சைவ சித்தாந்த நூல்கள்

சைவசித்தாந்தம்

zw95

                                                     திருச்சிற்றம்பலம்   

                   நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே!

சைவ சித்தாந்தம் …… இங்கே அழுத்தவும்.

சைவ சித்தாந்தம் 

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சைவ சமய நெறி சைவ சமயத்துக்குஅடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும். (அந்தம் – முடிவு). ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்

சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்டது  சிந்து வெளியில் கண்டெடுக்கபட்ட சிவலிங்க வடிவங்கள் இதற்குச் சான்றாக இருப்பதாகும் 
 1. பதி (இறைவன்)
 2. பசு (உயிர்)
 3. பாசம் (மலங்கள்)
ஆகிய மூன்றையும் என்றென்றும் உள்ள நிலைத்த பொருள்களாக ஏற்றுக்கொள்வது சைவ சித்தாந்த தத்துவத்தின் அடிப்படையாகும். சைவ சித்தாந்தத்தின்படி இம் மூன்றுமே முதலும் முடிவும் இல்லாதவை. இதனால் இவை மூன்றையுமே யாரும் படைத்ததில்லை என்கிறது சைவ சித்தாந்தம். ஆயினும், என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை எனக்கூறும் இத் தத்துவம் இவை பற்றிப் பின்வருமாறு விளக்குகின்றது.
 • இறைவன்: அறிவு வடிவாகவே இருக்கும் இறைவன் எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்திருப்பவன், அளவற்ற வல்லமை பெற்றவன்.
 • உயிர்: உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை ஆனால் மலங்களினால் பிணிக்கப்படும்போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணிப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும்.
 • மலங்கள்மலங்கள் சடப்பொருள்கள். அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இவை இறைவனை அடைய முடியாது
Published on Aug 14, 2013
http://www.saiva siddhandham.com.சைவ சித்தாந்த சாத்திரங்கள்-ஒருபார்வை.விரியுரை:சிவத்தமி ­ழ்ச் செல்வர்,சைவ சித்தாந்த வித்யாபதி ,ச.சௌரிராசன்,M.A;B.Ed.(அவர்கள்).மாணிக்கவ ­ாசகர் சிவ நெறி பேரவை.அம்மாபேட்டை-614401,தஞ்சாவூர்(மாவட் ­டம்).செல்:9791889595
சிவஞானபோதம்-SIVANYANABOHTHAM 
மெய் ஞானம் என்றால் என்ன? சிவஞானபோதம் விளக்கம். வேறு எந்த சமயத்திலும் சொல்லாத விளக்கம்
1-Sivanyanabohtham 1/5
2-Sivanyanabohtham 2/5
3-Sivanyanabohtham 3/5
4-Sivanyanabohtham 4/5
5-Sivanyanabohtham 5/5
சிவப்பிரகாசம் Sivaprakasam 
சிவப்பிரகாசம் Sivaprakasam 1
Sivaprakasam 2
Sivaprakasam 3
Sivaprakasam 4
Unmai Vilakam 1
Unmai Vilakam 2
Unmai Vilakam 3
Unmai Vilakam 4
Unmai Vilakam 5
Umapathi Sivam aruliya Kodikavi

சைவ சமய சாத்திர நூல்கள் மொத்தம் பதினான்கு ஆகும்.

2-சைவ சித்தாந்ததமிழ்

http://svlagncy.blogspot.co.uk/2012_11_01_archive.html

3-சைவத்தமிழ்: சைவம்

http://shaivatamil.blogspot.co.uk/p/blog-page_9160.html

4-சைவ சித்தாந்த சாத்திரங்கள் –

சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று; இந்நூல்களுள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு முற்பட்டது. திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் இந் நூலை இயற்றினார். 45 பாடல்களில், பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (மலங்கள்) என்பவற்றின் இயல்புகளைப் பற்றியும், உயிர்கள் இறைவனுடன் சேருவதற்கான வழிகளைப் பற்றியும் எடுத்தியம்புகிறது.

A-http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021502.htm

B–திருவுந்தியார் (இசை வடிவில்)

http://www.noolulagam.com/blog/2011/01/04/7/

C-திருவுந்தியார்

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/thiruvunthiyar.html#.UQapkB3ZYus

5-திருக்களிற்றுப்படியார்-திருக்களிற்றுப்படியார் சைவசித்தாந்த நூல்களுள் இரண்டாவது நூல். சைவசித்தாந்த நூல்களுக்குள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு இது முற்பட்டது. இந் நூலை இயற்றியவர் திருக்கடவூரைச் சேர்ந்த உய்யவந்த தேவநாயனார் ஆவார். இந் நூல் 100 வெண்பாக்களால் ஆனது.—–

A-திருக்களிற்றுப்படியார்

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=6001&padhi=001&startLimit=0&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

B-http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/thirukalitruppadiyar.html#.UQg_WB3ZYus

C-http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0120.html

6–சிவஞான போதத்திற்கு முந்திய நூல்கள்

http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021502.htm

7-சிவஞானபோதம்—-

மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்களுள் முக்கியமானதும், தலை சிறந்ததுமாகும். கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், திருவெண்ணெய் நல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்தவருமான மெய்கண்ட தேவர்என்பவர் இயற்றிய இந் நூல், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை ஒழுங்கு முறையாக எடுத்துரைக்கிறது.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/sivagnana_potham.html#.UQhElh3ZYus

8-சிவஞான சித்தியார்-

சிவத்துக்கு மேல் தெய்வம் இல்லை

சிவஞான சித்தியார்க்கு மேல் நூல்இல்லை

சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்க எழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும். சிவஞான போதத்தின் வழி நூலான இதனை இயற்றியவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். இவர் சிவஞான போதத்தை இயற்றிய மெய்கண்ட தேவரின் மாணவன்.

பரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்த நூல். சைவ சித்தாந்தத்துடன் முரண்படுகின்ற புறச்சமயக்கொள்கைகளை மறுத்துச் சித்தாந்தக் கொள்கைகளை நிலை நாட்ட முயல்வதே பரபக்கம் என்னும் பகுதியின் நோக்கம். சுபக்கம்சிவஞான போதத்தின் 12 சூத்திரங்களை பன்னிரண்டு அத்தியாயங்களாக விரித்து எழுதப்பட்ட பகுதி. பரபக்கம், 301 பாடல்களாலும், சுபக்கம், 328 பாடல்களாலும் ஆனது.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/sivagnana_siddiyar.html#.UQhAGh3ZYus

9-இருபா இருபது

உண்மைகளைக் கூறும் மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய இருபா இருபது 20 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலாகும். அருணந்தி சிவாச்சாரியார்எழுதிய இந் நூல், அருணந்தியாரின் கேள்விகளுக்கு அவர் குருவான மெய்கண்ட தேவர் பதிலளிப்பது போன்ற ஒரு வினா விடை நூலாக அமைந்துள்ளது. இது ஆணவம்கன்மம்மாயைஆகிய மும்மலங்களினதும் இயல்புகளை விளக்குகிறது.

