் கூட்டம் என்று வரலாறு எழுதும. தமிழறின் வரலாறே மாறியுள்ளது.–இங்கே நாம்-அங்கே பிற இன மக்கள். இதை படிக்க தவறினால் நீங்களும் தவறு செய்கிறீர்கள்… தயவு செய்து படிக்கக்கவும்….. ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது— தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்” எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும் , அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக… எதியோபிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிபது நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோபிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைபட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோபியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோபிய நாகரிகம் காலத்தால் எகிப்தினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிப்தின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோபியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது. எதியோபிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது. தமிழோடு ஒத்துள்ள இந்நாகரிக மன்னர் பெயர்களை சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கியப் பெயர்களோடும், பிற நாகரிக மன்னர்தம் தமிழ்ப் பெயரோடும் ஒப்பிட்டு ஆய்கிறது இக்கட்டுரை. இந் நாகரிக மன்னர் பெயர் ஒப்பீடு இந்நாகரிகங்களின் மக்கள் ஒரு குலைக் காய் போல் ஒரு மூல நாகரிகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும், அதோடு அம்மூல தாய் நாகரிகம் தமிழர் உடையது என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இவ்வுலகில் எழுத்துகள் சற்றொப்ப 6.500 ஆண்டுகள் அளவில் தோன்றின அதற்கு முன் எழுத்துகள் கிடையா. தமிழின் காலம் கல்வெட்டு, சங்க இலக்கியச் சான்றுகளின் படி 2,500 ஆண்டுகள் பழமையதாக சொல்லப்படுகின்றது. எதியோபிய மன்னர்தம் தமிழ்ப் பெயர்கள் 6,500ஆண்டுகள் பழமை மிக்கதால் தமிழின் பழமையை 6,500 ஆண்டுகளுக்கு முன் போடலாம், அதோடு எதியோபியாவில் கிடைத்த மட்பாண்டங்கள் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகளை முழுதும் ஒத்துள்ளதால் தமிழும் தமிழர் நாகரிகமும் 9.500 ஆண்டுகள் பழமைமிக்க எதியோபிய நாகரிகத்தினும் மேலாக, அதாவது, 10,000 ஆண்டுகள் தொன்மையதாய் கொள்ளலாம். இப்பெயராய்வு எதியோபிய மன்னர் Tafari Mokonnen 1922 இல் வெளியிட்ட மன்னர் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொள்கிறது. ஓரிப் பழங்குடியில் மொத்தரம் 21 பேர் ஆண்டுள்ளனர். முதலாமவர் O r i or aram 4530-4470BC – தமிழில் ஓரி என்பது செப்பமான வடிவம். கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்படுபவன் வல் வில் ஓரி என்பான். எனவே ஓரி எனம் பெயர் 6,500 ஆண்டுகள் பழமையது. Gariak 4470-4404 BC தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். சங்க இலக்கியத்தில் கடைஎழு வள்ளல்களுல் ஒருவனாக குறிக்கப்படுபவன் மலையமான் திருமுடிக் காரி என்பான். இப்பெயர் கொரிய நாகரிகத்தில் Dangun வழிமரபில் ஒரு மன்னனுக்கு Gareuk 2182-2137 BC என இடப்பட்டுள்ளது. தமிழில் காரி அக் காரி அக்கன் என செப்பமாக படிக்கலாம். அக்கன் – வடலூர் வட்ட மருங்கூரில் கிடைத்த பிராமி எழுத்து பொறித்த பானைஓட்டில் அதியகன் என்று உள்ளது. இதை அத்தி + அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். அக் பிற நாகரிகங்களில் அல், ஐ, இ, உ, அம் ஈறு பெற்றும் வரும். தெலுங்கில் அக்கராஜு என்ற வழக்குள்ளது. எகிப்து நாகரிகத்தில் 