இந்த நூலுக்கு இரண்டு பழைய உரைநூல்கள் உள்ளன.

இருபா இருபது உரை

1488-ல் மதுரை-சிவப்பிரகாசர் என்பவரால் எழுதப்பட்டஇருபா இருபது உரை

1677-ல் திருவாடுதுறை நமசிவாயத் தம்பிரான் எழுதிய உரை

   http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/irupairupathu.html#.UQhFGh3ZYus

10-உண்மை விளக்கம்

உண்மை விளக்கம் என்பது, மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும். இது,சிவஞான போத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் மாணவர்களில் ஒருவரான திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப்பட்டது. வினா விடை வடிவில் அமைந்த இந்நூல் 53 வெண்பாப் பாடல்களால் ஆனது.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/unmaivilakkam.html#.UQhFWx3ZYus

11-சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம் என்பது 14 சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றாகும். மேற்சொன்ன 14 நூல்களுள் எட்டு நூல்களை இயற்றியஉமாபதி சிவாச்சாரியாரே இதன் ஆசிரியராவார். இந் நூல் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை நூறு விருத்தப் பாடல்களால் விளக்குகின்றது.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/sivappirakasam.html#.UQg_4B3ZYus

12-உண்மை நெறி விளக்கம்

உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்தசாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம் என்பது பற்றி விரிவாக விளக்குவதே இந் நூலின் நோக்கமாகும். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. இந் நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/unmainerivilakkam.html#.UQhBLx3ZYus

13-திருவருட்பயன்

சைவ சித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான திருவருட் பயன்உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இந்நூல், ஒவ்வொன்றும் பத்துக் குறட்பாக்களால் ஆன பத்து அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது.

A-http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/thiruvarutpayan.html#.UQhAwh3ZYus

B-http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0081.html

C-திருவருட்பயன் (3.16 MB) (PDF வடிவம்)

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D

D-http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=8001&padhi=008

14–வினா வெண்பா

வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று.உமாபதி சிவாச்சாரியாரால்14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ளவெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தக் குருவாகியமறைஞான சம்பந்தரை வினவுவது போலவும், அவரைப் அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. இதற்குத் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரான் எழுதிய உரை ஒன்றும் அச்சாகியுள்ளது. இவையன்றி, சில ஏட்டுப்பிரதிகளில் காணப்படுவதாக அருணாசலம் குறிப்பிடுகிறார்.

இவற்றில் ஆசிரியர் உமாபதியார் தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரை ‘மருதைச் சம்பந்தா’, ‘கடந்தைச் சம்பந்தா’ என விளித்து வினாக்களை வினவியுள்ளார்.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/vinavenba.html#.UQhGGh3ZYus

15-போற்றிப் பஃறொடை

போற்றிப் பஃறொடை சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது, 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உமாபதி சிவாச்சாரியாரால்இயற்றப்பட்டது. 196 அடிகளைக் கொண்டு அமைந்த இந் நூல் மூலமாகத் தன்னுடைய குருவான மறைஞான சம்பந்தரைஉமாபதியார் போற்றிப் பாடியுள்ளார்.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/porrippaqrotai.html#.UQhGWx3ZYus

16-கொடிக்கவி

கொடிக்கவிமெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்குவெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை இயற்றியவர்உமாபதி சிவாச்சாரியார் ஆவார். தில்லை எனப்படும் சிதம்பரத்தில்கொடியேற்றுவதற்காகப் பாடப்பட்டதனால் இதற்குக் கொடிக்கவி என்னும் பெயர் ஏற்பட்டது. மிகச் சிறிய நூலாக இருந்தபோதும் சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை விளக்குவதாக இது அமைந்துள்ளது.

A-http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/kodikavi.html#.UQhA-B3ZYus

B-http://www.thevaaram.org/thirumurai_1/songview_en.php?

thiru=13&Song_idField=11001&padhi=100&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

C-http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RSrKJeKYAe0#!

17-நெஞ்சு விடு தூது

நெஞ்சு விடு தூது, கி.பி. 1311-ம் ஆண்டு, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் செய்யுள்கள் கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர், தனது ஞானாசிரியனைத் தலைவனாக நினைத்து தன்னைக் காதலியாகப் பாவித்துத் தனது மனதைத் தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வரத் தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்நூலில் இறைவனைத் தலைவனாகப் பாவித்து எழுதப்பட்டுள்ளதால், இறைவனது பெருமைகளும், சைவ சித்தாந்தகொள்கைகளும் கூறப்படுகின்றன. அவருடைய இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை பற்றி எழுதப்பட்டுள்ளது.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/nenjuviduthoothu.html#.UQhGnR3ZYus

18-சங்கற்ப நிராகரணம்

சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால்எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச் சமயத் தத்துவங்களை மறுத்து எழுதப்பட்டது.

http://www.tamilkalanjiyam.com/literatures/shaiva_siddhantham/sangkarpa_nirakaranam.html#.UQhGyR3ZYus-

சங்கற்ப நிராகரணம்

சங்கற்ப நிராகரணம் என்பது உமாபதி சிவாச்சாரியாரால்எழுதப்பட்டது. இது சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்று. இது சைவ சித்தாந்தத்துக்கு நெருக்கமான, அகச் சமயத் தத்துவங்களை மறுத்து எழுதப்பட்டது.

1-ஈசுவர அவிகார வாதம்—தொடரும்………….

2-ஐக்கிய வாதம்—–தொடரும்………….

3-சங்கிராந்த வாதம்——தொடரும்………….

4-சிவசம வாதம்——தொடரும்………….

5-சைவ வாதம்——-தொடரும்………….

6-நிமித்தகாரண பரிணாம வாதம்——தொடரும்………….

7-பாடாண வாதம்——-தொடரும்………….

8-பேத வாதம்——–தொடரும்………….

9-மாயா வாதம்——–தொடரும்………….

என்னும் ஒன்பது சமயவாதங்கள் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது(1)

1-சிவசங்கிராந்த வாதம்———தொடரும்………….

2-சிவாத்துவித வாதம்——-தொடரும்………….