4, 7 & 8 ஆம் ஆள்குடிகளில் காரி என பெயர் கொண்டோர் பலர். SeraI (Tomai) 956 – 930 BC – தமிழில் சேர (தாமை) > சேரன் (தாமன்) என செப்பமாக படிக்கலாம். தாமன் ஐகார ஈறு பெற்றுள்ளது. அல் ஈறு பெற்றும் வழங்கும். தாமல் காஞ்சி மாவட்டத்தில் உள்ள ஓர் ஏரி. சேரன் சேரர்க்கான குடிப்பெயர். பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Tiglath Pileser 732 -729 BC – தமிழில் திகழ் ஆத் வில்லி சேர் > திகழ் ஆதன் வில்லி சேரன் என செப்பமாக படிக்கலாம். நெடுஞ் சேரல் ஆதன் ஒரு புகழ் மிக்க சேர மன்னன். சேரர் வில்லவர் எனப்பட்டதுடன் அவர் கொடிச் சின்னமும் வில். இப்பெயர் சேரர் பாபிலோனையும் ஆண்டதற்கு ஒரு சான்று. Nicauta Kandae(queen) 740 – 730 BC – தமிழில் அரசி நய் காத்த கந்தை எனபது செப்பமான் வடிவம். நய்யன் காத்தன் கந்தன் சிந்துவெளி முத்திரைகளில் பயில்வுறுகிறது. கந்தை பெண் பாலை தெளிவாக குறித்து வந்துள்ளது. Erda Amen Awseya 681 – 675 BC – தமிழில் எருத ஆமன் அவ் சேய > எருதன் ஆமன் அவ்வன் சேயன் என செப்பமாக படிக்கலாம். எருதன்- எருதின் வலிமையை ஆணின் வலிமைக்கு ஒப்பிட்டு இடும் பெயர். காளை என்ற பெயர் இதற்கு சான்று. சீனத்தின் தெற்கு Nan Liang அரசின் ஓர் அரசன் பெயர் Tufa Rutan 402 – 414 AD -தமிழில் தூவா எருதன் > தூவான் எருதன் என செப்பமாக படிக்கலாம். தூவாக்குடி தமிழக ஊர். சேயன் – கொரிய நாகரிகத்தில் Gija வழிவந்த மன்னன் பெயர் Seon hye 925 -898 BC தமிழில் சேயன் கயி என்பது செப்பமான வடிவம். கயி சிந்து வெளியில் காஇ என பயில்வுற்றுள்ளது. அவ்வன் – தேனி வட்டம் புலிமான்கோம்பையில் கிட்டிய நடு கல் பிராமி கல்வெட்டில் வேள் ஊர் அவ்வன் பதவன் என்று பொறிக்கப்பட்டு உள்ளது. Gasiyo Eskikatir – தமிழில் காத்தய்ய இசக்கி கதிர் > காத்தய்யன் இசக்கி கதிர் என செப்பமாக படிக்கலாம். ககரம் கடுஒலி பெற்றுள்ளது. தகரம்சகர இன ஒலி ஸகரமாக தரிந்தது. காத்தவராயன் இன்றும் வழங்கும் பெயர். இசக்கியம்மன், இசக்கிமுத்து ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. பாபிலோன் மன்னன் ஒருவன் பெயர் Ishki bal 1732 BC – தமிழில் இசக்கி பால் > இயக்கி வால் என செப்பமாக படிக்கலாம். வால் – ஒளிரும் வெண்மை எனப் பொருள், வ>ப திரிபால் பால் என வழங்கும். பால் – வெண்மைப் கருத்து வேர். கதிர்- கதிரேசன் என தமிழகத்தில் வழங்குகிறது. ஈலம் நாகரிகத்தல் ஒரு மன்னன் பெயர் Kutir Nahhunte 1740 BC – தமிழில் கதிர் நக்கந்தி > கதிர் நக்கன் கந்தி என செப்பமாக படிக்கலாம். நக்கன் சிந்து முத்திரைப் பெயர். கந்தன் > கந்தி ஆகும். Tomadyan Piyankhi III 671 – 659 BC – தமிழில் தாம் அதியன் பய்யங்கி > தாமன் அதியன் வய்யங்கி என செப்பமாக படிக்கலாம். அதியன் சேரக் கிளை மரபினரான அதியமான்கள் குடிப்பெயர். Elalion Taake 402 -392 BC – தமிழில் எல்லாளியன் தக்கி என்பது செப்பமான வடிவம். எல்லாளன் என்ற தமிழ் மன்னன் ஈழத்தை மிக சிறப்பாக ஆண்டவன். சீனத்தின் Tiefu பழங்குடி வேள் பெயர் Liu Eloulou 356 -358 BC தமிழில் ஒளிய எல்லாள > ஒளியன் எல்லாளன் என செப்பமாக படிக்கலாம். ஒளியன் சிந்து முத்திரைப் பெயர். திரை நகர போனீசிய மன்னன் பெயர் Elulaios 729- 694 BC – தமிழில் எல்லளைய > எல்லாளியன் என செப்பமாக படிக்கலாம். தக்கை – தக்கி, தக்கு, தக்கன் என்றும் வழங்கும். கோவை சூலூரில் கட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலனில் தக்க இன்னன் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. சப்பானிய வேந்தரின் ஈமப் பெயர் Taka Kura 1168 – 1180 AD – தக்க குர > தக்கன் குரவன் என செப்பமாக படிக்கலாம். Atserk Amen III 382 BC – தமிழில் ஆட் செருக் ஆமன் > ஆடு செருக்கு ஆமன் என செப்பமாக படிக்கலாம். ஆடு – வெற்றி, செருக்கு — பெருமிதம். ஆடு செருக்கு ஆமன் எனறால் வெற்றிச் செருக்கள்ள ஆமன் என பொருள். இது கடல் பிறகோட்டிய செங்குட்டுவன், சித்திர மாடத்து துஞ்சிய பாண்டியன் என்பது போல வினைச் சிறப்பு சுட்டிய பெயர். Kolas 295 – 285 BC – தமிழில் காள > காளன்என செப்பமாக படிக்கலாம். இது சிந்துவெளி முத்திரையில் காணப்படும் பெயர். தமிழகத்தில் இன்றும் வழங்குகிறது. காளி இதன் பெண் பால் பெயர். 6 நடு ஆப்பிரிக்காவில் ஒரு மன்னன் பெயர் அலி காளன் என்பது. Stiyo 269 – 255 BC – தமிழில் திய்ய > திய்யன் என செப்பமாக படிக்கலாம். தேனி வட்டம் புலிமான்கோம்பை என்ற ஊரில் பேடு திய்யன் அந்தவன் என்ற பெயர் பொறித்த பிராமி நடுகல் கண்டெடுக்கப்பட்டது. திய்யன் என்ற கேரள சாதிப் பெயர் மிக பின்னர் ஏற்பட்டது. கொரிய நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Deun gol 874 – 849 BC தமிழில் திய்யன் கோல் என செப்பமாக உள்ளது. தகர இனக் கடுஒலி பெற்றுள்ளது. கோல் – கோலப்பன் இன்றும் வழங்கும் பெயர். Bawawl 70 – 60 BC தமிழில் பவ்வல் > வவ்வல் என செப்பமாக படிக்கலாம். அன் ஈறு பெற்று வவ்வன் ஆகும். சீனத்தில் Xia அரசின் ஓர் அரசன் பெயர் Helian Bobo 407 – 425 AD – தமிழில் கிளியன் பப்ப > கிளியன் வவ்வன் என செப்பமாக படிக்கலாம். வகரம் பகர கடுஒலியாக திரிந்துள்ளது. இவன் மரபினர் எல்லாரும் கிளியன் பட்டம் தாங்கியுள்ளனர். சோழ மன்னர் சிலர் கிள்ளி எனப்பட்டனர். Barawas 60 – 50 BC – தமிழில் பரவன் என செப்பமாக படிக்கலாம். பகரம் கடுஒலி பெற்றுள்ளது. தமிழில் பரவன் மீனவரை குறிக்கும். கடல் பரவை எனப்படும். BSerada 105 -121 AD தமிழில் சேர் ஆத > சேரன் ஆதன் என செப்பமாக படிக்கலாம். சேர மன்னர்களே ஆதன் என்ற பெயர் கொண்டிருந்தனர். காட்டாக, இமய வரம்பன் நெடுஞ் சேரல் ஆதன். Azegan Malbagad 200 – 207 AD – தமிழில் அழகன் மால் பகடு என செப்பமாக படிக்கலாம். மால் – கருமைக் கருத்து, பகடு – எருமை, ஆண் எருமையின் வலிமை ஒடு ஒப்பிட்டு இப்பெயரை சூட்டி இருக்கலாம். கிறித்தவ மதப் பரவலால் தமிழ்ப் பெயர்கள் ஒழிந்தன. ஆங்காங்கே கலப்பு பெயராக Tseyon / Tsion – திசையன் போன்ற பெயர்கள் வழக்கூன்றின. தமிழகம், சிந்துவெளி அல்லாத பிற நாகரிகங்களில் அகரம் ஒகரமாயும், வகரம் பகரமாயும், தகரம் சகரமாயும் திரிந்துள்ளன. அப்பெயர்களை தமிழாய் படிக்க மூல எழுத்தையே நாட வேண்டும். மேற்கு நாகரிக மன்னர் பெயர்களும், கிழகக்கு நாகரிக மன்னர் பெயர்களும் தமிழாய் இருப்பது இடைப்பட்ட சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமே என்பதை இது வரை மறுத்து வந்தவர்களை நம்பிக்கைப்படுத்த உதவும். எதியோபிய மன்னர் 7 பெயர்கள் தமிழல்ல என மறுப்போர் சங்க இலக்கியஙகளில் கற்றத்துறைபோகிய தமிழ் அறிஞர்களை உசாவ வேண்டுகிறேன். அதோடு Indus Script Dravidian, 1995 என்ற நூலை மேற்கோளாக கொள்ளும்படி வேண்டுகறேன் மிகப் பலர் எண்ணுவது போல் மூலதாய் நாகரிகமான தமிழர் நாகரிகத்திற்கு ஆப்பிரிக்காவோ, சுமேரியாவோ, சிந்து வெளியோ அல்லது கிழக்கு நாகரிகங்களோ தாயகம் அல்ல. தமிழ் இலக்கியங்கள் தமிழர் தாயகத்தை தென்புலம் என்கின்றன. அயினும் அதற்கு தொல்லியல் சான்று ஏதும் இல்லை. இது தொடர்பாக தமிழ்நாடு தொல்லியல் துறை அடிக்கடல் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தள்ளது. நல்ல முடிவுகள் வரும் என எதிர் பாரக்கலாம். இப்பெயர் ஒப்பாய்வு