என்னும் இரண்டு சமயவாதங்களும் மறுக்கப்பட்டுச் சைவ சித்தாந்தம் நிலைநாட்டப்படுகிறது(2)

திருக்குறளில் சைவ சித்தாந்தம்—

திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

http://trisula2.wordpress.com/2011/11/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/

http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

2-http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&uselang=en

3-திருக்குறள் சமணச் சமயம் இல்லயே

http://134804.activeboard.com/t48795029/topic-48795029/

4-திருக்குறளில் சைவ சித்தாந்தம்-ஆர். கஸ்தூரி ராஜா

http://134804.activeboard.com/t48724798/topic-48724798/

5-திருக்குறளில் சைவ சமயம் – சோ.சண்முகம்

http://134804.activeboard.com/t48268943/topic-48268943/

1-குறிப்பேடு: சைவ சித்தாந்தம்-1

http://meenachisundram.blogspot.co.uk/2010/04/blog-post.html

2-குறிப்பேடு: சைவ சித்தாந்தம்-2

http://meenachisundram.blogspot.co.uk/2010/04/1.html

3-குறிப்பேடு: சைவ சித்தாந்தம்-3

http://meenachisundram.blogspot.co.uk/2010/04/2-2.html

4-குறிப்பேடு: சைவ சித்தாந்தம்-4

http://meenachisundram.blogspot.co.uk/2010/04/3.html

5-குறிப்பேடு: சைவ சித்தாந்தம்-5

http://meenachisundram.blogspot.co.uk/2010/06/blog-post.html

6-குறிப்பேடு: சைவ சித்தாந்த-6

http://meenachisundram.blogspot.co.uk/2010/06/6.html

7-குறிப்பேடு: சைவ சித்தாந்த-

8  குறிப்பேடு: சைவ சித்தாந்த-

9  குறிப்பேடு: சைவ சித்தாந்த-

Project Madurai – List of works and link

http://www.projectmadurai.org/pmworks.html

சைவ சித்தாந்த வினா விடை 
சைவசித்தாந்தம் – ஒரு வார்த்தையில் விளக்கம் தருக 
முடிந்த முடிபு.  
1. சைவம் என்றால் என்ன?சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.3. சைவ சமயம் எப்போது தோன்றியது?
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.
4. யார் சைவர்?
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.
5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.
6. சமயக் குரவர்கள் யாவர்?
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்
6. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்
7. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்
8-. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.
9-. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.
10-. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?பன்னிரு திருமுறையில் முதல் பாடல் ‘தோடு’ என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் ‘உலகெலாம்’ என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.11-. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.12. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?

திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

13-. பஞ்சபுராணம் குறிப்பு தருக.

மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

14-. அகத்தியர் தேவாரத் திரட்டு – குறிப்பு தருக

அகத்திய முனிவர் ‘அடங்கள் முறை’ முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.

1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

15. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.

மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

16. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?

18,497 பாடல்கள்.

17-. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?

மொத்தம் பாடியவை கிடைத்தவை

திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100

——————————————————————————–
மொத்தம் 1,03,000 795
——————————————————————————–

18-. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?

திருஞான சம்பந்த சுவாமிகள் – சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் – திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் – திருநாவலூர்
மாணிக்கவாசகர் – திருவாதவூர்

19-. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?

திருஞான சம்பந்த சுவாமிகள் – 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் – 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் – 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் – 32 ஆண்டுகள்

20. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?

சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

21. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?

அறுபத்து மூவர்.

22. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?

சாத்திரத்தில் தோத்திரம் – போற்றிப் ப·றொடை
தோத்திரத்தில் சாத்திரம் – திருமந்திரம்

23. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?]

பரஞ்சோதி முனிகள்

24-. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?

. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். ‘துகளறுபோதம்’ என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

25. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?

திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

26. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?

1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப·து

27. சித்தாந்த அட்டகம் – விளக்குக

பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப·றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

28. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

வாகீச முனிவர்

29. வேதங்கள் – குறிப்பு தருக.

வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

30. ஆகமங்கள் – குறிப்பு தருக.

ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

31. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

31. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?

திருமந்திரம்
“கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே”

32. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?

1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)

இன்னும் பல.

33-. சற்காரிய வாதம் – சிறுகுறிப்பு தருக.

‘உள்ளது அழியாது, இல்லது தோன்றாது’ என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

34. அளவை – குறிப்பு தருக.

நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை – (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை – (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை – (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

35. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?

1. இறைவன் – பதி
2. உயிர் – பசு
3. மலம் – பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
“பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே”

36. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?

இறைவன் – தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் – அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் – அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

37. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?

பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.

பொது இயல்பு

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை

சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகளின்

சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை – 1

அப்பர் தேவாரத்தில்

இலக்கியப் பண்புகள்

செஞ்சொற்கொண்டல்

வித்துவான் சொ. சிங்காரவேலன் எம்.ஏ.,

தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி முதல்வர்

கலைநோக்கு:

உலகின் அழகைக் கண்டு வியந்து போற்றும் இயல்பு நம்மி டம் இல்லை;  துன்பங்களைக் கண்டு நொந்து கவலைப்படும் இயல்பே நம்மிடம் கால்கொண்டிருக்கின்றது.  ஆனால் அழகு கூத்தாடும் இயற்கைச் செல்வத்தை அறிந்து, உணர்ந்து பாராட்டிசைக்கும் பண்பு பாவலனிடத்தேயே உள்ளது.

கவிஞன் உலகின் அழகுக் கூத்தைத் தன் சொற்களாற் காவிய மாக்குகின்றான். சொல்லோவியமாக்கி மகிழ்கின்றான்.  இதற்குக் காரணம் என்ன?  கவிஞன் பெற்றிருக்கும் கவிதைக்கண் – கலைநோக் குத்தான் இதன் காரணமாகும்.

நம் பார்வை மேம்போக்காக நின்று விடுகின்றது.  கவிஞன் அல்லது கலைஞன் பார்வை ஊடுருவிப் பாய்கின்றது.  நம் நோக்கு புறத்தோற்றத்திலேயே நின்று வலியிழந்து விடுகின்றது.  கவிஞன் அல்லது கலைஞன் நோக்கு அகத்தோற்றத்தில் ஆழ்ந்து அச்சிறப்பியல்புகளால் வலுப்பெற்று விடுகின்றது.  இதனாலேயே பாட்டு, கவிஞனின் உயர் கருவியாகின்றது.

மற்றவர்க்குப் பாட்டை நுகர இயலுகின்றதே தவிர புனையும் ஆற்றல் இல்லை.  இந்த நுட்பம் சிந்தித்தால் தான் விளங்குவதாகும்.  இந்த நுட்பம் இயற்கையின் அழகுக் கூத்தை மெய்ம்மறந்து சுவைத்துக் களிவெறி கொள்ளும் கலைஞர்களுக்குத் தனிச்சிறப்பாக உள்ளது.

கவிதையநுபவம் :

அழகை மட்டுமின்றி உலகத் துயரங்களையும் கவிஞன் காணாமல் இல்லை.  அவற்றையும் படம் பிடித்துக்காட்ட அவன் தவற வில்லை.  ஆனால் கவிதையில் அத்துன்பங்களை மிகவும் விரும்புகின் றோம் நாம்.  உலகியலில் துன்பங்களை வெறுத்தொதுக்கும் நம்மைக் கலைத் துறை அவலங்கள் கவர்ந்து விடுகின்றன.  கலைத்துறைத் துன்பங்களைக் கண்டு கண்ணீர் விடுகின்றோம். ஆனால் இக்கண் ணீரை நாம் விரும்புகின்றோம்.

நுட்பமான உணர்ச்சிகளைத் தூண்டும் சொல்லாட்சி, கற்பனை அமைப்புடைய கவிதைகளை உருவாக்கி நம்மைத் தன்வயப்படுத்தி விடுகின்றான் கவிஞன்.  இவ்வாறு நம் உணர்ச்சியோடு ஒன்றுபடும் கவிதைச் செல்வத்தை நாம் வாழ்வில் இடையறாது சுவைத்தல் வேண்டும்.

உயர்ந்த கவிஞர்கள் கைம்மாறு கருதியா கவிதைகளை யாத்துள்ளார்கள்?  தம் அநுபவத்தை எடுத்து கைம்மாறு வேண்டாக் கார்மழைபோல் பொழிந்து உள்ளார்கள்.  சுவைக்கும் உள்ளத்துடன் – இலக்கியப் பசியுடன் – அவர்களை அணுகுதல் ஒன்றே நாம் செய்ய வேண்டுவது.  அணுகி விட்டால் நம்மை அவர்கள் ஆட்கொண்டு விடுகிறார்கள்.  வேறு உலகுக்கு – கவியுலகுக்கு அழைத்துச் சென்று பலப்பல காட்சிகளைக் காட்டிக் களிப்பிக்கின்றார்கள்.

உலகியல் மறந்து அவ்வின்பக்காட்சியில், காலம், இடம் முதலிய வேற்றுமைகளை யிழந்து கிடக்கின்றோம் நாம்.  ஆம், கவிதை அநுபவம் இதுவேயாகும்.

1″கவிஞனுடைய கண், விண்ணுக்கும் மண்ணுக்கும், மண் ணுக்கும் விண்ணுக்குமாகச் சுழல்கின்றது.  சுழன்று நோக்கிக் கற்பனை வடிவங்களைப் படைக்கின்றது. அவ்விழுமியோனுடைய எழுதுகோ லால் அறியப்படாத பொருள்கள் வடிவம் பெறுவதுடன் உயிர்த் தன்மையும் எய்துகின்றன” என்று ஆங்கில நாடகப் பெருங்கவிஞராகிய சேக்ஸ்பியர் கூறும் பகுதி இங்கு ஒப்பிட்டு மகிழத்தக்கது.

அருட்பாடல்களின் ஆற்றல்:

இத்தகு கவிஞர்களின் உறவு உள்ளத்தைத் திருத்தும் உயர்வு உடையது.  உலகியற் றுன்பங்களினின்று உயர்ந்து உயிர்ப் பறவையை மேலே மேலே பறக்குமாறு செய்து எங்கும் – என்றும் இன்பமாய பெரும் பேற்றிற்கு உய்ப்பது.

அதிலும் திருநாவுக்கரசு சுவாமிகளைப் போன்ற அருட் புல வர்கள் பாடல்கள் என்றால் கூறவா வேண்டும்!  அருளே வடிவாகிய இறைவனை அகமுருகப்பாடி மகிழும் அருள் ஆசிரியர்கள் அவர்கள்.

அவர்களது அருங்கவிதைகள் பக்தியை விளைக்கும் பண்பு டைய பாடல்கள்;  இசை தழுவிய எண்ணக் குவியல்கள், பண் கலந்த பாடல் தொகுப்புக்கள்.  இறைவனுடைய கருவியாக நின்று தாம் இயங்குகின்றோம் என்ற எண்ண அழுத்தம் உடைய அவ்வருட் செல்வர்களின் உணர்ச்சிப் பிழம்புகளாகிய கவிதைகள் நம் வாழ்வுக்கு நெறி காட்டும் வான்புகழ் கலங்கரை விளக்குகள் என்றே கூறலாம்.

அவர்கள் தம் வாழ்வில் என்ன கண்டார்கள், தம் வாழ்வில் பட்டறிந்த உண்மைகளால் என்ன உணர்வு பெற்றார்கள்,  அவ்வுணர் வினின்றும் அவர்கள் தெளிந்ததென்ன, நம்மனோர்க்கு அத்தெளிவி னால் அவர்கள் உரைக்கும் செய்திகள் யாவை என்பதற்கு அவர்களது இலக்கியமே சான்று பகரும்.  இவையனைத்தையும் காட்டுவதே இலக் கியப் பண்பு என்பர்.1

அருட்செல்வர்:

திருநாவுக்கரசு சுவாமிகள் சிறந்த தோத்திரப்பாக்களை அருளிய ஞானாசிரியர்;  அவ்வருட் செல்வரை இத்தகு இலக்கியப் பண்புகள் கனிந்த பனுவல்களை – பக்தி உணர்ச்சிப் பாடல்களை யாத்த ஓர் அருட்புலவராகவும் காணலாம்.  அவ்வருட் புலவருடைய பாக் களில் காணப்படும் இலக்கிய நலங்களைக் கண்டு, அத்தெய்வக் கவிஞரது பாக்களில் புலனாகும் அவருடைய திருவுள்ளத்தை அறிந்து, தெளிவுறுத்துவதே இச்சிற்றாராய்ச்சியின் நோக்கமாகும்.

பழுத்த அநுபவம் உடைய இப்பெரியார் பழுத்த தமிழ்ப் புலமை எய்தியிருந்த பண்பட்ட பாவலரும் ஆவர்.  ஆதலின் அவ்வா ராய்ச்சி இவ்வருட் புலவருடைய இனிய திருவாக்குகளை அடியாகக் கொண்டே இயங்குவதாகும்.

முருகியல் அமுதம்:

இலக்கியம் என்பது சொல், பொருள் ஆகிய அடிப்படையில் நயம் தோன்ற – கற்பனை விளங்க -உணர்த்தும் திறம் ஒளிர ஆசிரி யனுடைய அநுபவ வெளியீடாக இருப்பது.

ஆதலினாலேயே, ஆசிரியனுடைய அநுபவ இன்பத்தை இலக்கியத்தில் நாமும் அநுபவித்தின்புற முடிகின்றது.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருட் புலவராக விளங்கிய நல்லா சிரியராதலின் அவருடைய கனிந்த உளத்தின் முருகியல் அமுதம் தமிழ்க் கவிதையாக வெளிவந்தது.  அப்பெருமானாரின் கவிதைகள் கல்மனத்தையும் கசிந்துருக்கும் திறன் உடையவை.  உறுதியான சொற்களால் இயன்றவை.  பொருட்சிறப்பு பொதுளிய அமைப்பு உடையவை.

அப்பர் அருளுருவம்:

இறைவன் திருவடிகளிலேயே பதித்த நெஞ்சுடைய இப்பெரு மானுடைய அருள் பழுத்த திருக்கோலத்தைச் சேக்கிழார் பின்வருமாறு சொல்லோவியமாக்கியுள்ளார்.

தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்

நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்துருகிப்

பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல்

மேயசெவ் வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே

– தி.12 திருநாவு. புரா.140

     இறைவன் `பொருள்சேர் புகழ்’ விரிக்கும் செந்தமிழ் அமுதத் திருப்பாடலை ஓதிக் கொண்டேயிருக்கும் ஒட்பம் தோன்றப் `பதிகச் செஞ்சொல் மேய செவ்வாய்’ என்றருளிய திறம் இனிது உணரத்தக்கது.