ஒரு புதிய களமாக ஏற்கபட்டு விரிந்து பரவினால் தமிழ் நாகரிகத்தின் எல்லையும், காலமும் விரிந்து இருப்பதை நிறுவ இயலும்.. சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்; சிந்து எழுத்துகளை பேராசிரியர் இரா. மதிவாணன் படித்துக் காட்டி 20 ஆண்டுகள் ஆன பின்னும் அது புகழ் பெற்ற ஆய்வாளர்களால் இன்னும் ஏற்கபடாமலேயே உள்ளது. நான் 3 1/2 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் அவ் எழுத்துகளை படிக்கக் கற்றுக் கொண்டேன். ஈரெழுத்து சான்று இல்லாயினும் அவர் படித்த முறை சரியே . நாகரிகம்9,000 ஆண்டுகள் தொன்மையானவை என்பதால் சிந்து வெளி முத்திரைப் பெயர்கள் பிற நாகரிகங்களில் புழங்கி உள்ளனவா? என்பதை அறிய அதற்கு மேற்கே அமைந்த எதியோபியா, எகிபது, போனீசியா, அக்காடு, ஈலம், பாபிலோன் நாகரிக மன்னர் பெயர்களை ஒப்பாய்வு செய்ய Google ல் அந்நாகரிக மன்னர் பெயர் பட்டியலை தேடி சொடுக்கினேன். நான் எதிர் பார்த்தவாரே wikipedia free encyclopedia வில் மன்னர் பெயர் பட்டியல் கிட்டியது. வியக்கும்படியாக இந்நாகரிக மன்னர் பெயர்கள் சிந்துவெளி முத்திரைப் பெயர்களோடும், சங்க இலக்கிய மாந்தர் பெயர்களோடும், தமிழ்நாட்டு பானை ஓட்டு சிந்து எழுத்துப் பொறிப்பு பெயர்களோடும் ஒத்திருக்கக் கண்டேன். எனவே ஊக்கமுற்று கிழக்கு நாகரிகங்களான சீனம், கொரியா, சப்பான் நாகரிக மன்னர் பெயர்களையும் ஒப்பிட்டேன். அவற்றுள் பல தமிழ் வடிவில் இருக்கக் கண்டேன். இப் பெயர் ஒப்புமை ஆய்வு தமிழர் நாகரிகம் பிற எல்லா நாகரிகங்களுக்கும் தாய் நாகரிகம் என்பதையும், இப் பண்டை நாகரிகங்களை தோற்றுவித்த தமிழர் ஒரு பொதுவான மூல இடத்தை விட்டகன்று இவ் இடங்களில் குடியேறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது, அதோடு தமிழ் மொழி 10,000 ஆண்டுகள் மேலான பழமை மிக்கது என்பதும் தெளிவான்து. இந்த ஒப்புமை ஆய்வு பேரா. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளை படித்த முறை சரி என்று மெய்ப்பிக்கப் போதுமானது. கிறித்தவ, இசுலாமிய மதப் பரவலால் மேற்கின் பண்டை நாகரிக தமிழ் பெயர்கள் அவ் இடங்களில் மறைந்தாலும் கிழக்கு நாகரிக இடங்களில் இன்றும் வழங்குவதை உணர முடிகிறது. சப்பான் நாகரிகம் இதற்கு ஒரு சிறந்த சான்று. நம் ஒப்புமை ஆய்வுக்கு தெளிவாக உள்ள சில சப்பானிய பிரதமர் பெயர்களையும் மன்னர் பெயர்களையும் எடுத்துக் கொள்வோம். வங்காளி, இந்தோனேசிய மொழிகள் போல சப்பானிய மொழியிலும் ‘அ’ கரம் ‘ஒ’ கரமாகியுள்ளது. அதோடு ‘க’கரம் ‘ஹ’ கரமாகவும், ‘வ’கரம் ‘ப’ கரமாகவும், ‘த’ கரம் ச, ஜ. ஷ வாக திரிந்து உள்ளது. இத் திரிபுகளின் மூல ஒலி கொண்டு படித்தால் தமிழ்ப் பெயர்கள் விளங்கத் தோன்றும். பதவி ஏற்பு வரிசையில் 2 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் kuroda kiyotaka1888-89 எனபவர். தமிழில் குறு ஆத கய்ய தக்க > குறு ஆதன் கய்யன் தக்கன் என செம்மையாக படிக்கலாம். குறு – இளமைப் பொருள், ஆதன் – சேரர் பெயர், கய்யன் – பண்டை மேற்கு நாகரிகங்களில் இடம் பெறுகிறது. தக்கன் – 1940 ல் கோவை சூளூரில் கிட்டிய சிந்து எழுத்து பொறித்த மட்கலத்தில் தக்க இன்னன் என்ற பெயர் எழுத்ப்பட்டுள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 3 & 9 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் yamagata Aritomo 1888-91 & 1898-1900எனபவர். தமிழில் யாம கத்த அரி தாம > யாமன் கத்தன் அரி தாமன் என செம்மையாக படிக்கலாம். யாமன் – ஒரு பழந் தமிழ்ப் பெயர். பின்பு யா > ஆ எனத் திரிந்து ஆமன் என சங்க இலக்கியத்தில் பயில்கின்றது. கத்தன் – சி.வெ. முத்திரையில் பயிலும் பெயர், அரி – அரியான் என அன் ஈறு பெற்று அரியான் குப்பம் என பதுச்சேரியில் ஓர் ஊருக்கு பெயராகி உள்ளது. தாமன் — பல மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாமல் எனற ஏரி உள்ளது. பதவி ஏற்பு வரிசையில் 16 & 22 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Yamamoto gonbee 1913-1914 தமிழில் யாம மத்த கான்வி > யாமன் மத்தன் கானவன் என செம்மையாக படிக்கலாம். சி. வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் மத் என்றும், ஈறு பெற்று மத்தன் எனறும் இப் பெயர் பயின்று வந்துள்ளது. பண்டைய போனீசிய திரை Ancient tyrian நாகரிக மன்னன் பெயர் Mattan I 840-832 BC இவன் பெயரில் அன் ஈறு இடம் பெறுவது தமிழ் அடையாளத்தை தெளிவாக சுட்டுகிறது. அன் ஆண் பால் ஈறு பல நாகரிகங்களில் அர்,அல், அம், ஐ, இ எனவும் முடிகிறது. அவவாறே கானவன் என்ற பெயர் கானவி என சப்பானில் வழங்குகிறது பதவி வரிசையில் 20 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Takahashi Korekiyo 1921-22 தமிழில் தக்க கத்தி(ஹ>க, ஷ > த மூலம்) காரி கய்ய > தக்கன் கத்தி காரி கய்யன் என செம்மையாக படிக்கலாம். கத்தன் எனபதே கத்தி ஆகியது. காரி — கடை ஏழு வள்ளல்களுல் ஒருவன் மலையமான் திருமுடிக் காரி, காரிக் கிழார் ஒரு புலவர். எகிபது நாகரிகத்தில் 4 ஆம் ஆள்குடியில்(Dynasty) ஒரு மன்னன் பெயர் MenKaure 2490- 2472 BC மேன் காரி. தமிழில் மேன் உயர்வான, மேலான என பொருள் தரும்; அன் ஈறு பெற்று மேனன் என்றாகும். 7 & 8 ஆம் ஆள்குடியில் பல மன்னர் காரியை பட்டமாகவே கொண்டுள்ளனர். அவருள் ஒருவன் Netri Kare 2150 BC நெற்றி காரி. பதவி ஏற்பு வரிசையில் 24 & 26 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Kato Takaaki தமிழில் காத்த தக்க அக்கி > காத்தன் தக்கன் அக்கி என செம்மையாக படிக்கலாம். காத்தன் – சி.வெ. முத்திரையில் இடம் பெறுகிறது; காத்தன்குடி ஈழத்தில் உள்ள ஓர் ஊர் பெயர்; காத்தமுத்து என இக்காலும் பெயர் தமிழில் வழங்குகிறது. அக்கன் என்பதே அக்கி ஆகியது. அன் ஈறு பெறாமல் அக் என பல நாகரிகங்களில் பயில்கின்றது. எதியோபியாவில் ஒரு மன்னன் பெயர் Gari Ak I (4404 BC) காரி அக். 6,400 ஆண்டுகள் பழமையான பெயர் இது. அக்கன் பிற நாகரிகங்களில் அக்கல் எனவும் வழங்கும். அண்மையில் வடலூர் அருகே மருங்கூர் என்ற இடத்தில் ‘அதியகன்’ என பெயர் பொறித்த பிராமி எழுத்து பானைஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை அத்தி+அக்கன் என பிரித்து படிக்க வேண்டும். பதவி ஏற்பு வரிசையில் 25 & 28 இடங்களை பிடிப்பவர் பிரதமர் Wakatsuki Reijiro 1926-27-31 இதில் வக்க என்ற தமிழ்ப் பெயர் உள்ளது. தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் வக்கன் என்ற பெயர் பயின்றுள்ளது. வ கரம் ப கரமாகி இப்பெயர் எகிபதின் 24 ஆம் ஆள்குடியில் ஒரு மன்னனுககு Bakenranef 720-715 BC வக்கன் அரணி என வழங்குகிறது பதவி ஏற்பு வரிசையில் 32 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Hiroata Koki 1936-37 தமிழில் கீர அத்த காக்கை > கீரன் அத்தன் காக்கை என செம்மையாக படிக்கலாம். கீரன் ஹகர திரிபு பெற்று எதியோபியாவிலும்,எகிபதிலும் வழங்குகிறது. நக்கீரன், கீரனூர் ஆகியன இதன் தமிழ் மரபிற்கு சானறு. அத்தன் தேவாரத்தில் பயில்கிறது. காக்கை – ஈழமன்னன் பண்டார வன்னியனை ஆங்கிலர்க்கு காட்டிக் கொடுத்தவன் காக்கை வன்னியன். எகிபதின் 5ஆம் ஆள்குடி மன்னன் பெயர் Neferirkare Kakai 2477-2467BC. பதவி ஏற்பு வரிசையில் 34 & 38 ஆம் இடங்களை பிடிப்பவர் பிரதமர் Konoe Fumimaro 1937-39 & 1940-41தமிழில் கானை உமி மாற > கானை உமி மாறன் என செம்மையாக படிக்கலாம். கானை – சி.