தொடையறாச் செவ்வாய்:

சிவஞான சுவாமிகளும் அப்பரடிகள் அழகுருவத்தைத் தமிழாற் சிறப்பித்துள்ளனர்.  அதனுள் `ஞானப்பாடல் தொடையறாச் செவ்வாய்’ என்று இப்பெருமானாருடைய பாவன்மை தோன்றப் பாடியருளியுள்ளனர்.  அவ்வருந் தமிழ்ப்பாடல் பின்வருவதாகும்.

இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும்

உழவா ரத்திண்

படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே

பதித்த நெஞ்சும்

நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன்

ஞானப் பாடல்

தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும்

    துதித்து வாழ்வாம்.    (காஞ்சிப்புராணம். பா.13)

திருவாரூர்ப் புராணமுடையார்,

“சாலமிகு பாவமுது வேனில் வெம்மைத் தழலாற

ஆகமநூற் றருமஞ்சான்ற

சீலநிறை சைவநெறி நிழல்பரப்பும் திருநாவுக்கரசு”

என்று புகழ்தல் இங்கு ஒப்பிட்டுணர்தற்குரியது.

“தேவரசு மனமகிழத் திருப்பதிகம் இசைத்தமிழிற்

சிறக்கப்பாடும் நாவரசு”

என்று புகழ்வர் சிவராத்திரி புராண ஆசிரியர்.

“மதுர மாந்திருத் தாண்டகச் செந்தமிழ்வகுத்த

சதுரன் நாவினுக் கரையன்”

என்று சிவரகசியம் பாடும்.

இவ்வாறு புகழப்பெறும் சிறப்பு உடைய அப்பரடிகள் அமுதத் தமிழ்வாக்கும், அப்பெருமானார் வகுத்தருளிய தமிழ்மரபும், இலக்கிய நுட்பங்களும் பிற மாண்புகளும் கருதிய சேக்கிழார் இவரைத் `தமிழ் மொழித் தலைவர்’ (தி.12 திருஞா.புரா. 598) என்றே கூறிப் போற்றுவர்.

`இன்தமிழ்க்கு மன்னான வாகீசத் திருமுனி’ (தி.12 திருநா. புரா. 147) `உடையவரசு உலகேத்தும் உழவாரப் படையாளி’ (தி.12 தடுத்தாட்கொண்ட புரா.83) `வாக்கின் பெருவிறல் மன்னர்’ (தி.12 திருஞா. புரா.269) என்றெல்லாம் சேக்கிழார் பாடும் பகுதிகளைக் காணலாம்.

பாவலர் – அப்பர்:

திருநாவுக்கரசு சுவாமிகளின் தேவாரப் பாக்களில் பெரிதும் ஈடுபட்ட பிற்காலப் பெரியார் ஒருவர் பாடும் பகுதியும் இங்குச் சிந்திக்க இனிக்கும்.  தண்ணிய தமிழ்க் கவிதைகளை சிவபிரான் திருவைந்தெழுத்துத் திருப்புகழோடு குழைத்துப் பாடிக் கடலில் மிதந்த தாண்டக வேந்தருடைய அருளாற்றல் அப்பெரியார்க்கு எண்ண எண்ண இன்பமளிக்கின்றது.  கல்லும் உருகும் கவிபாடிய அப்ப ரடிகளைப் `பாவலர்’ என்றே அழைக்கின்றார் அவர்.

“செற்றார் புரம்எரி செய்தவில் வீரன் திருப்பெயரே

பற்றா மறிவெண் டிரைக்கடல் நீந்திய பாவலனே”

ஆம்;  சிவப்பிரகாச சுவாமிகளுடைய புகழுரை இது.

http://www.thevaaram.org/thirumurai_1/ani/06aaraaichi11.htm 

சைவசித்தாந்தம்-கற்றதும் பெற்றதும்-பாகம் 1

knowing our roots ……….Please visit here.

சைவ சித்தாந்த நூல்கள் /மெய்கண்ட சாத்திரம் – VI

திருக்களிற்றுப்படியார் & திருவுந்தியார் (ஆசிரியர் : உய்யவந்ததேவ நாயனார்) PLEASE VISIT HERE.

சைவ சித்தாந்த நூல்கள் – சங்கற்ப நிராகரணம் PLEASE VISIT HERE.

சைவ சித்தாந்த சாத்திரங்கள் – I : இருபா இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார் ) & உண்மை விளக்கம் (ஆசிரியர் : திருவதிகை மனவாசகங் கடந்தார் ) Please visit here.

உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன் PLEASE VISIT HERE.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்  திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் “பிரபந்தத்திரட்டு” PLEASE VISIT HERE.

உறையூர் தே.பெரியசாமி பிள்ளை அருளிய ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை. PLEASE VISIT HERE.

இராமலிங்க அடிகள் – வள்ளலார் PLEASE VISIT HERE.

கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்  PLEASE VISIT HERE.

“சைவ சித்தாந்தம்” வகையில் உள்ள கட்டுரைகள் PLEASE VISIT HERE.

சைவ சித்தாந்தம் பரப்பிய முன்னோடியான சேர் முத்து குமாரசுவாமி ….. PLEASE VISIT HERE.

சைவ சித்தாந்த நூல்கள்… PLEASE VISIT HEREHERE AND HERE.

சிவலிங்கங்களின் வகைகள் ….. PLEASE VISIT HERE.

TAMIL SHAIVITE LITERATURE PLEASE VISIT HERE.

 

shiva_nandi_hindu_sacred_cow

4 responses to “சைவ சித்தாந்த நூல்கள்

 1. நமச்சிவாய
  சிவனடியார் அகநிலை இலக்கணம்
  1. சிவனுக்கு யான் அடியார் என்று எண்ணி எண்ணி மகிழ்பவன் சிவனடியார்.
  2. தனக்கு உகந்ததை சிவனுக்கு படைத்து மகிழ்பவன் சிவனடியார்.
  3. சிவனுக்கு உகந்ததை தானும் உகந்து மகிழ்பவன் சிவனடியார்.
  4. அண்டசராசரத்தை படைத்து அதில் இ
  ன்புற வாழ, என்னையும் படைத்தான் என்பதை இன்புறும் போதெல்லாம் மறவாது நினைப்பவன் சிவனடியார்.
  5. சிவபெருமான் மட்டுமே தனக்கு வேண்டியதை கொடுக்க வல்லவன் என்பதை உணர்ந்து வாழ்பவன் சிவனடியார்.
  6. சிவனிடம் தான் பெற்றதை பிறருக்கு கொடுத்து மகிழ்பவன் சிவனடியார்.
  7. பிறருக்கு தான் கொடுத்ததை, சிவன் கொடுத்ததே என்று எண்ணி அவரிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என எதிர்பாராது இருப்பவன் சிவனடியார்.
  8. துன்பங்களும், நோய்களும் தன்னை சூழ்ந்த வினைகளை போக்க வந்தவை என்று உணர்ந்து அனுபவித்து வினைகளை கழற்ற வல்லவன் சிவனடியார்.
  9. தனக்கு துன்பம் தரும் காரணிகள் யாவும், பிறரால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தன்னாலே வரவழைக்கப்பட்டது என்று உணர்பவன் சிவனடியார்.
  10. தான் இன்புற தடைஏதும் விதிக்காதவன் சிவன் என நம்புபவன் சிவனடியார்.
  11. இன்புறலும், துன்புறலும் தன் ஆன்மாவை சிவனடிக்கு இழுத்து சொல்லும் இரட்டை மாடுகள் என உணர்ந்து ஒவ்வொரு அனுபவத்திலும் தன் வினை கழன்று போவதை அறிந்து நொடிக்கு நொடி அதிகரிக்கும் ஆனந்தத்தொடு வாழ்பவன் சிவனடியார்.
  12. தானே சிவமாக சிவானந்த பேரின்பத்தில் மூழ்கி இருந்தாலும் சிவனொருவன் மட்டுமே எல்லாம் வல்லவன் என்பதை மறவாது இருப்பவன் சிவனடியார்.
  13. தன்னால் ஆக வேண்டியது என சிவனார் பணித்த தன் பிரபஞ்ச கடன் மட்டுமே தன்னாலாகும் என உணர்ந்து நடப்பவன் சிவனடியார்.
  14. சிவனை நாட, தடை ஏதும் சொல்லாதிருப்பவன் சிவனடியார்.
  15. சிவனால் ஆகும் பிரபஞ்ச செயல்களை பார்த்து, ரசித்து மகிழ்பவன் சிவனடியார்.
  16. தனக்கென ஒரு பிரபஞ்ச கடனை தந்து, தன் பணியில் என்னையும் இணைத்துக் கொண்டானே அந்த சிவன் என எண்ணி அளித்த பிறவியை வியந்து போற்றி வாழ்பவன் சிவனடியார்