வெ. முத்திரையில் அரிதாக வழங்கும் பெயர் இது கான், கானன் என சிந்து முத்திரையில் பரவலாக வழங்குகிறது. உமி – உமன் என தமிழக பானைஓட்டு சிந்து எழுத்துகளில் பயில்கிறது; உமி>வுமி>புமி>Fumi என திரியும். உமன் மேற்கு நாகரிகங்களில் உமர்(Omar) எனவழங்குகிறது இன்றும். மாறன் பாண்டியர்குரிய பெயர்..- பதவி ஏற்பில் 41 ஆம்இடத்தை பிடிப்பவர் பிரதமர் koiso Kuniaki 1944-45 தமிழில் காய் த குன்னி அக்கி > காயன் த குன்னி அக்கி என செம்மையாக படிக்கலாம். காயன் – ஆதாம் ஏவாள் மகன் Cain, மேற்கு நாகரிகங்களில் வழங்குகிறது. காயன்குளம் கேரளத்தின் ஓர் ஊர். குன்னி – அன் ஈறு பெறாமல் குன் எனவும், அன் ஈறு பெற்று குன்னன் எனவும் சி.வெ. முத்திரைகளில் பயில்கிறது. இன்றும் குன்னிராமன் என்ற பெயருள்ளோர் உண்டு. அக்கி – அக்கன், அக்கல், அக், அக்கம் என பலநாகரிகங்களில் வழங்குகிறது. பல்லங்கி என்ற இடத்தில் அமைந்த மாயன் நாகரிக மன்னர் பெயர் Ahkal Mo Nahb II 565 -570 AD அக்கல் மா நக்கவன். பதவி ஏற்பில் 46 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Katayama Tetsu 1947-48 தமிழில் கத்த யாம திட்டு > கத்தன் யாமன் திட்டு என செம்மையாக படிக்கலாம். திட்டன் எனபதே திட்டு என வழங்குகிறது. திட்டன்குடி > திட்டக்குடி. பதவி ஏற்பில் 61 ஆம் இடத்தை பிடிப்பவர் பிரதமர் Satu Eisaku 1964-72 தமிழில் சாத்து இசக்கு > சாத்தன் இயசக்கன் என செம்மையாக படிக்கலாம். சாத்தன் – சி.வெ. முத்திரைகளிலும், சங்க இலக்கியங்களிலும் பயிலும் பெயர். சாத்தய்யா, சாத்தப்பன் இற்றை வழக்கு. இசக்கு இசக்கிமுத்து என இக்கால் நெல்லையில் வழங்குகிறது. பதவி ஏற்பு வரிசையில் 64 ஆம் இடத்தை பிடிப்பவர் Tanaka kakuei 1972-74 தமிழில் தன் அக்க கா குய்யி > தன்னன் அக்கன் கா குய்யி என செம்மையாக படிக்கலாம். தன்னன் – அன் ஈறு பெறாமல் தன் என்றும், அன் ஈறு பெற்று தன்னன் எனறும் சி.வெ. முத்திரைகளில் வழங்குகிறது. தன்னவன் இதன் மற்றொரு வடிவம். கா – சி.வெ. ல் ஒற்றை எழுத்தாகவே பயில்கிறது. ஆங்கில U எழுத்தின் இரு மேல் ஓரங்களிலும் இரு கோடுகள் பெற்று ஏராளமாக காணப்படுகிறது. இக் கா ‘திரு’ என்பதைப் போல் மதிப்புரவாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். பல்லங்கி மாயன், எகிபது, போன்ற நாகரிகங்களிலும் ஒற்றை எழுத்தாகவே வழங்குகிறது. எகிபதில் ஒரு பொதுமகன் பெயர் கா அப்பர் என்பது. குய்யி – சி..வெ. முத்திரைகளில் அன் ஈறு பெறாமல் குய் எனறும் அன் ஈறு பெற்று குய்யன் என்றும் வழங்குகிறது. அசுடெக் மாயன் நாகரிக மன்னர்கள் பெயர் Cui tal huac 1520AD குய் தள் குய் அக் & Cua uhtec mac 1520-1525 AD குய்ய உக் திக் மாக் என்பது. பதவி வரிசையில் 67ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda Takeo 1976-78 பக்குட தக் ஈய > பக் உடை தக்கன் ஈயன் பதவி வரிசையில் 91 ஆம் இடம் பிடிப்பவர் பிரதமர் Fukuda yasuo 2007-2008. தமிழில் பக் எனறால் பை என பொருள் பக் உடை என்றால் பை போன்ற உடை எனப்பொருள். சங்க இலக்கியத்தில் பயிலும் ஆசிவக மதத் தலைவர் பெயர் பக்குடை நன் கணியார் என்பது. இப்போது பதவியில் உள்ள பிரதமர் பெயர் Kan Naoto 2010 முதல் தமிழில் கான் நவ் அத்த > கானன் நவ்வன் அத்தன் என செம்மையாக படிக்கலாம். கானன் – அன் ஈறு பெறாமல் கான் என்றும், அன் ஈறு பெற்று கானன் என்றும் சி.