  –தம்பிரான்தோழர் கபிலனார் ஐயா அவர்கள்

 2. சிவஞானபோதம் – 9
  முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
  உயிருக்குப் பசுஞானம், பாசஞானம் என்ற இருவகை அறிவு உண்டு. வேறு துணையில்லாமல் அறிய முடியாத குறைபாடு உடைய அறிவு பசுஞானம் எனப்படும். உயிருக்குத் துணைசெய்யும் கருவிகள், நூல்கள் முதலியவற்றால் உண்டாகும் அறிவு பாசஞானம் எனப்படும்.
  இவ்விரண்டு அறிவினாலும் பதியாகிய இறைவனை அறிய முடியாது. இறைவனுடைய திருவடி ஞானத்தால் (பதிஞானத்தால்) உயிர் தன்னுடைய அறிவில் இறைவனை ஆராய்ந்து அறிய முடியும்.
  அத்திருவடி ஞானத்தால் அறிவதோடு பாசக் கூட்டத்தைக் கானல் நீர்மேல் பொய்யாகத் தோன்றி நீங்குவது என்று அறிய வேண்டும்.
  அவ்வாறு அறிந்து பாசக்கூட்டத்தை விட்டு உயிர் நீங்கவே பதிஞானமாகிய திருவடிஞானம் பிறவித் துன்பமாகிய வெப்பத்திற்குக் குளிர்ந்த நிழலாக வெளிப்பட்டுத் தோன்றும். அம்முறையில் திருவடி ஞானத்தால் இறைவனைக் கண்ட காட்சி நிலையாக இருக்கும் பொருட்டுத் திருவஞ்செழுத்தை முறையறிந்து கணிக்க (செபிக்க) வேண்டும்.
  இறைவனைப் பதிஞானத்தால் மட்டும் அறிய முடியும் என்று ஏன் கூற வேண்டும்? உயிரிடத்தில் உள்ள குற்றம் நீங்கினால் நல்ல ஞானம் உண்டாகும். அந்த நல்ல ஞானம் பதிஞானத்தோடு ஒத்திருக்கும். அந்த ஞானத்தால் பதியைக் காணலாமே என்று சிலர் தடை எழுப்புவர்.
  உடல் காணக்கூடிய ஒன்று. அவ்வாறு காணக்கூடிய உடலில் உயிராகிய நான் யார்? நாடியோ? நரம்போ? சீயோ? கோழையோ? இந்திரியங்களோ? அந்தக்கரணங்களோ? இவற்றுள் உயிர் என்று எதனைத் தேடிக் காண்பது?
  இவ்வாறு ஆராய்ந்து காணமுடியவில்லை என்ற ஆராய்ச்சி அறிவில் நான் என்பதனை அறிவிக்கின்ற அறிவுப் பொருள் அவ்வாராய்ச்சியின் வேறாக உண்டென்று ஆராய்ந்து பார்த்தால் அறியலாம்.
  அவ்வாறு காணும்போது இறைவன் திருவருள் நன்றாக விளங்கித் தோன்றும். அத்திருவருளாகிய திருவடி ஞானத்தால் இறைவனையும் அறிந்து இறைவனை விட்டு நீங்காத உயிரையும் அறியலாம்.
  அவ்வாறு இறைவனுடைய திருவருளால் இறைவனையும், இறைவனை விட்டு நீங்காத உயிரையும் அறிபவரே உயர்ந்த ஞானியர் ஆவர்.
  நாடி, நரம்பு முதலியவற்றுள் நான் யார் என்று ஆராய்ந்து அறிந்த உயிரே தன்னையும், இறைவனையும் தெளிந்து அறியும் என்பதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பதி ஞானத்தால் மட்டும் அறிய முடியும் என்பதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று சிலர் தடை எழுப்புவர்.
  கண் பொருளைக் காணும்போது தானே காண மாட்டாது, உயிர் காட்டவே கண் காணும். பொருளைக் காணுகின்ற கண் தன்னியல்பை அறியாது. தன்னைச் செலுத்துகின்ற உயிரையும் அறியாது. அதுபோல நாடி, நரம்பு முதலியவற்றில் நான் யார் என ஆராய்ந்து அறியும் உயிர், தானே ஆராய்ந்து அறியாது. இறைவன் மறைந்து நின்று அறிவிக்க அறியும்.
  கண்போலத் தன்னியல்பையும் அறிவதில்லை. தன்னை அறிவித்து நிற்கின்ற இறைவனையும் அறிவதில்லை. அவ்வாறு இருந்தாலும் கண் சடமாதலால் எக்காலத்தும் அறியும் தன்மை இல்லை.
  உயிர் கண்ணைப்போல் சடமின்றி அறிவுப்பொருள் ஆதலால், நான் யார் என்று ஆராய்ந்து அறிகின்ற அறிவில் இறைவன் உடனாய் நின்று, உயிரை ஆராய்ந்து அறியுமாறு செய்து தெரியாமல் கள்வனாய் இருப்பான். அவ்வாறு நிற்கும் இறைவனை அவனருளால் ஆராய்ந்து அறிய வேண்டும்.
  ‘கள்வன்தான் உள்ளத்தில் காண்’ என்று மெய்கண்டார் இறைவனைக் கள்வன் என்று குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியங்களில் தலைவி தலைவனைக் கள்வன் என்றும், தலைவன் தலைவியைக் கள்வி என்றும் கூறும் மரபு உண்டு. திருஞானசம்பந்தர் முதன்முதலில் உள்ளங்கவர் கள்வன் என்று குறிப்பிட்டார். திருவுந்தியாரிலும் கள்ளர் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. இறைவனைக் கள்வன் என்று கூறியதற்குச் சிவஞானமுனிவர் மிகச்சிறந்த விளக்கம் தந்துள்ளார்.
  ‘கள்வன்’ என்றது கண்ணுக்கு உயிர் மறைந்து நின்றே காட்டுவதாகலான் அது தன்னையும், உயிரையும் அறியமாட்டாது. அதுபோல முதல்வன் இதுகாறும் மறைந்து நின்றே உணர்த்துதலின் உயிர் தன்னையும் முதல்வனையும் அறிய மாட்டாதாயிற்று என்பது அவர் தரும் விளக்கம்.
  சத்துவம், இராசதம், தாமசம் ஆகியவை மாயையின் குணங்களாகும். இறைவன் இம்முக்குணம் இல்லாதவன். ஆனால் தனக்கென உரிய எண்குணங்களை உடையவன்.
  இறைவன் மலம் அற்றவன். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன். நிலைத்த இன்ப வடிவினன். உயிர்களையும் கடந்து மேலாக நிற்பவன்.
  இத்தகைய ஒப்பற்ற இறைவனைப் பூதங்களால் ஆன உலகம், உலகப் பொருள்கள் ஆகியவற்றை அசத்து என்று கண்டு நீக்கியபோது சுட்டறிவில் காண இயலாமையால் சூனியம் என்று கூற முடியாது. உயிர் அறிவில் நீங்காது நிலை பெற்றிருப்பான்.
  உயிரால் சுட்டி அறியப் பெறுகின்ற உலகப் பொருள்களை ஒவ்வொரு பொருளாகக் கண்டு இது நிலையுடையது அன்று, இது நிலையுடையது அன்று என்று எல்லாப் பொருள்களையும் நீக்கினபோது, அவ்வாறு நீக்கிய தன் அறிவினிடத்து அறிவாய் விளங்கும் சிவத்தை அறிந்து அனுபவிக்க வேண்டும்.
  சிவத்தை அகத்தே பாவிப்பது சிவோகம்பாவனை எனப்படும். (சிவம் + அகம் + பாவனை = சிவோகம்பாவனை). அவ்வாறு பாவிக்கும்போது விளங்கித்தோன்றும் இறைவன் உயிரோடு அனாதி காலந்தொட்டுத் தொடர்ந்து வருகின்ற ஆணவ ஆற்றலை நீங்குமாறு செய்வான்.
  பாம்புக் கடியுண்ட ஒருவன் பாம்பின் விடத்தால் துன்புறுவான். கருட மந்திரத்தியானம் தெரிந்த ஒருவன் தெய்வத்தன்மை பொருந்திய மந்திர கருடனைத் தியானிக்க விடம் நீங்கும். அதுபோல் உயிரின் ஆணவ மலத்தின் ஆற்றலை சிவோகம்பாவனையால் நீக்கலாம்.
  உலகப் பொருள்களின் பற்றுக்களை விட்டுத் திருவருளையே பற்றிநின்ற உயிருக்கு, அத்திருவருளால் சிவத்தைக் காணும் ஞானம் உண்டாகும். எனினும் சில சமயங்களில் பழைய பயிற்சியினால் மீண்டும் உலகத்தை நோக்கும் ஆசை உண்டாகும். அந்நிலையை நீக்கிக் கொள்வதற்குத் திருவைந்தெழுத்தைக் கணித்தல் வேண்டும்.
  பதிஞானம் பெறுவதற்காகத் திருவைந்தெழுத்தை ஓதுதல் முதல் நிலை. பதிஞானத்தைப் பெற்ற பின்னர் மலவாசனை தாக்காமல் நீங்குதற்பொருட்டு திருவைந்தெழுத்தை ஓதுதல் இரண்டாம் நிலை.
  திருவைந்தெழுத்தை உச்சரிக்கும் முறை மானதம் (மௌனம்), மந்தம் (மெதுவாக ஓதுதல்), உரை (உரக்கச் சொல்லுதல்) என மூவகைப்படும். இங்கு கூறப்பெறும் திருவைந்தெழுத்தைக் கணித்தல் இம்மூன்று முறையும் அன்று. அறிவினுள் கணிக்கப்பெறும் (சுத்த மானதம்) நிலையே ஆகும். சிவோகம்பாவனையில் அழுந்தி நின்று திருவைந்தெழுத்துப் பொருளில் தன் அறிவை நிறுத்தலாகும்.
  வேம்பின் கசப்பைத் தின்ற புழு அதனை விடுத்துக் கரும்பின் இனிய சுவையை நுகரும். கரும்பின் இனிய சுவையை நுகர்ந்தாலும் பயிற்சி வசத்தால் வேம்பின் கசப்பையே மீண்டும் தேடிச்செல்லும். அதுபோலச் சாதகங்களைச் செய்து நிறைவெய்திய உயிருக்கு அச்சாதகங்களால் சிவஞானம் விளங்கிய போதும் முன் பற்றியிருந்த ஐம்புல நுகர்ச்சியைப் பயிற்சி வயத்தால் நாடிச்செல்லும். அத்தகைய வாசனா மலம் நீங்குதற்குத் திருவைந்தெழுத்தை முறையாகக் கணிக்க வேண்டும்.
  சிவ வழிபாட்டிற்குச் சிறந்த மந்திரம் திருவைந்தெழுத்தாகும். ஐந்தெழுத்து மந்திரம் உயிர்களின் பக்குவநிலைக்கேற்ப ஞானகுரு உபதேசம் செய்வார். ஐந்தெழுத்து மந்திரம் பல வகைப்படும்.
  1. நமச்சிவாய – பரு ஐந்தெழுத்து (தூல பஞ்சாட்சரம்) ஆகும். இறைவனின் மந்திரமாகவும், திருப்பெயராகவும், இறைவன் வடிவாகவும் திருமுறைகளில் அதிகம் பயின்று வரும். மெய்யெழுத்து (ச்) கணக்கிடப்பெறாது.
  2. சிவாயநம – நுண் ஐந்தெழுத்து (சூக்கும பஞ்சாட்சரம்) ஆகும். ஐந்தெழுத்தும் ஐந்து சொற்களாகும். அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி (சுந்தரர்) சி- சிவன், வா- திருவருட்சத்தி, ய- உயிர் (ஆன்மா), ந- மறைப்பு (திரோதானம்), ம- மலம், ஆணவம்.
  “சிவன் அருள் ஆவி திரோதம் மலம் ஐந்து
  அவன் எழுத்து அஞ்சின் அடைவாம்” – (உண்மை விளக்கம்).
  “நானே யோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்” -(மாணிக்கவாசகர்)
  “சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு
  அபாயம் ஒருநாளும் இல்லை” – (ஔவையார்)
  3. சிவயசிவ – அதிநுண் ஐந்தெழுத்து (அதி சூட்சும பஞ்சாட்சரம்) ஆகும். முத்தி பஞ்சாட்சரம், இருதலை மாணிக்கம் என்றும் வழங்கப்பெறும்.
  4. சிவசிவ- & காரண ஐந்தெழுத்து (காரண பஞ்சாட்சரம்) ஆகும்.
  “சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
  சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
  சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
  சிவசிவ என்னச் சிவகதி தானே” (திருமந்திரம்)
  5. சி – பேரெழுத்து (மகாகாரண பஞ்சாட்சரம்) ஆகும். எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது (திருமந்திரம்), பேரெழுத்து ஒன்று உடையானை (திருநாவுக்கரசர்)
  இவ்வாறு அல்லாமல் எழுத்து வகையால் ஐந்தெழுத்தைக் கணக்கிடுவதும் உண்டு. 1. ஓரெழுத்து- சி, 2. ஈரெழுத்து- சிவ, 3. மூன்றெழுத்து- சிவாய, 4. நான்கெழுத்து- சிவ சிவ, 5. ஐந்தெழுத்து- நமச்சிவாய, சிவாயநம, 6. ஆறெழுத்து- ஓம் நமச்சிவாய, 7. எட்டெழுத்து- ஓம் ஆம் ஔம் சிவாயநம.
  உயிர் சிவபெருமானுக்கு அடிமையாகும் முறையினை ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறையில் வைத்துக் காணவேண்டும்.
  இதயத்தைப் பூசைக்கு உரிய இடமாகவும், உந்தியை வேள்விக்குரிய இடமாகவும், புருவத்தின் நடுப்பகுதியைத் தியானத்திற்கு உரிய இடமாகவும் கருதி வழிபட வேண்டும்.
  புறத்தே பூசை செய்வது போல அகத்தாமரையில் சிவபெருமானைப் பூசிக்க வேண்டும். அவ்வாறு பூசிக்கும் போது ஐந்தெழுத்தால் அமைந்த சிவலிங்கத் திருமேனியைக் கொல்லாமை, ஐம்பொறியடக்கம், அருள்பொறை, ஞானம், தவம், அன்பு, வாய்மை ஆகிய எட்டுப் பூக்களைக் கொண்டு பூசிக்க வேண்டும்.
  “எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி
  மட்டலர் இடுவார் வினை மாயுமால்” (திருநாவுக்கரசர்)
  புருவ நடுவில் சிகரமாகிய பதிப்பொருளையும், யகரமாகிய உயிர்ப்பொருளையும், வகரமாகிய திருவருட் சத்தியையும் முறையாக அறிந்து, அம்முறையால் சிவமே உயிர் என்று சிவோகம்பாவனை செய்ய வேண்டும். அப்பாவனையில் இறைவன் விளங்கித் தோன்றுவான்.
  ஆகாயத்தில் இயங்குகின்ற ஒன்பது கோள்களில் இராகு, கேது ஆகியவை நிழற்கோள்கள் (சாயா கிரகங்கள்) ஆகும். இவ்விரு கோள்களும் நேரே அறியப்படுவதில்லை. கிரகண காலத்தில் சந்திரனிடத்திலும், சூரியனிடத்திலும் காணமுடியும்.
  பசுஞானமும், பாச ஞானமும் உயிர் அறிவிற்குப் புலப்படும். பதியாகிய இறைவனை வேறாகக் காணமுடியாது. கிரகண காலத்தில் இராகு, கேது ஆகியவற்றைக் கண்டதைப் போல் இதயத்தில் ஐந்து எழுத்துக்களை ஓதும் முறையால் இறைவனைக் காணலாம்.
  இத்தகைய சாதனைகளைச் செய்தால் விறகில் விளங்கித் தோன்றாத நெருப்பு தீக்கடைக்கோலை நட்டுக் கயிற்றால் கடைந்தபோது விறகில் வெளிப்பட்டுத் தோன்றுதல் போல, உயிரில் முன் விளங்கித் தோன்றாத இறைவன் தற்போது அறிவுக்கு அறிவாய் விளங்கித் தோன்றுவான்.
  தீயைச் சேர்ந்த இரும்பு வேறாக இல்லாமல் தன் இயல்பை இழந்து நெருப்பில் அடங்கி நிற்றலைப் போலச் சிவோகம்பாவனையில் உயிர்வேறு நில்லாது சிவனுக்கு அடிமையாய் அவனிடத்தில் அடங்கி நிற்கும். அண்டத்தில் உள்ள முப்பத்தாறு தத்துவங்களும் பிண்டமாகிய உடம்பிலும் இருக்கும். அவை உயிரின் உள்ளத்தாமரை வடிவில் இருக்கும். உள்ளத்தாமரையில் இறைவனைக் கண்டு ஐந்தெழுத்தால் வழிபடுதல் வேண்டும்.
  “ஊனக்கண் பாசம் உணராப் பதியை
  ஞானக் கண்ணினில் சிந்தை நாடி;
  உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
  தண்நிழல் ஆம்பதி;விதி எண்ணும் அஞ்செழுத்தே”
  – (சிவஞானபோதம் & நூற்பா- 9)
  ஊனக்கண்- குறைந்த பசுஞானம், உராத்துனைத் தேர்த்து என- பரந்து விரைந்து செல்கின்ற கானல் நீரைப்போல, உரா- பரந்து, துனை- விரைவு, தேர் – பேய்த்தேர், கானல்நீர். ஒருவ- நீங்க.