வெ. பயில்கிறது. கானவன் இதன் மற்றொரு வழக்கு. கானவன் தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் இடம்பெறுகிறது. அத்தன் -அத்தர், அத்தி என பிற நாகரிகங்களில் வழங்கும். சென்னை சப்பானிய துணைத் தூதரக தலைவர் பெயர் Takayuki Kitagawa தமிழில் தக்கை உக்கி கித்த கவ்வ > தக்கை உக்கி கித்தன் கவ்வன் இதன் செம்மை வடிவு. தக்கை- தக்கன், தக்கி, தக்கு எனவும் வழங்கலாம். உக்கி தமிழக பானைஓட்டு சிந்து எழுத்தில் உக்கன் பயின்று வந்துள்ளது. கித்தன் ஈரானின் தென்மேற்கே அமைந்த ஈலம் நாகரிகத்தில் ஒரு மன்னன் பெயர் Hita I 2270 BC க > ஹ திரிபு. மற்றொரு மன்னன் பெயர் Attar Kittah 1370 BC கித்தன் ஈலத்தில் பயின்றாலும் சி.வெ. இப்பெயர் இல்லை. கவ்வன் – சி.வெ.முத்திரையில் மட்டும் காணப்படுகிறது. இனி சப்பான், கொரியா, சீனம் ஆகிய நாகரிகங்களில் மன்னர்களுக்கு இறந்தபின்பு பெயர் (PosthumusNames) வைப்பது ஒரு வழக்கம். அவற்றுள் அடங்கும் சப்பானிய வேந்தர் பெயர்களை ஒப்பாய்வோம். Annie 549-476 BC அன்னி சங்க இலக்கியங்களில் பயிலும் ஒரு மன்னன் பெயர். Koan 392-291 BC காயன் ஏற்கென்வே ஆயப்பட்டது. Korei 290-215 BC காரி Anko 453-456 AD அங்க > அங்கன்,அங்கு, அங்கி என எதியோபியா, சி. வெ. நாகரிகங்களில் வழங்குகிறது. Ankan 531-535AD அங்கன்- அன் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் அங்கு சாமி, அங்கப்பன், அங்கய்யன் வழங்குகின்றன. சி.வெ. ல் அங்கு, அங்கன் பயில்கிறது. எதியோபிய மன்னன் ஒருவனுக்குAngabo I 4142 BC என பெயர். Kobun 692 AD காப்பன் சி.வெ. ல் வழங்கும் பெயர். பெரு இன்கா நாகரிக 12-16 நூற்றாண்டு மன்னர் பலர் Capac காப்அக் > காப்பன் அக்கன் என பட்டப் கொண்டனர். —————- தமிழ் (இந்த உலகின் பழமையான மொழி தமிழ் ) பிற இன மக்கள் பேச மொழியே தோன்றாத போது இங்கே நாம் இலக்கியங்கள் படைத்தோம்! இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்”எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்தெந்த இடங்களில் பிறக்கின்றன, பிறந்த எழுத்துக்களை ஒலிக்க எந்த உறுப்புகள் துணை புரிகின்றன, துணை புரியும் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன அடைந்தேன் !!!தமிழின் பெருமையும் அழகும்-தமிழ்.இலக்கியங்கள்-திருக்குறள் -அபிராமி அந்தாதி, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, திவ்ய பிரபந்தம், திருப்பாவை, ஆண்டாள் பாசுரம் ,வெண்பா என பல செல்வங்கள் நம்மிடம் உள்ளன இந்த அற்புத வரிகளில் அருமையாக வெளிப்படுகிறது.. அவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை. ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். உலகின் பல இனங்கள் காட்டில் வேட்டையாடி உண்ட போது இங்கே நாம் மெசொபோத்தேமியாவில் இருந்துதமிழீழம் வரை கல்லணையை கட்டி கொண்டு செய்ததே விவசாயம்..உண்டதோ சைவ அறுசுவை உணவுகள். பலருக்கு நிலத்தில் மட்டுமே போர் புரிய தெரிந்த காலத்தில், உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஓருவல்லரசின்ஆட்சி ,-ஆட்சி மொழியாகவும் தமிழ் இருந்திருக்கின்றது என்பது தெரியவருகிறது-இங்கே நிகரற்ற ஒரு கப்பற்படையை வைத்திருந்தோம்! உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் கப்பல் படை-.(முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம்! இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டு, “திருநெல்வேலி அருங்காட்சியகத்தில்” பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !!) உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக. இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது. அனைத்து குழுவிற்கும் தலைவர் “அரசர்”. இதில் “கனம்” (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது, இதை நிர்வகிப்பவர் “கனாதிபதி”. “கன்னி” (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய “கலபதி”, “கன்னி” என்பது தமிழில் “பொறி” என்று கூட பொருள் படும், இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப்போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்! அடுத்து “ஜதளம்” சுருக்கமாக “தளம்” (நிரந்தரப்போர் பிரிவு) இதை நிர்வகிப்பவர் “ஜலதலதிபதி”, இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. “மண்டலம்” (பாதி நிரந்தர போர்ப்பிரிவு) இதை நிர்வகிப்பவர் “மண்டலாதிபதி” இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்! “கனம்” (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது! “அணி” இதை நிர்வகிப்பவர் “அணிபதி” மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. “பிரிவு” மிக முக்கியமான பிரிவு இது, இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் “கீழ்பிரிவு-அதிபதி / தேவர்” என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் “இலங்கை”, “இந்தோனேசியா”, “ஜாவா”, “மாலைதீவு”, “மலேசியா”, “சிங்கப்பூர்” போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம்!! -இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் “NAVY” என்ற ஆங்கில வார்த்தை “நாவாய்” என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை “தமிழர்களுக்கு” தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்? சிந்தியுங்கள் !!- இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி-இந்தோனேசியா- அந்தமான்- மற்றும் நிகோபார் தீவுகள்,- இலட்சத்தீவுகள்-, சுமத்ரா-, ஜாவா-, மலேயா- மற்றும் பெகு தீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைநகரை உருவாக்கினான். பல மன்னர்கள் அடுத்த பகுதியை வெற்றி கொண்டு சாதனை எடுத்து கூறிய போது, தெற்காசியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் வைத்து ஆண்ட தமிழர்கள். தமிழ்நாட்டின் பலம் மிக்க அரச வம்சங்களில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர் . 14ஆம் நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்ட பாண்டியர்கள், பின் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு 1650ஆம் ஆண்டு வரை ஆண்டதற்கு சான்றுகள் உள்ளன…அவர்களை ‘தென்காசிப் பாண்டியர்கள்’ என்று கூறுவர். இந்த செய்தி இப்பொழுது வரை ‘தென்காசிப் பாண்டியர்கள்’ பற்றி வெளியில் வரக்கூட இல்லை…எல்லாம் நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதி…பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வரலாறு தெரியவே தெரியாது. இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்ப
 11. திரு . அருட்செல்வன் அவர்களே.
  நலமா நான் இந்த ஆண்டு இருதியில் நான்கு நாட்கள் இலங்கை வரலாம் என்று இருக்கின்றேன் .
  நான் இதுவரை இலங்கை வந்ததில்லை
  நூற் அல்லியி (nuwara eliya) செல்லலாம் என்று சில நண்பர்கள் பரிந்துரைத்தார்கள்.
  தாங்கள் எதாவது ஆலோசனை சொல்ல இயலுமா .

  நன்றி,

  சிவா

  என் அன்பு அண்ணனுக்கு உம்பணி மேன்மேலும் சிறப்புப்பெற
  எல்லாம் வல்ல இயற்கையோடுஇணைந்து வாழ்த்துகிறேன்மனமார்ந்த வாழ்த்துக்கள்
  அன்பு
  அருட்செல்வன்

 12. வணக்கம் அருள்செல்வன்

  தங்கள் தொண்டை போற்றுகின்றோம். நன்றிகள்

  பணிப்புலம்.கொம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s