 3. Very Very Good Work – No Word To Praise

 4. http://sagakalvi.blogspot.in/2014/07/pdf_25.html

  ஞான நூல்கள் – PDF
  மெய் ஞானம் என்றால் என்ன?
  இறைவன் திருவடி எங்கு உள்ளது?
  ஞானம் பெற வழி என்ன?
  வினை திரை எங்கு உள்ளது?
  வினை நம் உடலில் எங்கு உள்ளது?
  வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?
  ஏன் கண் திறந்து தவம் செய்ய வேண்டும்?
  சும்மா இரு – இந்த ஞான சாதனை எப்படி செய்வது?
  மனம் எங்கு உள்ளது?

  ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா எழுதிய ஞான நூற்களை படித்து தெளிவு பெறவும்

  திருஅருட்பாமாலை 3 — PDF
  திருஅருட்பாமாலை 2 — PDF
  திருவாசக மாலை — PDF
  திருஅருட்பாமாலை 1 — PDF
  ஞானக்கடல் பீர் முகமது — PDF
  மூவர் உணர்ந்த முக்கண் — PDF
  ஞானம் பெற விழி — PDF
  மந்திர மணிமாலை(திருமந்திரம்) — PDF
  கண்மணிமாலை — PDF
  அருள் மணிமாலை — PDF
  சாகாக்கல்வி – PDF
  வள்ளல் யார் – PDF
  உலக குரு – வள்ளலார் – PDF
  திருஅருட்பா நாலாஞ்சாறு
  சனாதன தர்மம்
  பரம பதம் – எட்டு எழுத்து மந்திரம் அ
  ஜோதி ஐக்கு அந்தாதி
  அகர உகர மாலை
  ஞான மணிமாலை
  ஆன்மநேய ஒருமைப்பாடு
  ஜீவகாருண்யம்
  ஸ்ரீ பகவதி அந்தாதி
  அஷ்டமணிமாலை
  திருஅருட்பா தேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s